Followers

Sunday, May 15, 2016

மஹாத்மா காந்தியின் பேரன் இன்று முதியோர் இல்லத்தில்!



மஹாத்மா காந்தியின் பேரன் இன்று முதியோர் இல்லத்தில்!

மஹாத்மா காந்தியின் பேரன் கண்ணுபாய் காந்தியும் அவரது மனைவி சிவ லஷ்மியும் தற்போது டெல்லியில் முதியோர் இல்லத்தில் காலத்தை கழிக்கின்றனர். கண்ணுபாய் காந்திக்கு வயது 87. அமெரிக்காவில் நாசாவில் வேலை பார்த்தவர். மனைவி டாக்டர். இளமையில் நல்ல வசதியோடு வாழ்ந்த இவர்கள் கடைசி காலங்களை தாய் மண்ணான இந்தியாவில் கழிக்கலாம் என்று வந்தனர். ஆனால் சொந்தங்கள் இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காங்கிரஸ் அரசும் இவர்களுக்காக எதுவும் செய்யவில்லை.

கோட்ஷேக்கு சிலை வைக்க துடித்துக் கொண்டிருக்கும் பிஜேபி அரசில் இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து இவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இந்த நாடு விடுதலையடைவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு இந்த நாட்டுக்காக உழைத்த ஒருவரின் வாரிசுகளை இன்றைய இந்தியா நடத்தும் விதத்தைப் பார்த்தீர்களா? அரசியலில் புகுந்து கோடிகளுக்கு அதிபதியான ஒரு அரசியல்வாதி மனது வைத்தாலும் இவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முடியும். தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தங்களின் சுக துக்கங்களை வெளியிட வடிகாலாக யாராவது தென்பட மாட்டார்களா என்று இந்த வயோதிக வயதில் ஏங்குகின்றனர்.

இந்த செய்திகளுக்குப் பிறகாவது அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுகிறதா என்று பார்போம்.

1 comment:

Dr.Anburaj said...


இன்றைய தினத்தந்தியில் விாிவாக உள்ளது.தன் வாழ்நாள் முழுவதும் தன் சொந்தம் பந்தங்களை மறந்துவிட்டு வெளிநாட்டில் -நாசாவில் போா் விமானங்களை வடிவமைக்கும் உயா் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றியிருக்கின்றாா். அவரது மனைவி டாக்டா். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாய் நாட்டு பற்று என்று வயதான காலத்தில் பேசுவது வாய்ஜாலமாக இருக்கலாம்.காந்தியின் பேரன் என்று சொல்லிக் கொள்வதில் அா்த்தம் இல்லை.
இந்நாள் வரைக்கும் இவர்கள் சம்பாதித்த பணம் சொத்து எல்லாம் என்ன ஆனது ? கைநிறைய பணம் இருந்த காலத்தில் சொந்த பந்தங்களை மேற்படி இருவரும் நினைத்துப் பாா்த்தாா்களா ? பாா்க்கவில்லை போலிருக்கின்றது.

உண்டு கெட்டது வயிறு.
உண்னாது கெட்டது உறவு

இன்று பிற உறவினா்களை பழிப்பது பொருத்தமானதாகத் தொியவில்லை. முதியோா் இல்லங்கள் இன்று 5 நட்சத்திர வசதிகளுடன் உள்ளவை நிறைய உள்ளது. அங்கு இருவரும் சௌகாியமாக வாழலாம். ஆனால் இன்று மனிதஉறவுக்காக இவர்கள் ஏங்குகின்றாா்கள். சங்கடம் தான். கடந்த காலங்களில் இவர்கள் மனித உறவுக்காக ஏங்கவில்லையோ ? சொந்த பந்தங்களை நேசித்தாா்களா ? சந்தேகம்தான்.
மனித உறவுகளுக்காக எங்குவதை விட்டு விட்டு இறைவனை நோக்கி தவம் செய்ய இருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே காலத்தை கழித்து விட வேண்டியதுதான்.

பாரத பிரதமா் திரு.மோடியை சந்திக்க இருவருக்கும் ஆசை என்று தினத்தந்தியில் உள்ளது.
மோடிஎன்ற உத்தமனை விஷமாகக் கருதும் சுவனப்பிாியன் ....... சிறு சேட்டை செய்துள்ளாா்.