Followers

Saturday, October 19, 2019

சவுதி அரேபியாவுக்கு வருகை புரிந்த ஷாரூஃக் கான்!


சவுதி அரேபியாவுக்கு வருகை புரிந்த ஷாரூஃக் கான்!

சவுதியில் சினிமா தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை சவுதி அரசு எடுத்து வருகிறது. அதில் ஒரு முயற்சியாக ஜாக்கி சான், ஷாரூஃக் கான் போன்றவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியா வந்திருந்தனர். அவ்விழாவில் பேசிய ஷாரூஃக் கான்.....

'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்)

அஸ்ஸலாமு அலைக்கும்.... (உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!) முதன் முறையாக சவூதி அரேபியாவுக்கு வருகை புரிந்துள்ளேன். இவ்விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை புரிந்ததால் எனது நண்பர் ஜாக்கி சானையும் மற்றும் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஷா அல்லாஹ்... இனி சினிமா துறையின் மூலம் சவூதி அரேபியாவின் பல சரித்திர உண்மைகள் வெளி உலகுக்கு தெரிய வரும். சினிமா என்ற இந்த அறிவியல் தொழில்நுட்பம் அதற்கு உதவிகரமாக இருக்கும். இவ்விழாவில் என்னiயும் பங்கேற்க அழைத்தமைக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி'










1 comment:

vara vijay said...

Kaafir cinema. Allah banned music, so now suvi also a kaffir like me.