Followers

Tuesday, June 30, 2020

சட்டம் யாருக்காக? எப்படி எல்லாம் வளைகிறது பாருங்கள்!

சட்டம் யாருக்காக? எப்படி எல்லாம் வளைகிறது பாருங்கள்!
இந்தநிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் கோயிலில் ஒன்றாக பணிசெய்த தீட்சிதர்கள் உள்ளிட்ட அனைவரையும் தனிமைபடுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணையளார் சுரேந்தர்ஷா உள்ளிட்ட நகராட்சி கரோனா தடுத்து பணி ஊழியர்கள் தொற்று பாதிக்கப்பட்ட தீட்சிதர்களின் தொடர்பில் இருந்த தீட்சிதர்களின் வீட்டு சுவற்றில் கரோனா குறித்து துண்டு பிரசுரத்தை ஒட்டினார்கள்.
இதற்கு தீட்சிதர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து சில வீடுகளில் ஒட்டப்பட்ட #துண்டுபிரசுரத்தை #கிழித்தனர். பின்னர் அனைவரும் கீழசன்னத்தில் சமூக இடைவெளியுடன் ஒன்றுகூடி துண்டு பிரசுரம் ஒட்டியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எங்க வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா, ஏன் இந்த பிரசுரத்தை ஒட்டினீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என சத்தம் போட்டனர்.
இதனையறிந்த காவல்துறை ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் இது வழக்கமான நடவடிக்கைதான் என்று சமாதனம் செய்தனர். ஆனால் தீட்சிதர்கள் இதனை ஏற்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டமாக நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் தீட்சிதர்கள் எங்க வீடுகளில் துண்டுபிரசுரம் ஒட்டிய அதிகாரிகள் எப்படி ஒட்டினார்களோ அதேபோல் துண்டுபிரசுரத்தை மீடியாவை அழைத்து வந்து கிழிக்கவேண்டும். இல்லையென்றால் இந்த இடத்தைவிட்டு செல்லமாட்டோம் என்று கூட்டமாக 3 மணி நேரம் இருந்தனர்.
இதில் சில தீட்சிதர்கள் ஒட்டிய பிரசுரத்தை கிழிக்கவில்லையென்றால், சிதம்பரத்தில் உள்ள அனைத்து தீட்சிதர்களின் குடும்பத்திலுள்ள ரேசன் கார்டு, ஆதர்காடு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்க போகிறோம் என காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனைதொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் அவர்களிடம் இனிமேல் நோட்டீஸ் ஒட்டமாட்டார்கள். இந்த பிரச்சனையை இதனுடன் விட்டுவிடுங்கள் என கேட்டுகொண்டதின் பேரில் தீட்சிதர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நேரம் இது மத பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும்

Dr.அஸ்தானா IPS, கேரளாவின் முன்னால் காவல் துறை தலைவர் (DGP), சிறந்த போலீஸ் அதிகாரி. அவர் இன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவில் IPS அதிகாரியின் மனைவி (கொரோனா உறுதி செய்யப்பட்டவர்) பக்கத்து வீட்டு பெண்மணி மீது எச்சில் துப்பியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த இந்த செய்தியை பதிவிட்டு, நல்ல வேலை எச்சில் துப்பியது தப்லீக் இல்லை, இதுவே ஒரு தப்லீக் இப்படி செய்து இருந்தால் இந்நேரம் இது மத பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார் Dr.அஸ்தானா IPS

Monday, June 29, 2020

பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டத்தில்....

பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டத்தில் எந்த கொரோனா கட்டுப்பாடும் கடைபிடிக்கவில்லை.
இது பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
இவர்களில் எத்தனை பேருக்கு நோய் தொற்று தொற்றியுள்ளதோ?
எத்தனை பேருக்கு அதனை பரப்பினார்களோ!


ராகுல் காந்தியை குறித்து சாது பிரக்யாசிங். NDTV 30-06-2020

''வெளி நாட்டவருக்கு பிறந்தவரெல்லாம் தேசப்பற்றாளராக முடியாது- ராகுல் காந்தியை குறித்து சாது பிரக்யாசிங். NDTV 30-06-2020
குண்டு வைத்து அப்பாவிகளை கொன்று சிறைவாசம் அனுபவிப்பவர்தான் தேசப்பற்றாளர் என்றால் அப்படி ஒரு நிலை ராகுலுக்கு தேவையில்லை.
பிரக்யாசிங் போன்ற தேச விரோதிகளை எம்பியாக்கிய கட்சியும் இவரை தேர்ந்தெடுத்தவர்ளும்தான் தேச விரோதிகள்.


டாக்டர் இஸ்மாயில் கான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

ஏழைகளுக்கு மிகக் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் இஸ்மாயில் கான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.


இது போல் இன்னும் எத்தனை தமிழர்கள் காத்துக் கிடக்கின்றனரோ?

இது போல் இன்னும் எத்தனை தமிழர்கள் காத்துக் கிடக்கின்றனரோ?
கேரள அரசுக்கு உள்ள மனிதாபிமானத்தில் கொஞ்சமேனும் நம்மவர்க்கு இருக்க வேண்டாமா?




முஸ்லிம் மெஜாரிட்டி குடியரசுகளில் ஒன்றான செசன்யாவில்

ரஷ்யாவின் முஸ்லிம் மெஜாரிட்டி குடியரசுகளில் ஒன்றான செசன்யாவில், கொரோனா வைரஸ்சால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்லாமிய திருமணங்களில், மணப்பெண்ணுக்கு மணமகன் சார்பில் கொடுக்கப்படும் மஹரை திரட்ட கஷ்டப்படுகின்றனர் ஆண்கள்.
இதனை அரசிடம் அவர்கள் கொண்டு செல்ல, செசன்ய குடியரசின் தலைவரான ரம்ஜான் கடிரோவ் (படம்), மஹர் கொடுக்க சிரமப்படும் ஆண்களுக்கு அரசு பொருளாதார உதவிகளை செய்யும் என்ற உத்திரவாதத்தை அளித்ததுடன், ரொக்கமாக 50,000 ரஷ்ய ரூபல்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 207 ஆண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti தெரிவித்துள்ளது.
மஹரை குறைக்க சொல்லி மணப்பெண்களிடம் கோரிக்கை வைக்காமல், மணமகன்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவியை செய்திருக்கிறார்கள். மிகச் சரியான அணுகுமுறை. வெரி குட் 
செய்திக்கான ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-52979143


Sunday, June 28, 2020

நாவஸ்கனி MP

#WHD என்ற சர்வதேச அமைப்பு COVID 19 கொரோனா தடுப்பு பணி மற்றும் மக்களின் துயர் துடைக்கும் பணியில் சிறந்த பணி செய்த சிறந்த மக்கள் பிரதிநிதிகள் தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக அருமை அண்ணன் நாவஸ்கனி அவர்களை தேர்வு செய்துள்ளது....
Congratulations to K. Navas Kani Sahib Hon'ble M.P. (LS) officially award announced by World Humanitarian Drive in category of Excellence in Politics "Best Public Ambassador". May ALLAH Almighty bless you and us all.



சவுதி காவல் துறையும் நமதூர் காவல் துறையும்

சவுதி காவல் துறையும் நமதூர் காவல் துறையும்
ஒரு முறை முதலாளியிடம் இருந்து ஓடி வந்து வெளியில் வேலை செய்து கொண்டிருந்தான் எனது நண்பன் உஸ்மான். ஊருக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற முயற்சியில் இருந்தான். சிலர் அவனிடம் சிக்னலில் தண்ணீர் பாட்டில் விற்றால் உன்னை பிடித்து சிறையில் தள்ளி ஊருக்கு அனுப்பி விடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே ஒரு வாரமாக சிக்னலில் தண்ணீர் விற்றான். பாட்டில்கள் காலியானதே தவிர காவல் துறை பிடித்த பாடில்லை. வெறுத்து போய் ஒரு காவல் துறை அன்பரிடமே போய் 'தண்ணீர் வேண்டுமா?' என்று கேட்க.. அவரோ ' நீ ஓடி வந்து ஊருக்கு போக முயற்சிக்கிறாய்... தற்போது இந்தியாவில் நிலைமை சரியில்லை... இன்னும் கொஞ்ச நாள் சம்பாதித்து விட்டுப் போ' என்று அவன் கையில் 10 ரியாலையும் தந்து விட்டு சென்றார்.  உஸ்மானுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
அதே போல் ஒரு முறை வியாழன் இரவு ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு இரண்டு மணிக்கு டாக்ஸி பிடித்து ரூமுக்கு வந்தேன். டாக்ஸி காரன் 'இரவு வெகு நேரமாகி விட்டது. உள்ளே வந்து விட்டு நான் தனியே திரும்புவது சிரமம்' என்று மெயின் ரோட்டிலேயே இறக்கி விட்டு சென்று விட்டான். எனக்கோ சரியான பயம். ஒரு போலீஸ் வண்டி வந்தது. அந்த வண்டியை கை காட்டினேன்.. நின்று 'என்ன?' என்று கேட்டார்.
'டாக்ஸிகாரன் வழியில் இறக்கி விட்டு சென்று விட்டான். உள்ளே சிறிது தூரம் போக வேண்டும். பயமாக உள்ளது' என்றேன். 'வண்டியில் ஏறு' என்று கூறி எனது ரூம் வரை கொண்டு வந்து விட்டார்.
அதே போல் நண்பர் தமீம் மளிகை கடையில் பிலிப்பைனி நிறைய பாக்கி வைத்திருந்தான். எவ்வளவு கேட்டும் தரவில்லை. இது பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு பழக்கமான காவல் துறை அதிகாரியிடம் இது பற்றி சொன்னேன். விலாசத்தை வாங்கினார். வாங்கிக் கொண்டு நேராக பிலிப்பைனியின் இருப்பிடத்திற்கே யூனிஃபார்மோடு சென்று 'பணத்தை தருகிறாயா? அல்லது மேலதிக நடவடிக்கை எடுக்கட்டுமா?' என்று கேட்க 'சம்பளம் வாங்கி தந்து விடுகிறேன்' என்று பிலிப்பைனி சொல்ல அதன்படி பணமும் வந்தது. இதற்காக அந்த அதிகாரி ஒரு பைசா கூட வாங்கவில்லை.
இது போல் சவுதி காவல் துறையைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சிறு வயது முதலே இறை பக்தி ஊட்டப்படுவதால் அனைவரும் இறப்புக்குப் பிறகு ஒரு வாழ்க்கை உள்ளது அதற்காக நீதி நேர்மையோடு நடப்போம் என்று ஓரளவாவது நியாயத்தோடு நடக்கின்றனர்.
சவுதி காவல் துறையையும் சாத்தான் குளத்தில் அரை மணி நேரம் கடையை அதிகம் திறந்ததற்காக தந்தையையும் மகனையும் அடித்தே கொன்ற நமதூர் காவல் துறையையும் இங்கு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பங்களாதேஷத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களோடு காவல் துறையினர் உணவு உண்பதைத்தான் முதல் படத்தில் பார்க்கிறோம்.




சாத்தான் குளம் படுகொலை சம்பந்தமாக சிறுவனின் அழகிய உரை!


Saturday, June 27, 2020

கொரோனாவை விட கொடியது மோடியின் பேச்சு


சைனாவோடு நடந்த சண்டையில் உயிரிழந்த சலீம் கான்!

சைனாவோடு நடந்த சண்டையில் உயிரிழந்த  சலீம்கான்!
பஞ்சாப் பாடியாலா மர்தாஹர் இடத்தை சேர்ந்தவர் சலீம் கான். வயது 24. எல்லையில் சீனாவோடு நடந்த சண்டையில் நாட்டுக்காக தனது உயிரை இழந்துள்ளார். பஞ்சாப் அரசு இவரது குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடாக அறிவித்துள்ளது. தனது நாட்டை காக்க போரிட்டு மரணிப்பவரும் ஜிஹாதிதான். அந்த வகையில் இவரது வீரத்தை போற்றுவோம்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
28-06-2020




பாஜக ஆட்சியில் விடுதலையான 8 பயங்கரவாதிகள்!

பாஜக ஆட்சியில் விடுதலையான 8 பயங்கரவாதிகள்!
இது தான் நாட்டைக் காக்கும் லட்சணமா?
தேச பக்தி, தேச பக்தி என்று கூக்குரலிடும் பாஜகவினரின் தேசப் பற்றைப் பாருங்கள். இந்த நாட்டை ரத்தக்களரியாக்கிய அத்தனை அயோக்கியர்களையும் விடுதலை செய்துள்ளது மோடி அரசு. இனி மிகவும் தைரியமாக சதிச் செயல்களை அரங்கேற்றுவார்கள். கொலைகாரர்கள் வெளியேறி கொண்டிருக்க நேர்மையான போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று சிறையில்... இது தான் மோடி நாட்டை ஆளும் லட்சணம்.
என்னதான் நாச வேலைகள் செய்தாலும் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை ஒழித்து விட முடியாது. ஒரே ஒரு முஸ்லிம் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு இந்து ராஷ்ட்ராவாகவும் மாற முடியாது. ஆங்காங்கே கலவரங்களை மட்டுமே மோடி அமித்ஷாக்களால் நிறைவேற்ற முடியும். பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. பாதிப்படைந்த முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தால் இந்திய நாடானது சிதறுண்டு போகும். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்தாமல் காப்பானாக!
Eight People the Modi Govt Gifted a Get-Out-of-Jail Free Card to Since 2014
பாஜக ஆட்சியில் விடுதலையான 8 பயங்கரவாதிகள்!
இது தான் நாட்டைக் காக்கும் லட்சணமா?


தன் சொந்த காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்

தன் சொந்த காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்
மும்பையில் தன் சகோதரி கொரானா நோயால் பாதிக்கப்பட்டு சீரியஸான நிலையில்
5 மருத்துவமனைகளுக்கு அலைந்தும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் உயிர் இழந்தார்.
இந்த நிலை பிறருக்கு ஏற்படக்கூடாது என்பதற்கு தன் சொந்த காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு மதம், இனம் வேறுபாடுகள் காட்டாமல் கொடுத்து உதவி வரும் ஷா நவாஸ்.


பெர்கே கான் (Berke Khan), மங்கோலிய பேரரசர்

பெர்கே கான் (Berke Khan), மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கானின் பேரனான இவருக்கு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த இவர் தான், இஸ்லாமை தழுவிய முதல் மங்கோலிய பேரரசர் ஆவார்.
செங்கிஸ்கான், தான் ஆட்சி செய்த பரந்த நிலப்பரப்பை தன் மகன், பேரன்களுக்கு நான்கு பகுதிகளாக பிரித்து கொடுத்திருந்தார். இதில் கோல்டன் ஹோர்ட் (இன்றைய மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள்) பகுதியை ஆண்டார் பெர்கே.
புகாரா நகரில் ஒரு வணிக குழுவை சந்தித்த பெர்கே, அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவால் கவரப்பட்டு இஸ்லாமை தழுவினார். இந்த தருணம் உலக அரசியலிலும் கூட ஒரு முக்கிய நிகழ்வாகும். காரணம், மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த மங்கோலிய படைகள் பெர்கேவின் இஸ்லாமிய தழுவலால் தடுமாற்றத்தை சந்தித்தன.
மங்கோலிய படைகளால் பல அப்பாவி உயிர்கள் பறிபோவதாக குற்றம் சாட்டிய பெர்கே, மற்ற முஸ்லிம் மன்னர்களுடன் இணைந்து தன் உறவினர்களான மற்ற மங்கோலிய அரசர்களை எதிர்க்க ஆரம்பித்தார். தோல்வியையே சந்திக்காத படைகள் என்றழைக்கப்பட்ட மங்கோலிய படைகள் தொடர் தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தன.
தன் மற்ற உறவினர்களுக்கும் இஸ்லாமை எடுத்துரைத்தார் பெர்கே. ஒரு கட்டத்தில், செங்கிஸ்தான் பிரித்து கொடுத்த நான்கு பகுதிகளில், மூன்று பகுதிகள் முஸ்லிம் மங்கோலிய மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அத்தோடு செங்கிஸ்தான் தோற்றுவித்த மங்கோலிய பேரரசும் காலப்போக்கில் முடிவுக்கு வந்தது.
பெர்கேவின் காலத்திற்கு பிறகு, செங்கிஸ்கானின் வழி தோன்றல்கள் பலரும் இஸ்லாமின்பால் வந்தனர். தைமூர், பாபர் என இந்த லிஸ்ட் பெரியது என்பதும், மிகப்பெரிய நிலப்பரப்புகளை அவர்கள் ஆண்டனர் என்பதும் நாம் எல்லாம் நன்கறிந்த வரலாறு.


இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு

உதவி செய்தவர் விபத்து ஒன்றில் இறந்து விட அவரது குடும்பத்தை உதவி பெற்றவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு


Thursday, June 25, 2020

கண்ணியமிக்க அதிரை அப்துல் காதிர் ஆலிம்ஸா

தமிழகத்தின் தப்லீஃகின் அமீர்ஸாஹிப் கண்ணியமிக்க அதிரை அப்துல் காதிர் ஆலிம்ஸா அவர்கள் இன்று ( 25-06-2020 ) சற்று நேரத்திற்கு முன்பு இறந்து விட்டார்கள். . .
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்.
நான் சிறு வயதில் 9, 10 ஆம் வகுப்புகளில் படித்து வந்தபோது எங்கள் ஊருக்கு தப்லீக்கில் வந்து தங்கியிருந்தபோது அமீர் சாஹிபோடு அறிமுகம் ஏற்பட்டது. எப்போதும் சிரித்த முகத்தோடு நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அசராது பதிலளிக்கக் கூடியவர். பள்ளிகளில் படிக்கப்படும் 'தஃலீம் தொகுப்பு', 'தொழுகையின் சிறப்பு' போன்ற புத்தகங்களில் உள்ள கருத்துக்களில் பல முரண்பாடுகள் எனக்குள் இருந்தாலும். இவரைப் போன்றவர்களின் பணியை குறைத்து மதிப்பிட முடியாது. பல இளைஞர்களின் வாழ்வை திருப்பியதில் இவரைப் போன்றவர்களுக்கு பெரும் பங்குண்டு.
இறைவன் இவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை பரிசாக்கித் தருவானாக!


ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.


நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.


அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.


என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.


இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.


துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.


அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.


உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..

இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.

அன்பு ராஜ் என்ற வாழ்நாள் அடிமை ரவி சங்கரை பார்த்தாவது திருந்தட்டும்.


Wednesday, June 24, 2020

நேற்றைய தினம் அபார்ட்மெண்ட்டில் இரண்டு பேருக்கு நோய்த் தொற்று

குரோம்பேட்டையின் நான் வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் எங்களைத் தவிர மற்ற குடும்பத்தினர் ப்ராமணர்கள். நேற்றைய தினம் அபார்ட்மெண்ட்டில் இரண்டு பேருக்கு நோய்த் தொற்று இருப்பதைக் குறித்து எழுதியிருந்தேன். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதற்கு நடுவே அவரின் மனைவி மகள் எண்பது வயதைக் கடந்த அவரின் அம்மா எல்லோருக்கும் கொரோனா பாசிடிவ். பரிசோதனை செய்து பாசிடிவ் என்று வந்ததுமே மருத்துவமனையில் சேர்ந்திருக்க வேண்டும், அல்லது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். ஏ டி எம் சென்றிருக்கிறார். குப்பைக் கொட்டுவதற்காக வெளியே சென்றிருக்கிறார். இதெல்லாம் போதாதென அவர்கள் வீட்டிற்கு வழக்கமாக வேலைக்கு வரும் அக்காவிடம் விஷயத்தைச் சொல்லாமலேயே இரண்டு நாட்கள் வேலைக்கும் வரவைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு வீட்டில் நோய்த்தொற்று உள்ளவரை விசாரிக்க நகராட்சியிலிருந்த ஆட்கள் வர, அவர்கள் வரும் நேரமாக வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டு பிற்பகலுக்குமேல் திரும்பியிருக்கிறார்கள்.
நோய்த்தொற்று பரவத்துவங்கியதிலிருந்து எதையெல்லாம் செய்யவேண்டும் செய்யக் கூடாதென நொடிக்கொருமுறை அரசாங்கமும் ஊடகங்களும் எச்சரித்தபடியே இருந்தும் இவர்களின் இந்த மனநிலையை என்னவென்று செய்வது? இங்கு கிராமங்களில் இருந்து வருகிற மக்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள், நோய்த்தொற்று சந்தேகமென்றால் தானாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்வதோடு மருத்துவமனையிலும் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் காமன் சென்ஸ் படித்தவர்கள் நகரவாசிகளென சொல்லிக் கொள்கிறவர்களுக்கு ஏன் இருப்பதில்லை?
அந்த ஏ டி எம்மை எத்தனைபேர் அவருக்கு பிறகாக பயன்படுத்தி இருப்பார்கள்?
அந்த கடைக்கு எத்தனை பேர் வந்திருப்பார்கள் ?
இதையெல்லாம் விடுங்கள் அவர் உயிரோடு விளையாட அவருக்கு உரிமையுண்டு, வேலைக்கு வரும் அக்கா என்ன பாவம் செய்தார். அவருக்கு குடும்பமுண்டு. அவரது குடும்பத்தையும் சுற்றத்தாரையும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா?
இந்த நோய் இத்தனை தீவிரமாய் பரவியதன் பின்னால் இவர்களைப் போன்றவர்களின் திமிர்த்தனமே அதிகமிருக்கிறது. இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை, ஊரடங்கு நிலை தொடர்ந்தால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நினைக்கையில் மூச்சு முட்டுகிறது. இவர்களைப்போல் சென்னையில் சொந்த வீடும் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வருமானமும் உள்ளவர்கள் மற்றவர்களைப் பற்றிய கவலையில்லாமல் சுற்றினால் இன்னும் ஒரு வருடம் ஆனாலும் இந்த நோய்த்தொற்று குறையப்போவதில்லை.
Gargy Manoharan

இஸ்லாமாபாத்தில் அமைய இருக்கும் கிருஷ்ணன் கோவில்!

இஸ்லாமாபாத்தில் அமைய இருக்கும் கிருஷ்ணன் கோவில்!
பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அவர்கள் தங்கள் மத கடமைகளை செய்ய புதிதாக ஒரு கோவில் கட்டிக் கொள்ள அனுமதி வேண்டினர். பாகிஸ்தான் அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. மத விவகாரங்களுக்கான அமைச்சர் நூருல் ஹக் இதற்கான உத்தரவை பிறப்பித்து 20000 ஸ்கொயர் ஃபீட் நிலத்தை ஒதுக்கியுள்ளார். 10 கோடி ரூபாய் அரசு செலவில் இந்த கோவில் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் கூறினார்.
Islamabad: The Hindu community living in the Pakistan capital will soon get a temple and a crematorium. Currently, Hindus in Islamabad have to travel out of the city to perform religious rituals.
The Krishna temple will be constructed on a 20,000 sq ft plot at Islamabad’s H-9 sector area. The Islamabad Hindu Panchayat has named the temple as Shri Krishna Mandir.
According to Religious Affairs Minister Pir Noorul Haq Qadri, the government will bear the construction cost, presently estimated to be Rs 10 crore.
timesnownews
சன் நியூஸ்
25-06-2020
இஸ்லாமிய தேசம் என்று அறியப்படும் பாகிஸ்தானில் அரசு செலவில் கோவில் கட்டித்தரப்படுகிறது. ஆனால் மத சார்பற்ற நாடு என்று நம்மைக் கூறிக்கொண்டு இஸ்லாமியருக்கு சொந்தமான பாபரி பள்ளியை 'அங்குதான் ராமர் பிறந்தார்' என்ற பொய்யை கூறி இடித்து தரை மட்டமாக்கினர் சங்கிகள். பிறகு நீதி மன்ற உத்தரவையும் பொய்யாக பெற்று ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம். ஒரு இடத்தை திருடி அதில் ராமர் கோவில் கட்டினால் அந்த நாடு விளங்குமா? என்பதை பெரும்பான்மை இந்துக்கள் சிந்திக்க வேண்டும். பாபர் பள்ளி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களே முதலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.


கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!
'நான் ஒரு பொறியாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால் வருத்தமுற்றேன். ஆனால் தற்போது ஒட்டகங்களின் உதவியால் எங்கள் கிராமத்துக்கு புத்தகங்கள் வருகின்றன. அவற்றைப் பெற்று எங்களின் படிப்பை தொடருகிறோம்' என்கிறார் 13 வயதான மெஹதியா. இவர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்.
ஒவ்வொரு முறையும் 200 புத்தகங்களை ஒட்டகங்கள் சுமந்து வருகின்றன. சுழற்சி முறையில் அவற்றை கிராம மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். வறுமையை காரணம் காட்டி இவர்கள் படிப்பை தூரமாக்கவில்லை. இவர்களைப் பார்த்தாவது நமது கிராமங்களில் ஏழை மாணவ மாணவிகள் படிக்க உதவிகள் புரிவோம். திட்டமிடலோடு அவர்களின் கல்விக் கண்ணை திறக்க முயற்சிப்போம்.
தகவல் உதவி
அல்ஜஜீரா
ஒருமுறை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்று வரலாறுகளில் பார்க்கிறோம்.
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் (5231)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி (73)


" CORONA VIRUS "

" CORONA VIRUS " தொற்றாமல் இருக்க 1441 வருடங்களுக்கு முன்பே அழகிய வழிகாட்டலை உலகிற்கு கற்றுத்தந்த இறைதூதர் முஹம்மத் நபி ( ஸல்) அவர்கள் !
1) தனிமைப்படுத்தல் :
நபிகளாரின் ஒரு அறிவுரையாகும்.
"சிங்கத்திடமிருந்து வெருண்டோடுவது போன்று தொற்று நோயாளிகளிடமிருந்தும் விலகி ஓடிவிடுங்கள்."
புகாரி - பாகம் 7, நூல் 71, எண் 608
2) சமூக விலகல் :
நபிகளாரின் அறிவுரையாகும்.
"தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
புகாரி 6771, முஸ்லிம் 2221
3) பயணத்தடை :
நபிகளாரின் அறிவுரையாகும்.
தொற்று நோய் பரவியிருக்கும் பகுதிக்குள் செல்லாதீர்கள். அவ்வாறே தொற்று நோய் பரவியுள்ள பகுதியிலிருந்து வெளியேறாதீர்கள்.
புகாரி 5739, முஸ்லிம் 2219
4) பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள் :
உங்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் .
நபி (ஸல்) கூறியுள்ளார்கள்..." பிறருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்".
இப்னு மாஜா 2340
5) வீட்டில் இருத்தல் :
நபிகளாரின் அறிவுரையாகும்.
தங்களையும் பிறரையும் பாதுகாப்பதற்காக வீட்டிலேயே தங்கி இருந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பவர்களாவர்.
முஸ்னத் அஹமத், ஸஹீஹ்
6) வீடே பள்ளிவாசல் :
தேவையான. காலகட்டங்களில்.
நபி (ஸல்) கூறினார்கள்..."முழு உலகும் தொழும் இடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, கல்லறைகளையும் கழிவறைகளையும் தவிர."
திர்மிதி; அஸ்ஸலாஹ்..291
7) நிவாரணம் உண்டு
பொறுமை அவசியம்.
நப(ஸல்) கூறியுள்ளார்கள் - "நிவாரணத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அனுப்புவதில்லை."
புகாரி பாகம் 7, நூல் 71, எண் 582.
8) சிகிச்சை செய்வோம்.அல்லாஹ் குணமளிப்பான்
நபி(ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் இருக்கின்றது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது எனில் அது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே நீங்குகின்றது.
முஸ்லிம் # 2204
9) முகக் கவசம்
நபிகளாரின் அறிவுரையாகும்.
"நபியவர்கள் தும்மும் போது தம் கைகளைக் கொண்டோ அல்லது தனது ஆடையைக் கொண்டோ முகத்தை மூடிக் கொள்வார்கள்"
அபுதாவூத், திர்மிதி (பாகம் 43, எண் 269),
10) வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளைக் கழுவுங்கள்
நபி(ஸல்) கூறினார்கள் : தூய்மை ஈமானில் பாதியாகும்.
முஸ்லிம் 223.
11) வீட்டில் தனித்திருத்தல் :
நபிகளாரின் அறிவுரையாகும்
தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் வீட்டிலேயே பொறுமையுடனும் கூலியை எதிர்பார்த்தும், அல்லாஹ் தனக்கு விதித்துள்ளதைத் தவிர வேறு எந்த ஒன்றும் தன்னை அணுகாது என்றும் காத்திருந்தால், ஒரு உயிர்தியாகியின்(ஷஹீத்) கூலியை அவர் அடைந்து கொள்வார்.
முஸ்னத் அஹமத், ஸஹீஹ், புகாரி 2829, முஸ்லிம் 1914...


சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இருக்குதடி பாப்பா!
உடுமலை சங்கர் சாதிய படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும், மணிகண்டன்,தன்ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற உத்தரவுபடி கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.சிறை வாசலில் சாதி அமைப்புகள் சின்னச்சாமிக்கு சால்வை அணிவித்து கௌரவித்து அழைத்து சென்றனர்


Tuesday, June 23, 2020

ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.

ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் தேர் இழுத்தனர்.
இதனால் எல்லாம் கொரோனா பரவாதா என்று கேட்டால் நீங்கள் தேச துரோகியாக்கப்படுவீர்கள்!.


தற்கொலையை தூண்டுகிறாரா வள்ளுவப் பெருந்தகை!

தற்கொலையை தூண்டுகிறாரா வள்ளுவப் பெருந்தகை!
ஒரு மனிதனுக்கு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பழிச் சொற்கள், அவதூறுகள் வாழ்வில் தினம் தினம் சந்திக்க வேண்டி வரும். அவ்வாறு இடர்பாடுகளை சந்திக்க நேரும் போது அவனுக்கு தைரியம் கூறி எதிர் நீச்சல் போட கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து மானம் பெரிதென்று உயிரை விட அறிவுறுத்துவதென்பது ஏற்புடைய செயலாக தெரியவில்லை.
வள்ளுவர் பல சிறந்த கருத்துக்களை கூறியுள்ளார் என்பது மறுப்பதற்கில்லை. ஒருக்கால் இது போன்ற குறள்கள் இடைச் செருகலாகக் கூட இருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன்.
இனி... குறள்களைப் பார்போம்.
குறள்:968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
குறள் விளக்கம்:
மானம்கெட வந்தவிடத்து, உயிரை விடாது, உடம்பைக் காக்கும் வாழ்கையானது, சாவாமல் காக்கும் மருந்தாகுமோ?
---------------------------------------------
குறள்:969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
குறள் விளக்கம்:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
---------------------------------------------
குறள்:970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
குறள் விளக்கம்:
மானக்கேடு வந்தால் உயிர்வாழ முடியாத மானமுடையவரது புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.


நான் கண்டு மெய்சிலிர்த்து நின்ற ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்.

பகரைனில் மே மாதம் 26 ம் தேதி நான் கண்டு மெய்சிலிர்த்து நின்ற ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்.
Covid -19 நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த இரண்டு இந்தியரின் (ஹிந்துக்கள்) வீட்டாரும் கேட்டு கொண்டதற்கிணங்க பகரைன் அரசு இருவரின் பூத உடலை எரியூட்ட ஒப்புதல் தெரிவித்து , ஹிந்து மயானத்திற்கு உடல்களை அனுப்பிவைத்தது. ( அரபு நாட்டில் ஹிந்து மயானமா என்று கேட்பவர்களுக்கு. பகரைன் அரசு இங்கு பிழைப்புக்கு வந்து வாழும் ஹிந்து மக்களுக்கு அவர்கள் உடலை எரித்து கொள்வதற்காக மயானம் ஓன்றை இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது . அதனை வட இந்திய பாட்டியா சமுதாய சங்கம் ஒன்று நிர்வகிக்கிறது. விறகால் எரிக்க படுகிறது. ஓரு உடலை எரிக்க சுமார் 50,000 ரூபாய் பாட்டியா சமூகம் நடத்தும் சங்கத்தினருக்கு கட்டவேண்டும்.)
உடல் வந்து சேரும் முன்பே சுடுகாட்டை அடைந்த நான் உட்பட நான்கு பேரும் அங்கிருந்த காவலாளியும் COVID உடலை எப்படி எரியூட்டுவது , யார் உடலை எடுத்து வைப்பது என்ற குழப்பத்திலும் பயத்திலும் நின்றிருந்தோம். COVID 19 நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்த உடலை எரிப்பது அன்றுதான் முதன் முறையாக நடக்க இருந்தது.
சற்று நேரத்தில் காவல்துறை மற்றும் civil defense எனப்படும் தீயணைப்பு துறை வண்டிகள் வரிசை கட்ட , ஒரு ஆம்புலன்சில் முறையாக plastic sheetல் சீலிடப்பட்ட இரண்டு உடல்கள் வந்தன. தீயணைப்பு துறை வீரர்கள் எங்களை யார் எவர் என்று கேட்ட பின் சுடுகாட்டில் இருந்து வெளியேற்றி சற்று தொலைவில் நிற்க வைத்து , சுடுகாட்டின் பெரிய கதவுகளை திறந்து வைத்து நடப்பதை நாங்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.
ஏழு வீரர்கள் முழு பாதுகாப்பு உடையுடனும், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்து உள்ளே சென்று காவலாளியை அழைத்து சற்று நேரம் விவாதித்து விட்டு அவருக்கும் பாதுகாப்பு உடைகளை அணிவித்து சற்று தள்ளி நிற்க வைத்து விட்டு, ஏழு வீரர்கள் மட்டும் உடல்களை ஆம்புலன்சில் இருந்து இறக்கி ஏற்கனவே தயாராக இருந்த சிதையின் மேல் பூவை வைப்பது போல் மெல்ல வைத்துவிட்டு, உடம்பின் மீது விறகுகளை மிக மெதுவாக அடுக்கினார்கள். பின் காவலாளி (ஹிந்து ) கையில் சுமார் 10 அடி நீளம் இருந்த கம்பியில் தீ பந்தை கொடுத்து தீ வைக்க சொன்னார்கள்.
நடந்தவைகளை பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்த எங்களை இந்நிகழ்வு உணர்ச்சிவயப்பட்டு மெய்சிலிர்கக வைத்தது, எரியூட்டபட்ட உடல்களை முழுவதுமாக தீ சூழும் வரை அந்த ஏழு வீரர்களும் சிதையில் இருந்து சற்று தூரத்தில் Attention Position ல் சுமார் 10 நிமிடம் வரை அமைதியாக நின்ற காட்சிதான்.
இப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் அனைவரும் அரேபிய முஸ்லிம்கள். உடலை எரிப்பது என்பது அவர்களுக்கு புதிது , ஹிந்துக்களின் எரியூட்டும் மத சடங்கை பார்த்திருக்கவும் வாயப்பில்லை. மனிதநேயம் தான் அங்கே விஞ்சி நின்றது. COVID19 உடல் என்பதற்காக பயப்படாமலும், மாற்றுமத சடங்கை நாம் செய்கிறோமே என்று சங்கடபடாமல் முழு மரியாதையுடனும் அவர்கள் தகனம் செய்த விதம் என் நாட்டில் மதங்களின் பெயராலும், COVID 19 பெயராலும் நடக்கும் அவலங்களை எனக்கு நினைவுபடுத்தி தலைகுனிய செய்தது.
எம்ஜிகே.முகம்மது ஹூசைன் மாலிம்,
நிறுவனர், ( நாகப்பட்டினம் மேநாள் சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் M.G.K. நிஜாமுதீன் அவர்களின் அண்ணன்)
பாரதி தமிழ் சங்கம், பகரைன்.