Followers

Monday, October 07, 2019

அசுரன்

அசுரன்
சமூக அக்கறையுள்ள இது போன்ற படங்கள் வந்தால் நேரம் ஒதுக்கி பார்ப்பேன். அந்த வகையில் நேற்று அசுரன் படம் பார்த்தேன். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலியில் இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல துயரங்களை அனுபவித்து வருவதை இயக்குனர் வெற்றி மாறன் அழகாக சொல்லியுள்ளார்.
தனது சொந்த செலவில் செருப்பு வாங்கி போட்டு வருவதை காண சகிக்காத மேல் சாதியினர் அந்த செருப்பை தலையில் தூக்கி வைத்து நடக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பதாகட்டும், தனது தந்தையை ஊர் மக்கள் காலில் விழுந்து போகச் சொல்லும் ஆதிக்க தனமாகட்டும் எல்லாம் இன்றும் பல கிராமங்களில் நடந்து வருகிறது. தவறிழைத்தவர்களை விட்டு விட்டு அப்பாவிகளின் குடிசைகளை கொளுத்துவது, என்பதனை சமீப காலத்தில் கூட பார்த்தோம். எனவே சமூகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையே படத்தில் இயக்குனர் காட்டியுள்ளார்.
தேவர்களும், வன்னியர்களும், கவுண்டர்களும் தலித்களை கேவலமாக பார்த்தால் அதே சாதி வெறியோடு பார்பனர்கள் ஒட்டு மொத்த பிற்படுத்தப்பட்ட மக்களையும் சூத்திரர்கள் என்று கூறி மொத்தமாக அசிங்கப் படுத்துகின்றனர். படிப்பறிவு இல்லாத காலத்தில் ஓகே. படித்து பட்டம் பெற்று கவுரமான வேலையில் அமர்ந்த பின்னும் இந்த சாதி வெறி இவர்களிடம் ஏன் ஒழியவில்லை?
அதற்கு காரணம் கடவுளின் பெயரால் இவர்கள் இயற்றி வைத்திருக்கும் இதிகாசங்களும், புராணங்களும், ஸ்மிருதிகளும். இந்த மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் சாதி வெறியை நியாயப்படுத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு பொது வெளியில் மலம் கழித்த தலித் சிறுமிகளை அடித்தே கொன்ற கயவர்களை காவல் துறை விசாரித்த போது அலட்சியமாக 'கடவுளின் சட்டம் அது. அதனை செயல்படுத்தினேன்' என்கிறான் தெனாவட்டாக. கழிப்பிடம் கட்டித் தராத நகராட்சியையோ, அரசியல் வாதிகளையோ இவனது கடவுளின் சட்டம் ஒன்றும் செய்யாது. கழிப்பிட வசதி ஒழுங்காக இருந்தால் இவ்வாறு அந்த பெண்கள் பொது வெளியில் மலம் கழிப்பார்களா?
இன்று அண்ணா பல்கலைக் கழகத்தில் 'பகவத் கீதை' பாடமாக மாற்றப்பட்டுள்ளது. வர்ணங்களை நானே படைத்தேன் என்று சாதி வெறிக்கு தூபம் போடும் ஒரு புத்தகத்தை இவ்வாறு பாட நூலாக வைக்கலாமா? என்று பலரும் கேட்டும் ஆளும் பாஜக அதனை பாடமாக்கியுள்ளது. இனி வருங்காலங்களில் மனுஸ்ருமிதியையும் பாட நூலாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாட்டுக் கறி வைத்திருந்தான் என்று பொய் கூறி சக மனிதனை மிருக வெறி கொண்டு தாக்குவதும், 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று சொல்லி கும்பலாக சென்று தாக்குவதும் எதனால் ஏற்படுகிறது. மனு ஸ்ருமிதி, போன்றவைகள் இந்துத்வாவாதிகளால் புனிதமாக போற்றப்படுவதாலேயே இவை எல்லாம் நிகழ்கிறது.
'நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் சொல்வது போல் மூல காரணத்தை ஆராயாமல் அதனை களையாமல் எத்தனை படங்கள் எடுத்தாலும், எந்த அளவு படித்தாலும், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் தீண்டாமைக் கொடுமையை ஒழித்து விட முடியாது. கால காலமாக தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.


1 comment:

vara vijay said...

Islam is certainly not a solution for caste system in India. If so Dr. Ambedkar would have chooses Islam however he opted Only Indian origin Buddisim as a answer for caste system harrassment. So suvi dont propagate your religion under disguise. Same movie showed how caste system is crippling also. Why dont you comment about it.