Followers

Tuesday, December 08, 2015

வெள்ளம் பாதித்த கோயில்களை சுத்தப்படுத்திய முஸ்லிம்கள்!



சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயிலை முஸ்லிம் தன்னார்வலர்கள் சுத்தம் செய்ததனர். அவர்களது செயல் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஜம்மாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

கடந்த 2 நாட்களில் அவர்கள் கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் இருவேறு கோயில்களையும் மசூதிகளையும் சுத்தம் செய்தனர். இந்த இடங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்தன.

இந்த அமைப்பைச் சேர்ந்த முதுகலை பொறியியல் மாணவர் பீர் முகமது நம்மிடம் இது குறித்து கூறும்போது, "இந்துக்கள் கோயில்களுக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்தோம். அதனால் அந்த கோயில்களை சுத்தம் செய்தோம். அந்த 2 கோயில்கள் இருந்த தெருக்களும் மிகவும் மோசமான நிலையில் நிவாரணம் சென்றடைய முடியாத சூழலில் இருந்தது.

நாங்கள் பணிகளில் ஈடுபட்டபோது அங்கிருந்த மக்களும் யார் எவரென்று பாராமல், உடன் வந்து உதவியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.

வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் வழிபாட்டு தளங்களை சுத்தம் செய்ய உள்ளோம்." என்றார்.

08-12-2015

1 comment:

Dr.Anburaj said...

congratulationsபாராட்டுக்கள். நிவாரணப்பணியில் ஈடுபடும் அநேக மக்கள் தங்களை சாதி மத அடிப்படையில் பிாித்துப் பாா்கக அவசியம் இன்றி பணியாற்றுகின்றாா்கள்.தாங்கள்தான் முஸ்லீம்கள் என்ற பதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றீா்கள்.