Followers

Tuesday, December 01, 2015

பலதார மணம் - கேள்விக்கென்ன பதில்?

பலதார மணம் - கேள்விக்கென்ன பதில்?

//அண்ணே உங்கள் வழமையான தக்கியாதானே திசை மாற்றுவது
ஒரு தார மணத்தை வலியுறுத்துவது எந்த குரான் சூரா ஆதாரம் Plz//

@Yogarajh Sayan

அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அடிமைப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும்.

(திருக்குர்ஆன்: 4:3)

உங்கள் கேள்விக்கான பதிலை கொடுத்து விட்டேன். நீதமாக நடக்க முடியாது என்று நினைத்தால் ஒரு பெண்ணை மாத்திரமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குர்ஆன் இடும் கட்டளையை பார்க்கவும்.

மேலும் இந்த வசனம் இறங்கிய தருணத்தையும் பார்க்க வேண்டும்.

திருமறையின் இந்த திருவசனம் உஹது போருக்குப்பின் அருளப்பட்டதாகும். உஹது போரின்போது பல முஸ்லிம்கள் இறந்து விட்டனர். இதனால் பல பெண்கள் அநாதைகளாகவும், விதவைகளாகவும், காப்பாளர்கள் அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காத்திட வேண்டியது எஞ்சிய முஸ்லிம்களின் கடமையாக இருந்தது. அப்போது தான் திருக்குர்ஆன் இந்த வசனத்தின் வழி வாழ்விழந்தோருக்கு பாதுகாப்பு வழங்கியது. ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள் அநீதிகளை இழைத்திடாமல் தடுத்திடவே இந்த இறை வசனம் அருளப்பட்டது.

இந்தத் திருமறை வசனத்தை ஊன்றி கவனித்தால் பல உண்மைகள் புலப்படும். முதலில் பலதார மணத்தை இஸ்லாம் கண்டுபிடித்து திணிக்கவில்லை. இரண்டாவது மேலே சொன்ன நிபந்தனைகளை விதித்ததின் மூலம் அது பலதார மணத்திற்கு (ஒரு விதி என்ற வகையில்) ஊக்கம் தரவில்லை. மூன்றாவதாக இஸ்லாம் பலதார மணத்தை தடை செய்யவில்லை. ஏனெனில் அவ்வாறு தடை செய்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. தடை விதித்தால் அது நடப்புக்குதவாத ஒரு கோட்பாடு என்றுதான் ஆகிவிட்டிருக்கும். மக்கள் தொடர்ந்து பலதார மணங்களை நிறைவேற்றிக் கொண்டுமிருந்திருப்பார்கள். இஸ்லாம் இதுபோன்ற நடப்பிற்கு வராத கோட்பாடுகளின் குவியலல்ல. அது வாழ்வில் நடைமுறைப்படுத்த தகுந்தது. நடத்திக் காட்டிடத்தான் இஸ்லாம் அருளப்பட்டது.

பலதார மணம் பல மதங்களிலும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளதை கீழே ஆதாரங்களோடு பார்போம்.

1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).

2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).


3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).

4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).

5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.

6.'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).

7.ஒரு பார்பனர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)

8.கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

9.அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.

10.ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.

11.முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

இந்த பதிவை எழுதியதால் எல்லோரும் பலதார மணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வருவதாக யாரும் நினைக்க வேண்டாம். இறைவனின் கட்டளையானது எந்த காலத்திலும் ஏதோ ஒரு வகையில் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும் என்ற கருத்தையே சொல்ல வந்தேன்.

No comments: