Followers

Friday, May 27, 2016

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 13RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 13

அப்போது அவர் கூறினார், முதலில் இறந்த மய்யித்தின் தந்தை ஒரு பெயர் தாங்கிய முஸ்லிமாக மட்டும் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தின் கோட்பாடே தெரியாது. அதனால் தான் தனது மகளின் மய்யித் முன் நின்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார்.

இரண்டாவது பார்த்த அந்த நபரோ இஸ்லாத்தின் கோட்பாட்டை நன்றாக தெரிந்தவர். இஸ்லாம் மய்யித்திற்கு முன் நின்று கதறி அழுவதை போதிக்கவில்லை. தனது கவலைகளையெல்லாம் மனதில் மூடி மறைத்துக்கொண்டு தனது மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மிக கண்ணியமாக மகனை அடக்கம் செய்கிறார்.

மகனை எனக்குத் தந்தவனும் இறைவன் தான்; அவனை எடுப்பதும் இறைவன் தான் என்ற நம்பிக்கையும், நாளை நானும் இறந்து விட்டால் மகனை நிச்சயம் அல்லாஹ் நாடினால் மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் தான் அந்த நபரின் உள்ளத்தில் இருந்த இஸ்லாமியக் கோட்பாடாகும்.

இஸ்லாத்தின் இந்த கோட்பாடும் என்னை நன்றாக அதன் பக்கம் ஈர்த்தது.

நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் எனது அப்பாவும் தண்ணி அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் எனது அப்பாவிற்காக என்னுடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கவும், இஸ்லாம் தற்கொலையை போதிக்கவில்லை என்றும் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பேன். இப்போது நான் அதைப்பற்றி மிகவும் வருந்துகிறேன்.

அதே போல் முஸ்லிம்களின் வியாபார விஷயத்திலும் நல்ல ஒரு கோட்பாட்டை கண்டேன்.

ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்தால் அவனுக்கு இலாபம் வந்து விட்டால் அல்லாஹ்வை துதிக்கின்றான். அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு திருப்திபடுகிறான். ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இந்த வியாபாரத்தை தந்ததும் இறைவன் தான் என்று. எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நினைத்து திருப்திப்படவும் செய்கிறான்.

இன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னை போன்று தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த புலயன், குறவன், பறயன், வேலன் இவர்களையெல்லாம் தனது காரியத்தை சாதிப்பதற்காகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

நான் கேட்கிறேன் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பார்த்து: எங்களது முன்னோர்களெல்லாம் எந்த ஒரு ஜாதி வேறுபாடுமில்லாமல், இந்து மதத்தை ஒன்றாக பகிர்ந்து தானே வாழ்ந்து வந்தார்கள்.

அப்படியிருக்க அவர்களது மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி பள்ளன் என்றும், பறையனென்றும் ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்ற பட்டத்தையும் பெற்று தந்ததெல்லாம் நீங்கள் தானே?

அதோ எதிரி என்று நீங்கள் சொல்கின்ற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமா இந்த பாகுபாட்டிற்குச் சொந்தக்காரர்கள்?

இந்து ஒற்றுமை; இந்து ஒற்றுமை; என்று சொல்லிக்கொண்டு எங்களது காதில் பூவை சுற்றுகிறீர்கள்.

இந்த கேடுகெட்ட இயக்கத்தில்தான் நான் பன்னிரண்டு வருடமாக பணியாற்றினேன்.

படிப்பறிவு இல்லாத ஒரே காரணம் தான் இந்த பாவப்பட்ட தலித் இனத்தை மிக மோசமான ஒரு கட்டத்திற்கு அன்றிலிருந்தே கொண்டு சென்றிருக்கிறது.

இவர்கள் வரலாற்றை ஆராய்ந்திருந்தால் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பன சுயநலத்தின் தெளிவான தோற்றம் இவர்களுக்கு அன்றே தெரிந்திருக்கும். அது தெரியாததால் இன்றும் இந்த பார்ப்பன வெறியர்களின் அடியாட்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்து மதம் காப்போம்; இந்து மதம் காப்போம்; என்று சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார்களே?

இவர்கள் எப்போது இந்து நடை முறைப்படி வாழ்ந்தார்கள்?

டாக்டர் அம்பேத்கார், ஸ்ரீநாராயணன் குரு, அய்யங்காளி, ஐயப்பன், எம்.எல்.சி., வள்ளுவர் இவர்களது வாழ்க்கை முறையெல்லாம் (இவர்களுக்கு)தேவையில்லை.

இவர்களெல்லாம் இந்து மதத்தில் இருந்து கொண்டு இப்படியா வாழ்ந்தார்கள்?.

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுத்தார்களா?

இவர்களுக்கெல்லாம் வராத இந்து பற்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது?

சாகாவில் இந்த தியாகிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்கள் போதிப்பதெல்லாம் இந்து வெறிபிடித்த சுயநலம் கொண்ட பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஹெட்கேவர், வீர சாவர்கர், ராணாபிரதாப், அரவிந்தன் இவர்களது வாழ்க்கை முறையைத்தான் போதிப்பார்கள்.

