அதிகாரிகளின் அலட்சியம் மாணவிக்கு மருத்துவ கல்லூரி சீட் பெற்றுத்தந்த டிஎன்டிஜே வழக்கறிஞர் அணி.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 241 மதிப்பெண் பெற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஹோமியோபதி மருத்துவம் பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழக்கறிஞர் அணியின் முயற்சியால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
திருச்சி மாவட்டம் இலங்காகுறிச்சியில் வசிக்கும் முஹம்மது முஹ்யித்தீன் - பைரோஸ் தம்பதியின் மகள் சுமையா பர்வீன்.
இவர் பதினோராம் வகுப்பில் 1130 மதிப்பெண்ணும் பன்னிரெண்டாம் வகுப்பில் 1069 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்டிருந்த சுமையா பர்வீன் நீட் கோச்சிங்கிற்கு செல்ல குடும்பத்தின் ஏழ்மை நிலை தடுத்தது. இருந்தும் மனம் தளராமல் வீட்டில் இருந்தபடியே படித்து நீட் தேர்வில் 241 மதிப்பெண்கள் எடுத்தார்.
ஹோமியோபதி மருத்துவ (BHMS) கவுன்சிலிங்கில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடந்த 10.09.2019 அன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கு நரகத்திற்கு பதிவு தபாலில் விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார்.
அந்த விண்ணப்பம் 12.09.2019 அன்று முறையாக அவர்களைச் சென்றடைந்தது. ஆனால் கடந்த 24.09.2019 அன்று வெளியான கவுன்சிலிங் லிஸ்டில் சுமையா பர்வீன் பெயர் இல்லை. இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுமையா பர்வீனின் தந்தை உடனடியாக ஊரிலிருந்து கிளம்பி சென்னை அரும்பாக்கம் வந்து ஹோமியோபதி இயக்குநரக அதிகாரிகளை அணுகி கேட்டபோது உங்கள் மகளின் விண்ணப்பம் எங்களுக்கு வரவில்லை என்று அலட்சியமாக கூறி அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.
மருத்துவக் கனவு நிராசை ஆகி விடும் அபாயத்தை உணர்ந்த சுமையாவின் குடும்பத்தினர் தங்கள் உறவினர் சிராஜ் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில வழக்கறிஞர் அணியை சார்ந்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் இக்பால் அவர்களை அணுகினர்.
மருத்துவக் கனவு நிராசை ஆகி விடும் அபாயத்தை உணர்ந்த சுமையாவின் குடும்பத்தினர் தங்கள் உறவினர் சிராஜ் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில வழக்கறிஞர் அணியை சார்ந்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் இக்பால் அவர்களை அணுகினர்.
ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலிங் 26.09.2019 முதல் 28.09.2019 வரை நடைபெற இருந்தது. குறுகிய கால அவகாசமே உள்ளதை உணர்ந்த வழக்கறிஞர் இக்பால் உடனடியாக கடந்த 27.09.2019 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
பிரபல மூத்த வழக்கறிஞர் எஸ்.எம்.ஏ ஜின்னா அவர்கள் சிறப்பாக வாதாட நீதியரசர் வி.சுந்தர் அவர்கள் சுமையா பிரிவினை ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலிங்கில் சேர்க்க உத்தரவிட்டார் சுமையா விண்ணப்பம் கடந்த 12.09.2019 அன்று முறையாக டெலிவரி செய்யப்பட்ட Postel Acknowledgement Trackஐ சுட்டிக்காட்டிய நீதியரசர் நீட் தேர்வில் 107 மதிப்பெண் பெற்ற மாணவரெல்லாம் கவுன்சிலிங் செலக்ஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும் போது 241 மதிப்பெண்கள் பெற்ற சுமையா கண்டிப்பாக கவுன்சிலிங்கில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
சாதகமான தீர்ப்பை பெற்றாலும் நீதிமன்ற உத்தரவு நம் கையில் கிடைக்க பல நாட்கள் ஆகும் இது தான் இன்றைய நீதிமன்றங்களின் நிலை வழக்கின் தீர்ப்பு நாள் 27.09.2019 கவுன்சிலிங் கடைசி நாள் 28.09.2019 பதட்டமான சூழ்நிலையில் மிகுந்த போராட்டத்திற்குப் பின் நீதிமன்ற தீர்ப்பை வழக்கறிஞர் இக்பால் உடனே பெற்று சுமையையும் பெற்றோரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ரிட் மனு தாக்கல் செய்யக் கூட வசதியில்லாத சுமையா வின் ஏழ்மையை உணர்ந்து வழக்கிற்கான முழு செலவையும் வழக்கறிஞர் இக்பால் அவர்களே ஏற்றுக் கொண்டதும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே திறம்பட வாதாடி மூத்த வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் சுமையாவிற்கு சாதகமாக உடனடி தீர்ப்பை பெற்றுத் தந்ததும் இங்கு நன்றியுடன் குறிப்பிட வேண்டிய நெகிழ்ச்சியான உண்மைகள்.
ரிட் மனு தாக்கல் செய்யக் கூட வசதியில்லாத சுமையா வின் ஏழ்மையை உணர்ந்து வழக்கிற்கான முழு செலவையும் வழக்கறிஞர் இக்பால் அவர்களே ஏற்றுக் கொண்டதும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே திறம்பட வாதாடி மூத்த வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் சுமையாவிற்கு சாதகமாக உடனடி தீர்ப்பை பெற்றுத் தந்ததும் இங்கு நன்றியுடன் குறிப்பிட வேண்டிய நெகிழ்ச்சியான உண்மைகள்.
நீதிமன்ற தீர்ப்பை எடுத்துவந்து 28.09.2019 அன்று காலை 6 மணிக்கே சென்னை அரும்பாக்கம் கவுன்சிலிங் மையத்திற்கு வந்த சுமையாவிற்கு காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி.
நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு கிடைத்தால் போதாது எங்களுக்கு தனியாக வர வேண்டும். அப்போதுதான் உங்களை கவுன்சிலிங்கில் அனுமதிப்போம் என்று அதிகாரிகள் அடம்பிடிக்க உடனடியாக களமிறங்கிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது முகையித்தீன் தலைமையில் TNTJ வழக்கறிஞர் அணி அதிகாரிகளுக்கு உரிய முறையில் விளக்கிய உடன் கவுன்சிலிங் உடனே நடந்தது.
சுமையா பர்வீனுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தந்து அவரை கல்லூரிக்கு அழைத்துச் சென்று உடனடியாக அட்மிஷனும் போட்டு சுமையா பர்வீனின் கல்விக்காக நிதி உதவியும் செய்து அனுப்பி வைத்தது. புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே அல்ஹம்ந்துலில்லாஹ்
1 comment:
இது ஒரு மத பிரச்சனை அல்ல.
முஸ்லீம்களை யாரும் வெறுக்கவில்லை.
அதிகாரிகளின் கவனக்குறைவு அக்கறையின்மை -அரசு பணியாளர்களுக்குள்ள சிறப்பு குணம் - தான் காரணம்.
ஆனாலும் உயா்நீதிமன்றம் தலையிட்டதால்தான் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. பொது நன்மைக்கு உதவிட சிறந்த அமைப்புகள் முஸ்லீம்களுக்குள்ளது.
இந்துக்களுக்கு இப்படி ஒரு அமைப்பு இல்லை. இப்படியொரு சோதனை இந்து மாணவிக்கு ஏற்பட்டால் ??? பெரும்பாலும் .....தோல்விதான். தன் சமூக அக்கறையுள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
Post a Comment