உலகம் என்பது இவ்வளவுதான். இனி ஆறடி நிலம்தான் இவருக்கு சொந்தம். காஷ்மீரில் ஒரு இஞ்ச் இடத்தையாவது வளைத்து போட வேண்டும் என்று பதிவிடும் ராகவன்கள் யோசிக்க வேண்டும். மோடிக்களும் அமித்ஷாக்களும் ஆதித்யநாத்களும் சிந்திக்க வேண்டும். 60 வயதோ... 70 வயதோ வாழும் காலங்களில் மக்களுக்கு முடிந்த வரை நன்மை செய்து விட்டு போகும் வழிக்கு புண்ணியத்தை தேடிச் செல்ல வேண்டும். அந்த உலகம்தான் நிரந்தரமானது. இந்த உலகம் ஒரு வழிப் போக்கனுக்கு உள்ள உரிமையைப் போன்றது.
சுஷ்மா ஸ்வராஜை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
--------------------------------------------------
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.
''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறிது நேரத்தைச் செலவிடு. உன்னுடைய இறப்புக் குப் பிந்திய நாளுக்காக உன்னுடைய வாழ்நாளில் சிறிது நேரத்தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
நூல்: புகாரி 6416. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்.
-------------------------------------
மனிதன் என்னுடையது , என்னுடையது என்கிறான். மனிதனே ! நீ உண்டு கழித்தவற்றையும் , உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கிர் (ரழி) நூல் : முஸ்லிம்
3 comments:
ஆச்சரியமாக உள்ளதே.ஒரு இந்து பெண் அதுவும் ஆரஎஸஎஸ கலாச்சாரத்தில் பாசறையில் வளா்க்ப்பட்ட பெண் .பாரதிய ஜனதா கட்சியில் சட்டமன்றஉறுப்பினா் பாராளுமன்ற உறுப்பினா் மாநில மந்திரி முதல் மந்திரி ....... வெளிநாட்டு இலாகா மந்திரி என்று பல உயா் பதவிகளை வகுத்து அந்த பதவிகளுக்கு மரியாதை தேடித்தந்தவா். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அரேபிய மத வெறியன் அடிமை சுவனப்பிரியன் பதிவு செய்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.
வெளிநாட்டு இலாகா மந்திரியாக இருந்து இந்த அம்மா செய்த பணிகள் அற்புதம்.
வெளிநாட்டில் வாழும் இந்தியார்களுக்கு ஏற்படும் துன்பங்களை துடைப்பதில் இவர் காட்டிய ஆர்வம் தங்களைக் கவா்நதிருக்க வேண்டும்.
பாக்கிஸ்தான் நாட்டில்இருந்து கூட மருத்துவ சிகிட்சை பெற பல விசாக்கள் பெற விண்ணப்பம் பெற்ற போதும் இந்த அம்மா தாயுள்ளத்தோடு அந்த மனுக்களை விசாரித்து விரையில் விசா வழங்கி மருத்துவசிகிட்சை பெற உதவினாா்.இந்த வகையில் பலரில் வாழ்த்துக்களை பெற்றவர் இந்த அம்மா.
காபீர்களின் நல்ல தொண்டுகளை இறைவன் அங்கிகரிக்கமாட்டான் என்ந அரேபிய வல்லாதிக்க முட்டாள்களின் கூற்றை நாங்கள் ஏற்பதில்லை.
நல்ல உள்ளங்களை மட்டும் இறைவன் பார்க்கின்றான், சத்தியம் சர தர்மம் சர . தர்மம் தலைகாக்கும் என்பது இந்து பண்பாடு. தன் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தவா் சுஷ்மா அம்மா அவர்கள். அவருக்கு நிச்சயம் நல்ல கதியை இறைவன் வழங்குவான் என்பது எனது பிராா்த்தனை.
It is applicable for suvi also
சுவனப்பரியனுக்கு கொடூம் நரகம்தான் கிடைக்கும்.
மு்ஸ்லீம் அல்லாத மக்களின் அழிவை சதா நினைத்து செயல்படும்
காட்டறபிகளில் வல்லாதிக்க கருத்துக்களை பிரச்சாரம் செய்பவனுக்கு
இறைவன் இழிந்த வாழ்வையே மறுபிறவியில் வழங்குவான்.
Post a Comment