Followers

Sunday, May 15, 2016

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 1.



RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 1.

தீவிர ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக இருந்த வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகவடிவில் “இலக்கியச் சோலை” வெளியீட்டகத்தார் வெளியிட்டிருந்தனர்.

அதில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் ஓர் சிறு நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. வேலாயுதன் என்ற பிலால் அவர்களை மு. குலாம் முஹம்மது அவர்கள் நேரடியாக கேரளம் சென்று சந்தித்து அந்த நேர்காணலையும் இந்த புத்தகத்தில் சிறு இணைப்பாக இடம் பெற செய்துள்ளார். இனி இப்புத்தகத்தின் பதிப்புரையாக மு. குலாம் முஹம்மது அவர்களின் ஒரு சில வரிகளும் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணலும்.

பதிப்புரை

1996 ன் இறுதியில் வேலாயுதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை அறிந்தேன்

அன்பு நண்பர் E .M. அப்துற் றஹ்மான் அவர்களிடம் பிலால் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றேன். அவரும் இசைவு தந்தார்.

பிலால் அவர்களைப் பேட்டி கண்டேன். விடியல் (விடியல்வெள்ளி மாத இதழ்)ஜனவரி 1997 -ல் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்தேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எனத் தலைப்பிட்டிருந்தேன். என்னுடைய சந்திப்பின் போது "இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்" என்று நான் கேட்ட போது, "என்னுடைய மக்களின் (தலித் பெருங்குடி மக்களின்) விடுதலைக்காகப் போராடப் போகிறேன்" என பதில் தந்தார்.

உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து மக்களிடையே புழங்கவிடுங்கள். அதைப் படித்து பலரும் பயன் பெறுவார்கள் என்றேன். அந்தப் பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

2003 -ல் நான் கேரளா சென்றிருந்த போது பிலால் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேளிவிப்பட்டேன். நண்பர் E.M. அப்துற் றஹ்மான் அவர்களே ஒரு பிரதியைப் பெற்றுதந்தார்கள். அதையே தமிழில் தந்திருக்கின்றோம்.

தமிழில் மொழி பெயர்க்கும் பணியை விரைந்து செய்து முடித்தவர் தம்பி முஷம்மில். அவருடைய முதல் முயற்சி இது. இது போல் ஆக்கப்பூர்வமான பணிகள் பலவற்றை அவர் செய்ய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

வழக்கம்போல் இலக்கியச் சோலையின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் தொடர்கின்றது.

யா அல்லாஹ்; உன்னுடைய பாதையில் எடுத்து வைக்கும் இந்த முயற்சியை ஏற்றுக்கொள்வாயாக;

நிறைகள் எல்லாம் நிறைந்த அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் எங்களைச் சாரும்;

வஸ்ஸலாம்
மு. குலாம் முஹம்மது.

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணல்.....

--------------------------------------------------------------

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு

உங்களைச் சந்திக்க வேண்டும், வருகின்றோம் என்றோம் காலை 10 மணிக்கு. பகல் 12 மணிக்கு நேரம் கொடுத்தார்.

எப்போதும் சிலர் அவரைச் சந்திக்க வந்து கொண்டேயிருந்தார்கள். அதனால் தான் அவரால் கேட்டவுடன் நேரம் தந்திட இயலவில்லை.

நானும் தேஜஸ் என்ற மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரும் சென்றோம். நாங்கள் அவரது வீட்டைத் தேடிக் கொண்டிருந்த போது….,

எங்கள் பின்னால் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் வந்தார்கள். எங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல் கேட்டார்கள்: “பிலால் சாஹிப் அவர்களைப் பார்க்கவா?”

“ஆமாம்” என்றோம்.

அழைத்துச் சென்றார்கள்.

தொடராக இருந்த மூன்று சிறிய வீடுகளில் ஒன்றில் அவர் தன் இஸ்லாமிய வாழ்கையைத் தொடங்கியிருந்தார். அந்தச் சிறு வீட்டில் ஒரு சிறு பகுதி வரவேற்பறையாகச் செயல்பட்டது.

இந்த சின்னப் பகுதிக்கு “தாருஸ் ஸலாம்” எனப் பெயர் வைத்திருந்தார். பெயர் வைத்துக் கொள்ளத்தக்க அளவில் உள்ள வீடில்லை அது. ஆனாலும் இஸ்லாம் தனக்குத் தந்த மன அமைதியைப் பிரதிபலிக்க, “அமைதியின் வீடு” எனப் பெயர் வைத்திருந்தார். ஆமாம்.. பல ஆண்டுகள் அலைக்கழிந்த கடினமான வாழ்க்கைக்குப் பின் இஸ்லாம் தந்த அமைதி;

“பிலால் சாஹிப்”, எங்களுக்கு வழி சொன்னவர்கள் குரல் கொடுத்தார்கள்.

நியாயமான உயரம் கொண்ட சங்கையான தாடியுடன் சடுதியாக வந்தார் பிலால் சாஹிப். உடனே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு ஒரு பரம்பரை முஸ்லிமை விஞ்சும் தோற்றமும், பார்வையும்; எங்களுக்கு வழிகாட்டிய சகோதரர்கள் புடை சூழ எங்களை அழைத்துக் கொண்டு போய் அந்தச் சின்னக் குடிலின் வரவேற்பு அறையில் அமரச்செய்தார். அமர்ந்தோம்.

தேஜஸ் ஆசிரியரை எளிதாகப் புரிந்து கொண்டார். நான் ஒரு வழியாக அறிமுகமாகி முடித்தேன்.

பிலால் சாஹிப்: உங்கள் ஊர்?

நான்: நாகர்கோவில்.

பிலால் சாஹிப்: நாகர்கோவிலில் எந்தப் பக்கம்?

நான்: நான் சென்னையிலிருக்கின்றேன்.

பிலால் சாஹிப்: நான் நாகர்கோவில், காயல்பட்டினம் ஆகிய இடங்களுக்கு வந்திருக்கின்றேன். மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்தேன். காயல்பட்டினம் நிகழ்ச்சியில் பி.டி.பி.யின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனியால் கலந்து கொள்ள இயலவில்லை. நான் தான் தலைமைதாங்கி தலைமை உரையாற்றினேன்.

நான்: மிக்க மகழ்ச்சி… நீங்கள் இஸ்லாத்தை ஏற்றக்கொண்ட வரலாற்றைச் சொல்லிட இயலுமா?

பிலால் சாஹிப்: நான் ஹிந்துத்துவா அமைப்புகளில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றியவன். அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்த பாடங்களின் வழி முஸ்லிம்களை வெறுக்கக் கற்றுக் கொண்டேன். என்னுடைய வெறுப்பு என்பது சாதாரணமாக இந்து தீவிர அமைப்புகளில் இருப்பவர்கள் கொள்ளும் வெறுப்பல்ல. நான் கொண்ட வெறுப்பு மிகவும் கடுமையானது. முஸ்லிம்களைக் கண்டால் நான் அளவுக்கு மீறி வெறுப்பைக் கொட்டுவேன். நீங்கள் ஆட்சேபிக்கவில்லையென்றால் சொல்வேன்.

நான்: கொஞ்சமும் குறைக்காமல் சொல்லுங்கள்.

பிலால் சாஹிப்: எனக்கு சொல்லித் தந்த பாடங்களின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வாழ்ந்திட எந்த உரிமையும் இல்லை என்றே நான் நினைத்தேன். அவர்களை இங்கே வாழவிட்டவர்கள் மிகப் பெரிய தவறையே செய்து விட்டார்கள் என்று கருதினேன். தொடர்ந்து தந்த பயிற்சிகளால் என்னைப் போன்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் வெறுப்பு மட்டும்தான் கொண்டோம் என்றில்லை; கோபமும், ஆத்திரமும் கொண்டோம்.

இறைவன் நாடினால் தொடரும்....

3 comments:

Dr.Anburaj said...


அரைத்த மாவு.எத்தனை முறைதான் அரைப்பீா்கள்.

Dr.Anburaj said...

ஆர்ய ஆனந்த்
May 10, 2012 7:02 am #

முஹம்மது மதீனாவுக்கு சென்று குடியேறிய பிறகு முதல் ஆறு மாத காலத்தில் முக்கியமான விஷயம் எதுவும் நடைபெறவில்லை. முகம்மதுவும் அவரோடு மதினாவில் குடியேறியவர்களும்(ஹிஜ்ரத் செய்தவர்கள்) பிழைப்புக்கு வழியில்லாமல் தங்களுடைய உணவுக்கும் தங்குமிடத்துக்கும் செலவு செய்ய வசதி இல்லாமல் மிகவும் போராடிக்கொண்டு இருந்தனர்.

அப்படி இருந்தும் முஹம்மதின் சிந்தனைகள் அமைதிக்கான சிந்தனைகளாக இருக்கவில்லை. அவர் மிக பெரிய திட்டங்களை வைத்திருந்தார். மக்காவிலிருந்து இன்னும் சில பேர் கட்சிமாறி மதினாவுக்கு வந்து முஹம்மதோடு குடியேரியவர்களோடு சேர்ந்து கொண்டனர். மேலும் மதினாவில் இருந்தவர்களும் இஸ்லாத்தை ஏற்று கொண்டிருந்தனர். இதனால் முகம்மதை பின்பற்றும் கூட்டம் அதிகரித்துக்கொண்டு இருந்தது. இப்பொழுது போரிடுபவர்களின் ஒரு கூட்டத்துக்கு கட்டளை இடும் நிலைக்கு முகமது முன்னேறி இருந்தார். ஆனால் மதீனாவாசிகள் முகம்மதை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மட்டுமே அவருக்கு உறுதி அளித்திருந்தனர். குறைஷிகளுக்கு எதிராக அத்துமீறி அவர்களை முஹம்மது தாக்குவதற்கு உதவி செய்ய அவர்கள் உறுதி மொழி எதுவும் அளிக்கவில்லை.

ஆகையால் மக்காவை தாக்குவதற்கு பதில், கி.பி.622 ஆம் வருடம் ரமளாம் மாதத்தில், மதீனாவுக்கு குடியேறிய ஏழு மாதங்களுக்கு பிறகு, அபு ஜஹ்ல் தலைமையில் சிரியாவிலிருந்து மக்காவிற்கு திரும்பிக்கொண்டிருந்த வணிக கூட்டத்தை(Caravan) திடீரென்று தாக்க, நபி தன்னுடைய மாமனாகிய ஹம்சா வை முப்பது அகதிகளுக்கு(மதினாவில் குடியேறிவர்கள்) தலைவராக நியமித்து அனுப்பி வைத்தார். இந்த வணிக கூட்டம் 300 பேர்களின் பாதுகாப்பில் இருந்தது. இதனால் ஹம்சா தன்னுடைய ஆட்களோடு வெறும் கையுடன் மதீனாவுக்கு திரும்ப நேர்ந்தது. அபு ஜஹ்ல் தலைமையிலான வணிக கூட்டமும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மக்காவை சென்றடைந்தது. இது தான் முஹம்மது தொடங்கிவைத்த முதல் மோதல். ஆனால் ஆட்களின் பற்றாக்குறை காரணமாகவும் தவறான திட்டமிடல் காரணமாகவும் முஹம்மதின் இந்த முதல் தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிரடியாக தாக்கி கொள்ளை அடிக்க முஹம்மதுக்கு சொன்ன அல்லாஹ், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அவருக்கு சொல்லவில்லை. கத்துக்குட்டி திருடனை போல, சோதனை
மற்றும் தவறு(trial and error) மூலம் முஹம்மது அதை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அடுத்த நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு பிறகு கி.பி. 623 ல் நிகழ்ந்தது. அப்பொழுது முந்தைய கூட்டத்தைவிட இரு மடங்கு ஆட்களைகொண்ட கூட்டத்தை உபைதா இப்னு ஹரித் என்பவரின் தலைமையில், 200 ஆட்களுடன் அபு சுப்யான் தலைமையில் சென்றுகொண்டிருந்த வணிக கூட்டத்தை பின் சென்று தாக்குமாறு அனுப்பி வைத்தார். இந்த முறை குறைஷிகள் திடீரென்று தாக்கப்பட்டனர். அப்பொழுது அவர்களுடைய ஒட்டகங்கள் ரபிக்(Rabigh) என்ற பள்ளத்தாக்கில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சில அம்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனாலும், வணிக கூட்டத்தோடு வந்த ஆட்களைவிட தங்களிடம் உள்ள ஆட்கள் மிகக்குறைவு என்பதை உணர்ந்துகொண்ட முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இந்த தாக்குதலில் இருந்து பின் வாங்கிவிட்டனர்.

