'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 14, 2016
மோடி 'கேரள செவிலியர்களை காப்பாற்றினோம்' என்று சொன்னதும் பொய்!
நரேந்திர மோடி கேரள குழந்தை இறப்பு விகிதத்தை சோமாலியாவோடு ஒப்பிட்டு பேசி ஒட்டு மொத்த மக்களிடமிருந்தும் வாங்கிக் கட்டிக் கொண்டதை அறிவோம். இதற்கு பதிலளித்து பேசிய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு எழுதிய ட்விட்டில் ' "லிபியாவில் இருந்து கேரளா செவிலியர்களை மீட்டுக் கொண்டு வந்தது எங்களின் அரசு தானே'" என்ற பொருள்பட கேட்டிருந்தார். ஒரு இந்திய மாநில மக்களை காப்பாற்றும் பொறுப்பு ஒரு மத்திய அரசுக்கு உண்டு என்பதைக் கூட அறியாமல் ட்விட் செய்து உள்ளார்.
அப்படி அவர் சொன்ன செய்தியிலாவது உண்மையிருக்கிறதா என்றால் அதுவும் பொய். பிபிசிக்கு அளித்த பேட்டியில் அந்த செவிலியர்கள் கூறியிருப்பதாவது...
மீட்கப்பட்ட 29 செவிலியர்களில் புஷ்பா என்பவர் கூறுகிறார் 'அரசு தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களின் சொந்த முயற்சியாலும் லிபிய நாட்டவரான அப்துல் ஜப்பார் என்பவரின் உதவியாலும் நாங்கள் தாயகம் வந்தடைந்தோம்' என்கிறார்.
சிமி ஜோஸ் என்ற மற்றொரு நர்ஸ் கூறுகிறார் 'எங்கள் வீடுகளுக்கு மேலும் குண்டுகள் வந்து விழுந்தது. இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். 'எங்களால் என்ன செய்ய முடியும். சொந்த டிக்கெட் போட்டு ஊர் போய் சேருங்கள்' என்ற பதில்தான் கிடைத்தது. ஆனால் உள்ளூர்வாசியான லிபிய நாட்டவரான அப்துல் ஜப்பார் எங்களை காப்பாற்றினார். அவரது முயற்சியால்தான் நாங்கள் இங்கு நிற்கிறோம்' என்கிறார்.
கேரளா பிரசாரத்தில் மோடி 'நாங்கள் கேரள நர்ஸூகளை காப்பாற்றி அவர்களின் வீடுகளில் சேர்ப்பித்துள்ளோம்' என்று கூசாமல் பொய் கூறுகிறார். ஆனால் சம்பந்தப்பட்ட நர்ஸ்களோ தங்களின் சொந்த முயற்சியாலும் அப்துல் ஜப்பார் என்ற தனி மனிதராலும் காப்பாற்றப்பட்டு தற்போது வீடு வந்து சேர்ந்துள்ளோம்' என்கின்றனர்.
மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவரின் வாயிலிருந்தும் எந்த நேரமும் வருவது பொய்களே! பிறந்த தேதியாகட்டும், திருமண தகவலாகட்டும், படித்த படிப்பாகட்டும், ஆட்சியில் செய்த சாதனைகளாகட்டும் அனைத்திலும் இமாலய பொய்கள்.
வெட்கப்படுங்கள் இந்துத்வாவாதிகளே!
தகவல் உதவி
பிபிசி ஹிந்தி
12-05-2016
http://www.bbc.com/hindi/india/2016/05/160512_nurses_back_from_libya_hk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment