

Indian Muslim Relief and Charities IMRC இந்த அமைப்பானது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் இந்தியாவின் பல கிராமங்கள் இன்று தண்ணீர் தேவையில் தன்னிறைவை கண்டுள்ளன.
மஹாராஷ்ட்ராவில் உள்ள மராத்வாடா, நேன்டட், ஹிங்கோலி, பர்பானி போன்ற மாவட்டங்களில் சுமார் ஐம்பது கைப்பம்புகளை இந்த தன்னார்வ அமைப்பு இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளது. நேன்டட் மாவட்டத்தில் உள்ள மனதா கிராமத்தைச் சேர்ந்த சுனில் கூறுகிறார்....
'ஒரு பக்கெட் தண்ணீர் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை தினமும் வாங்கி வந்தேன். எனது வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருக்கே செலவழித்து வந்தேன். தற்போது அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்கள் எங்கள் கிராமத்தில் இலவசமாக கைப் பம்புகளும் போர் வெல்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர். தற்போது எனது வருமானத்தில் பெரும் பகுதி மிச்சமாகிறது. வசதியுள்ளவர்கள் இது போன்று உதவி ஏழை விவசாயிகளின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்' என்கிறார்.
ஐஎம்ஆர்சி யின் தன்னார்வ தொண்டு ஊழியர் யூனுஸ் அஹமது கூறுகிறார்....
'மராத்வாடா மாவட்டத்தில் உள்ள மக்கள் பல மைல்கள் தண்ணீருக்காக அலைகிறார்கள். இது போன்ற கொடுமையை வேறு எங்கும் நான் பார்க்கவில்லை. அரசு தரும் ட்ரில் மெஷின் 200 அடி வரை தான் போகும். 200 அடியில் தண்ணீர் வரவில்லை என்றால் வேறு முயற்சி எடுக்காமல் விட்டு விடுகிறது அரசு. ஆனால் நாங்கள் 500 லிருந்து 700 அடி வரை சக்தி வாய்ந்த மெஷின்கள் கொண்டு போர்களை அமைக்கிறோம். கைப் பம்புகளை அமைத்துக் கொடுக்கிறோம். 2014 லிருந்து இது வரை 400 போர்களை அமைத்துக் கொடுத்துள்ளோம் இந்தியா முழுக்க இலவசமாக!'
'2013ல் 54 கிணறுகளையும், 40 கைப்பம்புகளையும் அமைத்துக் கொடுத்துள்ளோம். 2014 ல் 57 போர் வெல்களையும் 75 கைப்பம்புகளையும் இந்திய மக்களுக்கு இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளோம். மத்திய பிரதேசத்தில் சத்ருகேடி, பர்பானி, பபுல்காவ், பாலாபுரி, போன்ற கிராமங்களில் போர் வெல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளோம். கூடிய விரைவில் அந்த பணிகள் முடிக்கப்படும்.' என்கிறார்.
இந்த அமைப்பு கையிலெடுத்திருக்கும் மற்ற மாநிலங்களையும் பார்போம்.
In Bihar, the areas covered are Harnabuzrug, Chakdarab, Fatimachak, Raypura, Parsotipur, Arajiparsotipur, Babura, Aabdachak, Nanduchak, Dhayharna
In Andhra Pradesh, the areas covered are, Pileru, Kalkiri, Rajuvaripalli, Kalluru, Gadi, Ellankivaripalli, Sodum, Madalcoloni , Muhammadiyulapalli, Kuppam.
In Telangana, the areas covered are, Syednagar, Qasimnagar, Venkatadripet, Uppugal, Thatikonda, Khanpur, Kandalgudem, Torrur, Ontimamidipalli.
தகவல் உதவி
கேரவன்டெய்லி. காம்
07-05-2016
ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவை தண்ணீர். அதைக் கூட சரியாக தனது மக்களுக்கு தராத அரசு ஒரு அரசா! எங்கோ அமெரிக்காவில் அமர்ந்து டாலரை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு இந்து கிராமங்கள் மேல் என்ன அக்கறை? ஏனெனில் தனது தாய் மண்ணை நேசிக்கிறார்கள். தனது தொப்புள் கொடி உறவான இந்து மக்களை நேசிக்கிறார்கள். எனவேதான் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை விவசாயிகளுக்காக ஒதுக்குகிறார்கள். இந்த மக்களுக்கு இருக்கும் எண்ணத்தில் இருபது சதமாவது அதானிக்கோ, அம்பானிக்கோ, டாடாவுக்கோ, நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கோ இருந்திருந்தால் இந்தியா என்றோ தன்னிறைவு கொண்ட நாடாக மாறி விட்டிருக்கும்.
ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, சாக்ஷி மஹாராஜ், மோகன் பகவத், போன்றவர்களெல்லாம் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டும் என்று பலவேறு சந்தர்ப்பங்களில் கூறி வருகின்றனர். அவ்வாறு எங்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி விட்டால் இது போன்ற ஏழைகளின் அத்தியாவசிய தேவைகளை போக்குவது யார்? அப்படியே நாடு கடத்தினாலும் அந்த மண்ணிலிருந்து கொண்டே எங்கள் தாய் நாட்டுக்கு சேவை செய்து கொண்டிருப்போம். ஏனெனில் இஸ்லாம் எங்களுக்கு அதைத்தான் போதிக்கிறது.
http://caravandaily.com/portal/us-based-muslim-group-gifts-drinking-water-to-drought-hit-areas-across-india/
No comments:
Post a Comment