133 கோடி ரூபாயை அகல் விளக்கில் செலவழித்த யோகி அரசு!
உத்தர பிரதேசத்தின் சரயு நதியில் சென்ற 27-10-2019 அன்று 6 லட்சம் அகல் விளக்குகளை அரசு செலவில் ஏற்றி தீபாவளியை கொண்டாடியுள்ளது யோகி அரசு. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமாம்.
இதே உத்தர பிரதேசத்தில்தான் மதிய உணவு குழந்தைகளுக்கு தொட்டுக் கொள்ள உப்பு கொடுக்கப்பட்டது. அதற்கான காரணம் நிதி பற்றாக்குறை என்றும் சொல்லப்பட்டது.
வறுமையில் உழலும் ஒரு மாநிலத்துக்கு அகல் விளக்கை ஏற்ற 133 கோடி ரூபாயை செலவழிப்பது சரிதானா என்று கேட்டால் நீங்கள் தேச துரோகியாக்கப்படுவீர்கள்.
1 comment:
ஏழைகள் வீட்டிற்கு தலா
ஒரு குத்து விளக்கு அளிக்கலாம்.
இந்துக்களுக்கு அமைதியாக அமா்ந்து இருந்து வழிபாடு செய்யும் பயிற்சி இல்லை. அதுமிகவும் முக்கியம்.
Post a Comment