Followers

Wednesday, May 11, 2016

கேமரூன் முகத்தில் காரி உமிழ்ந்த முஹம்மது புஹாரி!



லண்டனில் ஊழல் எதிர்ப்பு உச்சி மாநாடு நடைபெற இருந்த நேரத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ராணி எலிசபத்திடம்
" உலகிலேயே ஊழலில் அற்புதமான நாடுகளாக நைஜீரியாவும் ஆப்கானிஸ்தானும் திகழ்கிறது " என்று பேசியது வெளியாகியுள்ளது

" Nigeria and Afghanistan are fantastically corrupted states"

- David Cameron

இதற்கு நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி மின அழகிய பதிலை கேமரூனுக்கு கொடுத்துள்ளார்.

'கேமரூன் நைஜீரிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறு மாட்டேன். எங்கள் நாட்டிலிருந்து முன்பு கொள்ளையடித்து சென்றீர்களே அதை திருப்பிக் கொடுத்தாலே போதும். இந்த நாடு செழிப்புற்று விடும்' என்று கூறி கேமரூன் முகத்தில் காரி உமிழ்ந்துள்ளார்.

உலகமெங்கும் நாடுகளை வஞ்சகமாக பிடித்து அதன் செல்வங்களை கொள்ளையிடுவது அதனை கொண்டு பிரிட்டனை வளப்படுத்துவது: இது தானே இங்கிலாந்தின் செழுமைக்கு காரணம். திப்பு சுல்தானி ராஜ்ஜியத்தில் இருந்து கொள்ளையடித்தது எவ்வளவு? சிராஜ்ஜூத் தவ்லாவை வஞ்சகமாக வீழ்த்தி கொள்ளையடித்தது எவ்வளவு? இந்து முஸ்லிம்கலவரத்தை உண்டு பண்ணி அதன் மூலம் கிடைத்த குறு நில மன்னர்களின் செல்வத்தை கொள்ளையடித்தது எவ்வளவு? இதனை எல்லாம் கணக்கு காட்ட கேமரூன் தயாரா?

தகவல் உதவி
பிபிசி
அல்ஜஜீரா
12-05-2016

No comments: