

இலங்கையில் தற்போது நடந்து வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு!
தமிழகத்தில்சில மாதங்கள் முன் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று நடந்து வருகிறது.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எனது உறவினர்கள் நிறைய இருக்கின்றனர். நன்கு உலக கல்வியை கற்ற அவர்களிடம் மார்க்க அறிவு என்பது பில்லி சூன்யம், தர்ஹா, தட்டு, தாயத்து என்ற ரீதியில்தான் உள்ளது. எனவே இலங்கையை தொடர்ந்து மலேசியா சிங்கப்பூரிலும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்த ஏகத்துவ வாதிகள் முன் வருவார்களாக!
1 comment:
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு!
By dn
First Published : 01 May 2016 12:14 AM IST
புகைப்படங்கள்
"சீன நாட்டு சக்கரவர்த்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது' என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு ஒன்று சீன நாட்டில் உள்ள சிவன் கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
÷சீன நாட்டில் "காண்டன்' எனும் நகருக்கு 500 கல் தொலைவில் வடக்கே உள்ள "சூவன்லிசெள' என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைக் காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்கிறது. அக்காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று, அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சீன துறைமுகங்களிலும் தங்கி, பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து சீன நாட்டை அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
÷ சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்றி வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்பெற்ற வணிகக் குழுவினர் சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
÷சூவன்லிசெள துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சில சிலைகள் (விக்கிரகங்கள்) குப்லாய்கான் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்கு "சேகாசைகான்' என்ற பெயரும் உண்டு. இச்சிவன் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் "திருக்கதாலீசுவரன் உதயநாயனார்' என அழைக்கப்படுகிறார்.
÷சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள். சுக யுகம் சித்திராப் பெளர்ணமி அன்று இக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. கி.பி.1260-ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிஸ்கானின் பெயரனாவான். மங்கோலியச் சக்கரவர்த்தியின் ஆளுகையில் சீனாவும் இருந்துள்ளது. அப்போதிருந்த பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் இருந்துள்ளனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான்.
÷ இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கிடைத்தற்கரிய தமிழ்க் கல்வெட்டு இது.
-ஆரூர் கே. கோதண்டராமன்.
தினமணி ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மணி யில் தரமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.அதை வெளியிடுங்கள்.அரேபிய கலாச்சாரத்தை முன்னிருத்தி ஷிாக் மாநாடு நடத்துவது முட்டாள்தனம்.பிரச்சனைகளும் பிாிவினைகளும் எற்படும்.
Post a Comment