தியாகி அம்பேத்கர் தலித் இனத்தை ஒருங்கிணைப்பதற்காக இந்து மதத்தில் தலித் இனத்தவர்களுக்கும் தனி உரிமை உண்டு என்று போதிப்பதற்காக 1956 ல் இந்து கோர்ட் பில் என்ற ஓர் நியமத்தை(சட்டத்தை) சட்டசபையில் சமர்ப்பித்தார்.

இதை அன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

நாம் இந்துவல்ல. ஒரு தலித் இனத்தவர்கள் ஒரு போதும் இந்துவாக முடியாது. இந்து மதத்திற்கே சொந்தக்காரர் அந்த பார்ப்பன வெறியர்கள்தான் என்று தான் அம்பேத்கர் மொழிந்தார்கள்.

இதையெல்லாம் சாகாவில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அம்பேத்கர் ஒரு மகான் என்று கூறிகிறார்களே இவர்கள். ஏன் அம்பேத்கரின் கூற்றை இவர்கள் மறைக்கின்றார்கள்?

எனது தலித் இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெரியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள். உங்களை படிப்பற்றவர்களாக்கி, பிற மக்களை கொன்று குவிப்பதற்கு உங்களை ஓர் ஆயுதமாகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பயன் படுத்துகிறார்கள்.

இந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடை பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப்போன்று இஸ்லாம் என்ற கண்ணியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றில்தான் உங்களுக்கு மோட்சம்(விடுதலை) இருக்கிறது. குர்ஆனின் நிழலில்தான் உங்களுக்கு விடுதலை உள்ளது.

அன்று இந்து மதத்தை எதிர்த்த டாக்டர் அம்பேத்கருக்கு என்னைப்போன்று இஸ்லாமிய சிந்தனை ஏற்பட்டிருந்தால் முதல் கணமே அந்த தலித் மக்களை, அடிமை இன மக்களை இந்த சத்திய மார்க்கத்திற்கு செல்ல வழி வகுத்து தந்திருப்பார். அவர் அதற்கு வலியுறுத்தியும் இருப்பார்.

இந்த சத்திய மார்க்கத்தின் நிழல் தெரியாததால்தான் அன்று அந்த மக்களை புத்த மதத்திற்கு அனுப்பினார். புத்தனை கடவுளாக ஏற்றுக்கொண்டதைத் தவிர விடுதலை என்ற கோட்பாட்டிற்கு அவர்கள் தள்ளப்படவில்லை.

நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத் தொண்டனாக இருந்த போது, கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்த மாநாட்டின் தலைப்பு: "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்." இந்தத் தலைப்பைக் கண்ட நான் பீறிட்டு எழுந்தேன்.

அடக்கவியலாத ஆத்திரம் என்னுள். நாங்கள் எதிர்ப்பை காட்டினோம்.

"அரசே! இபுறாஹீம் சுலைமான் சேட்டையும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் உடனேயே கைது செய்" என்று சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினோம்.

நான் வேகந்தாழாமல் இந்தச் சுவரொட்டிகளை காவல் நிலையங்களிலேயே ஒட்டினேன்.

அப்போதும் என் வேகம் அடங்கவில்லை. காவல் நிலையங்களுக்கு உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் அறையில் அவருடைய தலைக்கு மேலையே ஒட்டினேன்.

ஆனால் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் எனக்கு நன்றாகப் புரிகின்றது அது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் முன் வைத்த முழக்கம் எத்துனை அர்த்தம் நிறைந்துள்ளது என்பது.

உண்மையில் இஸ்லாம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றிடும் வழி காட்டுதலை வழங்கிடும் மார்க்கம். அதைப் புறக்கணித்தால் அழிவும் அட்டூழியங்களுமே விஞ்சும்.

முற்றும்.......

ஒரு தலித் இளைஞனின் உள் மனதில் இருந்து வெளிப்பட்டவைகளே இந்த தொடரில் நாம் பார்த்த அனைத்தும். ஆர்எஸ்எஸ் ஒரு தேச பக்தி இயக்கம் என்பது பொய். வர்ணாசிரம தர்மத்தையும் பார்ப்னர்களின் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு என்பதை ஒரு இந்து சகோதரன் வாயிலாகவே கேட்டு தெரிந்து கொண்டோம்.

இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும் இந்தியாவிலிருந்து முற்றாக அழிக்க பல இடங்களில் இந்துத்வா தலித்களை அடியாட்களாக பயன்படுத்தவதைப் பார்க்கிறோம். இந்துத்வாவாதிகளின் உண்மை முகம் தெரியாமல் தலித்கள் வஞ்சகமாக கலவரத்தில் ஈடுபடுத்தப்படுவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதனால் சிறைவாசம் அனுபவிப்பதும் தலித்களே! கொலைகளை செய்யத் தூண்டி விடும் மேல் சாதி ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்கள் சுதந்திரமாக வெளியில் உலா வருவர். கோயம்பத்தூர் கலவரத்திலிருந்து இன்று வரை இதைத்தான் நாம் பார்த்து வருகிறோம். இனியாவது தலித்கள் விழித்துக் கொண்டு இஸ்லாமியருக்கு எதிராக இந்துத்வாவாதிகளோடு சேர்ந்து காய் நகர்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.

No comments: