Followers

Monday, October 28, 2019

ஆலிம்கள் அட்வகேட் ஆனபோது...

ஆலிம்கள் அட்வகேட் ஆனபோது...
இரண்டு தினங்களுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்ற வளாகம் மகிழ்ச்சியால் திளைத்தவர்களால் நிரம்பி வழிந்தது...
மார்க்க கல்வி பயின்ற ஆலிம்கள் மூவர் பின்னர் சட்டம் படித்து தேர்வாகி தங்களை வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய எர்ணாகுளம் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் விண்ணப்பித்தனர்...
Adv. ஹம்சா ஸக்காஃபி
Adv. ரிஃபாய் ஸக்காஃபி
Adv. அறபாத் ஸக்காஃபி
ஆகியோர் வழக்கறிஞர் பணியை துவங்குவதை காண பெற்றோர்களும், உறவினர்களும், உஸ்தாதுகளும் குழுமி பெருமகிழ்ச்சி அடைந்தனர்...
பள்ளிவாசல் மிம்பர் மேடைகளில் ஆலிம்களாக சமூக அவலங்களுக்கு எதிராக ஒலித்த குரல்கள் நீதிமன்ற அறைகளில் அநீதிக்கு எதிராகவும் ஒலிக்க இறைவன் அருள் புரியட்டும்...
தமிழகத்தில் நமது மதரஸாக்களில் இது போன்று அரசு பாடத் திட்டங்களையும் கொண்டு வந்து ஆலிம்களை உலக அறிவு படைத்தவர்களாக மாற்ற வேண்டும். 7 வருடம் படித்து முடித்து விட்டு ஐந்துக்கும் பத்துக்கும் ஃபாத்திஹா ஓதி மார்க்கம் காட்டாத வழியில்தான் தங்களின் பொருளாதாரத்தை ஈட்டுகின்றனர் தற்கால ஆலிம்கள். இந்நிலை மாற நிர்வாகிகள் முயற்சி எடுப்பார்களாக!


1 comment:

vara vijay said...

What a comedy an alim should teach and obey only shariah but suvi is happy that they are advocates for kaffir law and constitution. So silly.