

பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இரட்டையர்கள்!
முஹம்மது சஹ்ல் 500 க்கு 477
சுஹைல் அஹமது 500 க்கு 481
இருவரும் இரட்டைப் பிறவிகள். அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் படிப்பவர்கள்.
இவர்கள் இந்த அளவு மதிப்பெண் எடுக்க காரணமாக சில தகவல்களை தருகிறார் இவர்களின் தந்தை முஹம்மது சலீம்.
1. தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.
2. என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)
3. எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.
4. குரான் வாசிப்பதை அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றனர்.
5. இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.
6. நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை நாங்களும் கண்காணித்து வந்தோம்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப்பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment