Followers

Saturday, October 05, 2019

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உதவியால் இஸ்லாத்தை ஏற்றேன்!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உதவியால் இஸ்லாத்தை ஏற்றேன்!
'எனது பெயர் மைக்கேல் கமிங். தற்போது எனது பெயர் உபைதா. அமெரிக்காவின் கென்டகியில் ஆசாரமான ஒரு கிருத்தவ குடும்பத்தில் பிறந்தேன். ஆரம்பத்திலிருந்தே பைபிளில் பல கேள்விகள் எனக்குள் எழுந்தது. எனது சந்தேகத்தை எனது உறவினர்களோ பாதிரிகளோ தீர்த்து வைக்கவில்லை. எனவே கிருத்துவ மதத்திலிருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தேன்.
(I looked into everything from Mormon to Rastafarian, but during the election of trump and all the hatred that came with it, it peaked my interest to find out what Muslims actually believe because all I really knew was what you see on TV and movies.
So I proceeded to research and to ask Muslims what they believe. I ordered a Quran and just started to read.)
இந்த நேரத்தில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது பார்த்தாலும் இஸ்லாமியர்களை குறை கூறி கொண்டிருப்பது எனது கவனத்திற்கு வந்தது. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அதுதான் இஸ்லாம் என்று நம்பியிருந்தேன். ட்ரம்பின் வெறுப்பு பேச்சுக்குப் பிறகு முஸ்லிம்களைப் பற்றி ஆராய ஆரம்பித்தேன். இஸ்லாமியர்களோடு நெருங்கி பழகினேன். குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசித்தேன். எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. முஸ்லிமாக மாற முடிவு செய்தேன். எனது பெயரை உபைதா என்று மாற்றிக் கொண்டேன்.
இஸ்லாத்துக்கு மாறவிருக்கும் எனது முடிவை எனது தாயாரிடம் சொன்னேன். அவர் இதனை விரும்பவில்லை. எனது நெருங்கிய உறவினர்கள் என்னை வெறுக்க ஆரம்பித்தனர். பலரின் நட்பை இழந்தேன். ஆனால் இன்று உலகம் முழுக்க 1.7 பில்லியன் இஸ்லாமிய சொந்தங்கள் எனக்கு கிடைத்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!
நான் தற்போது இறைவனிடம் கேட்பதெல்லாம் எனது நண்பர்களும், எனது குடும்பமும் எனது தாயாரும் இந்த சத்திய இஸ்லாத்தை புரிந்து அவர்களும் நேர் வழிக்கு வர வேண்டும் என்பதே. எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!
தகவல் உதவி
allamericanmuslim
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்


No comments: