Followers

Wednesday, October 23, 2019

தேசவிரோத வழக்கில் சங்கராச்சாரியாருக்கும் வாதாடிய அலி சகோதரர்கள்---::

தேசவிரோத வழக்கில் சங்கராச்சாரியாருக்கும் வாதாடிய அலி சகோதரர்கள்---::
"இந்திய நாடு மகாத்மா காந்தியின் ஜோபியில், மகாத்மா காந்தி மவுலானாவின் ஜோபியில்" என்று தந்தை பெரியார் மவுலானா முஹமது அலி ஜவ்ஹர் மற்றும் மவுலானா ஷவுகத் அலி சகோதரர்களை தன் இல்லத்தில் அவர் தாயாரிடம் அறிமுகம் செய்த போது கூறிய வார்த்தைகள். அதையே அன்று ஈரோட்டில் நடந்த மஜ்லிஸூல் உலமாவின் மாநாட்டிலும் (1920) பெரியார் முழக்கம் செய்தார். ஷவுகத் அலி பெரியார்
தாயாரின் கைகளை தன் தலைமேல் வைத்து "மிகப்பெரிய தேசிய வாதியின் தாயாராகிய நீங்கள் எங்களை ஆசீர் வதிக்கவேண்டும்" என்று வேண்டிய நிகழ்ச்சிகளை அன்று வாலண்டியராக கலந்து கொண்ட காயிதே மில்லத் தன் கட்டுரையில் பதிவிட்டுள்ளார்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத் அலி சகோதரர்கள், அஜ்மல்கான் போன்ற அனைவரும் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் தான் தங்கியிருந்தார்கள்.
மவுலானா முஹமத் அலி அவர்கள் இஙகிலாந்து சென்று சரித்திரம் மற்றும் சட்டம் படித்த பாரிஸ்டர் ஆவார்.
நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலையான மவுலானாவைப் பார்க்க தன் மூத்த மாமனார் வள்ளல் ஜமால் முகமது சாஹிபுடன் காயிதே மில்லத் அவர்கள் அலிகர் சென்றபோது காடிகானா என்றழைக்கும் வண்டிகள் நிறுத்தப்படுமிடத்தில் மவுலானா முஹமது அலி தன் மனைவியுடன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து மனம் வருந்தியதையும் பதிவிட்டுள்ளார்கள்.வட்டமேஜை மாநாட்டில் மகாத்மா காந்தியுடன் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்யும் மவுலானாவை சந்திக்க கராச்சி துறைமுகம் சென்ற காயிதே மில்லத்தும், ஜமால் முஹமது சாஹிபும் வழியனுப்பிய நிகழ்ச்சியையும் நெகிழ்ச்சியுடன் அக்கட்டுரையில் விவரித்துள்ளார்கள்.மவுலானாவை கட்டிலில் வைத்து கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தபோது “மவுலானா இந்த உடல் நிலையுடன் போகத்தான் வேண்டுமா? என்று வினவியதையும், அடைந்தால் நாட்டிற்கு சுதந்திரத்துடன் வருவேன் இல்லையென்றால் அங்கேயே மரணத்தை தழுவுவேன் “ என்று உறுதியுடன் கூறிச் சென்ற மவுலானா வட்டமேஜை மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பிற்குரியது. 1931 ஆண்டு இங்கிலாந்தில் மரணமடைந்து உடல் பாலஸ்தீனத்தில் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. (காண்க @Nazeer Suvanapriyan பதிவு)
1921-ஆம் ஆண்டில் கராச்சியில் நடந்த கிலபாத் மாநாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான மிகக் கடுமையான ஒத்துழையாமை தீர்மானத்தை மவுலானா முஹமது அலி முன் மொழிந்ததை மேடையில் இருந்த சாரதா பீட சங்கராச்சாரியார் உட்பட கலந்து கொண்ட அனைவருமே எழுந்து நின்று முழக்கமிட்டு ஆதரித்தார்கள். அரசின் இராணுவம், காவல்துறை, சிவில் சர்வீஸ் கல்வி நிலையங்கள் போன்ற பல துறைகளில் பணிசெய்வோர் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து ஆதரித்த காரணத்தால் சங்கராச்சாரியார் உட்பட எழுவர் மீது தேசவிரோத குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள்.கராச்சியில் நடந்த
The Great Karachi Trial என்று அழைக்கப்பட்ட வழக்கில் முழுமையாக குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டால் மரண தண்டனை அளிக்கப்படும் என்ற நிலையில் சங்கராச்சாரியார் உட்பட குற்றம் சாட்டப்பட்ட எழுவருக்கும் அலி சகோதரர்கள் அளித்த வாதங்கள் பிரிட்டிஷ் அரசை கதிகலங்க வைத்தன.
(வரும்....)
Dawood Miakhan அவர்களின் பதிவிலிருந்து.....







1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவில் கிலாபத் இயக்கம் முட்டாள்களால் துவங்கப்பட்டது.
அடிமுட்டாள்களால் ஆதரிக்கப்பட்டது. இந்துக்கள் அடிமுட்டாள்கள். 23ம் புலிகேசிகள் நிறைந்த சமூகம்.
கிலாபத் இயக்கம் தேவையில்லாத நடவடிக்கையாகும். கிலாபத் இயக்கத்தை முஸ்லீம்கள் நடத்தினார்கள்.இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளவில்லை என்று ஆகிவிடும். இந்துக்கள் தேசம் விடுதலை பெற வேண்டும் அடிமை வாழ்வு ஒழிய வேண்டும் என்று போராட்டம் நடததினார்கள். முஸ்லீம்கள் ”தன்னை-தங்களை” மட்டும் நினைத்து போராடினார்கள்.ஆகவே தங்களின் மத கொள்கை காரணமாக பாக்கிஸ்தான் என்று நாட்டை பிளந்து பெரும் இரத்தக்களறியில் நாட்டை பாழாக்கினார்கள். முஸலீம்கள் செய்த தியாகம் அரேபிய மத வல்லாதிக்க கனவை - உலகை தாருல் இசுலாம் ஆக்க வேண்டும் என்ற திட்டத்திற்கானது.முஸ்லீம்கள் சுதந்திரம் பெற போராடினார்கள் என்பது ஏமாற்று வேலை.