ஒரு மாதத்திற்கு பிறகு, இளவயது சாஅத் என்பவரின் கீழ் இருபது பேர்களோடு, அதே திசையில் மூன்றாவது தாக்குதல் பயணம் ஆரம்பமாகியது. மக்காவுக்கு செல்லும் சாலையில் உள்ள கர்ரர்(Kharrar) என்ற பள்ளத்தாக்கு வரை சென்று, அந்த வழியாக கடந்து செல்லும் வணிக கூட்டத்தை எதிர்பார்த்து, அங்கேயே மறைந்திருந்து காத்திருக்கும்படி சாஅத் க்கு கூறப்பட்டிருந்தது. திடீரென்று ஊருக்குள் புகுந்து கொள்ளை அடிக்கும் கூட்டத்தை(marauding parties) போல, அவர்களுடைய நோக்கமும் வணிக கூட்டத்தை திடீரென்று தாக்குவதாகவே இருந்தது. அவர்கள் இரவில் பிரயாணம் செய்து பகலில் மறைந்திருந்தனர். இவ்வளவு முன் எச்சரிக்கை இருந்தும், ஐந்தாவது நாள் காலையில் சேரவேண்டிய இடத்தை அவர்கள் அடைந்தபோது, வணிக கூட்டம் ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தை விட்டு கடந்து சென்று விட்டது என்பதை அவர்கள் கண்டனர். எனவே அவர்கள் வெறும் கையுடன் மதீனாவுக்கு திரும்பினர்.

இந்த பயணங்கள் எல்லாமே கி.பி. 623 ஆம் வருடத்தின் குளிர் காலம் மற்றும் வசந்த காலத்தில் நடைபெற்றன. ஒரு கொம்பு அல்லது தடியின் மீது வெள்ளை கொடியை ஏற்றி அதை தாக்குதலுக்கு செல்லும் கூட்டத்தின் தலைவருக்கு அவர் புறப்படும்போது, ஒவ்வொரு முறையும் முஹம்மது கொடுத்தனுப்பினார்.

மேற்கூறியவை மட்டுமலாமல், நபி மற்றும் அவருடைய ஆட்கள் செய்த, தோல்வியில் முடிந்த இன்னும் மூன்று வழிப்பறி கொள்ளை முயற்சிகளும் நடந்தன.

அவை அப்வா(Abwa),புவத்(Bowat), உஷீரா(Osheira).
மேற்படி போா்குறித்து எனக்கு விளக்குவாரா சுவனப்பிாியன்.

ASHAK SJ said...

முகம்மதுவும் அவரோடு மதினாவில் குடியேறியவர்களும்(ஹிஜ்ரத் செய்தவர்கள்) பிழைப்புக்கு வழியில்லாமல் தங்களுடைய உணவுக்கும் தங்குமிடத்துக்கும் செலவு செய்ய வசதி இல்லாமல் மிகவும் போராடிக்கொண்டு இருந்தனர்.

இதனால் முகம்மதை பின்பற்றும் கூட்டம் அதிகரித்துக்கொண்டு இருந்தது.

hi hi hi hi , what a stupidity,