'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, May 22, 2016
யார் சொன்னது ஷக்கு பாய் அனாதை என்று?
யார் சொன்னது ஷக்கு பாய் அனாதை என்று?
மும்பையிலுள்ள குடிசை பகுதி தார்தோ. இங்கு பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த பகுதிக்கு ஷக்கு பாயும் அவரது கணவரும் 1962ல் வந்தனர். சுற்றியுள்ள முஸ்லிம்களிடம் அன்பாக பழகினர். அவர்கள் தரும் சிறு சிறு வேலைகளை செய்து தங்களின் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர். ஷக்கு பாய்க்கு தற்போது வயது 60. சென்ற செவ்வாய்க் கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மும்பை சித்தார்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் ஷக்கு பாய். ஆனால் மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். மருத்துவ மனையிலேயே இறந்து விட்டார். அனாதை பிணத்தை வாங்க ஒருவரும் முன் வரவில்லை.
ஆனால் அவர்களோடு பழகிய இஸ்லாமியர்கள் அவரது பிணத்தை வாங்கினர். ஜாஃபர் ஷா, முஸ்தஃபா கான், யூசுஃப், முஹம்மது யாகூப் மற்றும் சில நல்ல உள்ளங்கள் இணைந்து ஷக்கு பாயின் ஈமக் கிரியைகளை அவரது இந்து மத சடங்குகளோடு செய்தனர். அதன் பிறகு அந்த பிணத்தை சுடுகாட்டுக்கும் சுமந்து சென்றனர்.
'ஷக்கு பாயின் கணவர் 2002 ஆம் ஆண்டு இதே போல் இறந்து விட்டார். அப்போது குஜராத்தில் இந்து முஸ்லிம கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். அந்த நேரத்திலும் நாங்கள் அவரது உடலை அவரது மத சடங்குகளின் படி அடக்கம் செய்தோம்' என்கிறார் குடிசைவாசியான முஹம்மது யாகூப்.
ஷக்கு பாய் இந்து மதமாக இருந்தாலும் அவரும் ஆதமுடைய வழித் தோன்றல்தானே! மனித நேயத்தை செயலில் காட்டிய மும்பை இஸ்லாமியர் பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு பக்கம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்து கலவரத்தை தூண்டி வாக்குகளை அறுவடை செய்ய ஒரு கட்சி அல்லும் பகலும் பாடுபடுகிறது. நாங்கள் மதத்தால் பிரிந்திருந்தாலும் மனித நேயத்தால் தேசப் பற்றால் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று தங்களின் செயல்களால் நிரூபித்து வருகிறார்கள் மும்பை இஸ்லாமியர்.
தகவல் உதவி
MID-DAY.COM
21-05-2016
http://www.mid-day.com/articles/mumbai-muslim-neighbours-cremate-kinless-woman-in-hindu-rites/17256170?src=fb
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மும்பையில் பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாத செயல்கள் ஆயிரக்கணக்கான உயிா்களை பலிவாங்கியுள்ளது. கோடி ..... கோடிக்கணக்கில் ...... பொருட் நாசம் ஆகியுள்ளது.
விதிவிலக்குகள் விதியாகாது.
லண்டன் மேயா் சாதிக் கோவிலுக்கு சென்றது குறித்து தாங்கள் எழுதிய கருத்து இது
இஸ்லாமிய நம்பிக்கையை பொருத்த வரை ஒரு இறைவன் என்பதையும் பல கடவுள்கள் என்பதையும் ஒன்றாக்குவதை அனுமதிக்கவில்லை. கொள்கையில் முதலில் உறுதி வேண்டும். எனவே சாதிக் அவர்களின் நம்பிக்கை என்னவென்று தெரியவில்லை. அதனை இறைவனே அறிவான். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை இஸ்லாம் அங்கீகரிக்காது என்பதை மட்டும் சாதிக் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
குழப்பம் தங்களிடம் நிறைய உள்ளது.பகல் வேசம். அரபு அடிமை எப்படி இருப்பான் ? இப்படித்தான் சுவனப்பிாியன் போல்
Post a Comment