Followers

Tuesday, May 17, 2016

'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' - மும்பையில் புரட்சி





'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' - மும்பையில் புரட்சி

மும்பை குடிசை பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு கல்வியும் கொடுக்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. பினா ஷேத் லஷ்கரி என்ற இதன் உறுப்பினர் கூறுகிறார் 'மும்பை குடிசை பகுதிகளில் இவ்வாறு சுற்றித் திரியும் சிறுவர்கள் சிறுமிகளை கண்டெடுத்து இலவச கல்வி கொடுக்கிறோம். இந்த குடிசை பகுதியில் வாழ்ந்த ரஹ்முத்தீன் ஷேக் என்ற சிறுவனை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்துள்ளோம். அந்த குடிசை பகுதிக்கும் இவனது பெயரையே வைத்துள்ளோம். 'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' என்று கம்பீரமாக பெயர் பலகை மிளிர்கிறது. இதனை பார்த்த மற்ற சிறுவர்களும் 'எங்கள் பெயரை எப்போது போடுவீர்கள் என்று கேட்கின்றனர். 'ரஹ்முத்தீனைப் போல படித்தால் உங்கள் பெயரையும் தெருக்களுக்கு வைப்போம் என்று கூறினேன்" என்கிறார்.

21 வயதாகும் ரஹ்முத்தீன் ஷேக் கூறுகிறார் 'நான் எனது பள்ளிப் படிப்பை வறுமையினால் தொடரவில்லை. இந்த ஆசிரியர்கள் என்னை அரவணைத்து படிக்க வைத்தனர். குலாபா பள்ளியில் நேரிடையாக ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். தொடர்ந்து 10 ம் வகுப்பு வரை அனைத்து பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வானேன். தற்போது சில குழந்தைகளுக்கு விளையாட்டில் கோச்சாக பணி புரிகிறேன். கூடிய விரைவில் எனது கல்லூரி படிப்பையும் முடித்து விடுவேன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஐபிஎஸ் எழுதப் போகிறேன். நான் வாழ்ந்த இடத்துக்கு எனது பெயரையே வைத்துள்ளது பெருமையாக இருக்கிறது" என்கிறார்.

தேவி சௌஹான் ரோட், அனிதா ரஜோத் ரோட் என்று குடிசைவாசிகளின் பெயர்கள் ஆங்காங்கே அலங்கரிக்கின்றன. இது போன்ற நல்ல உள்ளங்களாக நாமும் மாறக் கூடாதா? எத்தனையோ செல்வந்தர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளனர். சேர்த்து வைத்த சொத்து பல இடங்களில் அவர்களுக்கு பயன்படுவதில்லை. வயதான காலத்தில் மகன் இவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறான். அவர்கள் குறைந்தது ஒரு ஏழை மாணவனை தத்தெடுத்து கல்வி செலவுகளை பகிர்ந்து கொண்டால் அந்த ஏழை மாணவனின் குடும்பம் முன்னுக்கு வரும் அல்லவா? இறந்த பின்னும் நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நன்மையான செயலுக்கு நமது அத்தியாவசிய செலவுகள் போக நாம் நமது செல்வத்தை பயன்படுத்தலாமே!

http://www.ndtv.com/mumbai-news/in-mumbai-streets-named-after-slum-children-1407297?fb

1 comment:

Dr.Anburaj said...


ஒரு நல்ல காாியம் நடைபெற்றால் அதைச் செய்தவன் முஸ்லீம்.இசுலாம் அதைத்தான் போதிக்கின்றது என்று புரண யோக்கியன் போல் எழுதும் சுவனப்பிாியன் இந்த பதிவில் சிறுவா் சிறுமியா்களை படித்து ஆளாக்கியவா்கள் எந்த மதத்தைச் சாா்ந்தவா்கள் என்று குறிப்பிடாததில் இருந்தே நல்ல காாியம் செய்தவா்கள் இந்துக்கள் என்பது தெளிவாகப்புாிகின்றது.முஸ்லீம்கள் செய்தால் தொண்டு தியாகம் இசுலாம் என்று பீற்றி .. பீற்றி பீற்றிக் கொள்ளும் சுவனப்பிாியன் இந்துக்கள் ஒரு முஸ்லீம் சிறுவனை ஆளாக்கி விட்டால் அதைச் செய்தவா்கள் இந்துக்கள் என்று எழுதவில்லையே? ஏன் ?