துப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்!
//He is a kaffir communisit. Ghats why he respect human beings butYou cant show a islamic people leader like this because they only give respect to Allah and his prophet and they treat others as slaves of Allah. And believe themselfmas agent of Allah.// - Vijay
சில நாட்களுக்கு முன்பு பினராய் விஜயன் நடிகர் மம்முட்டியோடு சர்வ சாதாரணமாக சகஜமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை வெளியிட்டிருந்தேன். அதற்கு பதிலளித்த விஜய் என்பவர் அவர் கம்யூனிஷ்ட். அதனால் அவ்வாறு நடந்து கொண்டார். இது போல் முஸ்லிம்கள் நடப்பார்களா? என்று கேட்டுள்ளார்.
உலகில் முதன் முதலாக தனது சீடர்களை தோழர்கள் என்று அழைத்தவர் நபிகள் நாயகம். நபிகள் நாயகத்திடமிருந்து கடன் வாங்கித்தான் கம்யூனிஷ்டுகள் 'தோழர்கள்' என்ற வார்த்தையையே கொண்டு வந்தனர்.
துப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்!
பொதுவாக துப்புறவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உடைகள் சுத்தமாக இருக்காது. கடுமையான வேலை காரணமாக உடைகளில் வியர்வை நாற்றமும் அடிக்கும். எனவே சமூகத்தில் இவர்களை ஒதுக்கியே வைத்திருப்பர். நம் நாட்டிலோ தோட்டிகள் என்று கூறி முற்றாக அவர்களை ஒதுக்கி வைத்திருப்போம். அந்த உடையோடு வந்தால் பல கோவில்களுக்குள்ளும் விடுவதில்லை.
ஆனால் இஸ்லாம் இதனை கண்டிக்கிறது. உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவு என்கிறது இஸ்லாம். சில நாட்கள் முன்பு நமது தமிழகத்தில் துப்புறவு தொழிலாளர்களை மண்டபத்துக்கு அழைத்து அவர்களோடு சமமாக அமர்ந்து இஸ்லாமியர் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டோம்.
அதே போல் இங்கு புனித மெக்கா பள்ளியின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ் அவர்கள் துப்புறவு தொழிலாளர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்கும் காட்சியை பார்க்கிறோம். மெக்கா பள்ளியின் இமாம் என்பவர் மிக முக்கிய பொருப்பில் உள்ளவர்.
கஃபாவின் பிரதம பேஷ் இமாம் மட்டுமல்லாது மக்காவின் பிரபல வர்த்தகருமான Shaykh Abdurrahman As Sudais அவர்கள் இந்த ஊழியர்கள் அமர்ந்திருந்த இடம் வந்தார்கள். படாரென நிலத்தில் உட்கார்ந்து விட்டார்கள். நோன்பை அந்த ஊழியர்களோடு திறந்து மகிழ்ந்தார்கள். நிர்வாக ஊழியர்களை பார்த்து இந்த தொழிலாளர்கள் மேல் கருணை காட்டும் படி வேண்டினார்கள்.
இறுதியாக அவர் தன் காரில் ஏறிச்செல்லும் முன் சொன்ன வார்த்தைகள் இவை. “இங்கே வேலை செயகிறார்களே இவர்களது வேலை போல் உன்னதமான மகத்தான வேலை உலகத்தில் வேறெங்கும் இல்லை. இவர்கள் இறைவனின் இல்லத்தின் ஊழியர்கள். இவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு நாம் பழகி கொள்ள வேண்டும்' எனவும் கூறிச் சென்றுள்ளார்.
உலகின் புகழ்பெற்ற இமாம் சுதைஷ். இவரது குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை. . இஸ்லாம் சமத்துவத்தை வெறும் வாயளவில் வைக்காமல் செயல்படுத்தியும் காட்டுகிறது.
1 comment:
இதெல்லாம் ஒரு பகட்டுத்தனம்.
பிறரை காபீர்என்று வெறுக்காதவனே மூமின்.
Post a Comment