Followers

Tuesday, October 15, 2019

வேறு சாதி இளைஞருடன் திருமணம்... மகளை எரித்துக் கொன்ற பெற்றோர்..

வேறு சாதி இளைஞருடன் திருமணம்... மகளை எரித்துக் கொன்ற பெற்றோர்..
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் ரெட்ல பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதான சந்தனா. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சந்தனா குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
ரெட்ல பள்ளி அருகே உள்ள பொடுமுடி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞரை கடந்த ஓராண்டாக சந்தனா காதலித்து வந்தார். காதல் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் இருவரையும் கண்டித்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சந்தனா, நந்தகுமார் இருவரும் அருகில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டு ஊர் திரும்பினர். இதனால் இருவரின் பெற்றோர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமாதானம் ஆவதுபோல் நடித்த சந்தனாவின் பெற்றோர், திருமணம் தொடர்பாக சில பாரம்பரிய சடங்குகளைச் செய்ய வேண்டும் எனக்கூறி மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மனைவி திரும்பி வருவார் என நந்தகுமார் காத்திருந்தார். வெள்ளிக்கிழமை முழுவதும் திரும்பி வராததால் போன் மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மனைவி குறித்து அவரது தாயாரிடம் நந்தகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் கூறிய தகவல் நந்தகுமாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சந்தனா திருமணம் ஆன வெள்ளிக்கிழமை இரவே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை எரித்து இறுதிச் சடங்குகள் செய்து முடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதை அடுத்து மனைவியை அவரது பெற்றோரே கொன்று உடலை எரித்துவிட்டதாக நந்தகுமார் குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து சந்தனாவின் பெற்றோருக்குச் சொந்தமான பண்ணையை, குப்பம் கிராம வட்ட ஆய்வாளர் கிருஷ்ணா மோகன், காவல் உதவி ஆய்வாளர் முரளி மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு சந்தனாவின் உடல் எரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. எரிந்த இடத்தைத் தவிர சிறு சாம்பல் கூட போலீசாருக்கு கிடைக்கவில்லை.
இதை அடுத்து சந்தனாவின் மரணத்தை சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்த பெண், பெற்றோரால் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
NEWS18
15-10-2019


7 comments:

Dr.Anburaj said...

சாதி கலப்பு திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொஞ்சம்தான் வந்துள்ளது.
இன்னும் சற்று காலம் போக வேண்டும்.பட்டணங்களில் பெரிய மாற்றம் வந்துள்ளது.


01.எந்த முஸ்லீம் தந்தையும் படிக்க அனுப்பிய தனது மகள் ”காதல்” செய்வதை
விரும்புவாரா ?
02.மகள் தனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொள்ள அனுமதிப்பாரா ?
03. வேறுசாதி போல் வேறு மதத்தைச் சோ்ந்த வாலிபரை மணக்க அனுமதி அளிப்பாரா ?
04.

இதையெல்லாம் தாங்களும் செய்யாத போது மற்ற இந்து பெற்றோர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்.
சாதி கலப்பு என்பதை விட மத கலப்பை முஸ்லீம்களும் மிகக்கடுமையாக வெறுக்கின்றார்கள்.சாதி கலப்பு பிரச்சனைக்குறியதாக உள்ளது.மதக்கலப்பு முஸ்லீம்கள் பிரச்சனைக்குரியதாக நினைக்கின்றார்கள்.

இந்துக்கள் மனம் பக்குவம் அடைந்து வருகின்றது. முஸ்லீம்கள் அரேபிய குருட்டு ஜெயிலுக்குள் அடங்கிக் கிடக்கின்றார்கள்.

Dr.Anburaj said...


சில விளக்கங்கள் அடிப்படையில் வேறு ஜமாத்தை பின் பற்றும்
ஒருவருக்கு ஏற்பட்ட கொடுமை.

Salam was the first Pakistani to win a Nobel Prize – here he is pictured at the ceremony in Stockholm
-------------------------
On Salam’s gravestone in the Pakistani town of Rabwah he was described as the first Muslim Nobel Laureate, until authorities scrubbed out the word ‘Muslim’
அப்துல் சலாம் கல்லறையில் நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லீம என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் பாக்கிஸ்தான் அரசு ”முஸ்லீம்” என்ற வார்த்தையை நீக்கி விட்டாா்கள்.
முஸ்லீம்கள் கல்வியை மதிக்கும் லட்சணம்.

Dr.Anburaj said...

After the riots in 1953, Salam decided to leave Pakistan. He returned to Cambridge for a few years, before moving to Imperial College, London, where he helped set up the theoretical physics department. அப்பதுல் சலாம் பாக்கிஸ்தானை விட்டு வெளியேறினாா்.லண்டன் அரசு அவரை ஆதரித்தது.அங்கே தனக்கு தேவையான ஆய்வகத்தை ஏற்படுத்திக்கொண்டாா். பாக்கிஸ்தான் அரசின் விண்வெறி ஆய்வு திட்டங்களுக்கும் அணுகுண்டு செய்யும் திட்டங்களுக்கும் உதவிகள் செய்து வந்தாா்.

Despite the rejection from his home country he had suffered, he did not let Pakistan go, continuing to be involved in the country’s most prominent scientific projects. In 1961 he established Pakistan’s space programme while during the early 1970s, Salam was, controversially, involved in Pakistan’s efforts to build a nuclear weapon. But after the Prime Minister Zulfikar Ali Bhutto passed the law against the Ahmadiyya Muslims in 1974, Salam’s involvement with the country’s administration finally diminished. He went on to be outspoken against nuclear weapons.1970 ல் அஹமதியர்களுக்கு எதிரான சட்டம் வந்த பின் பாக்கிஸ்தான் அரசோடு இருந்த தொடா்பு முற்றிலும் அறுந்து விட்டது.

Dr.Anburaj said...

இயற்பியல் துறையில் அவரது கண்டுபிடிப்புகள்- இவற்றை நானும் மண்டை வெப்பமாகி வெடித்து விடுமோ என்று பயப்படும் அளவிற்கு கடினமானது - படித்துள்ளேன்.

Salam’s contribution to physics was significant. He developed the theory of the neutrino, a subatomic particle first proposed by Pauli in 1930, and he worked on electroweak theory, for which he won the Nobel Prize.

Electroweak theory is fundamental to the Standard Model, which describes the smallest, most fundamental building blocks that make up all matter, called elementary particles, and how they interact through three different forces: electromagnetism, and what are known as weak and strong ‘interactions’. Salam worked on combining the theories of the electromagnetic and weak forces into one.

Dr.Anburaj said...

Despite his persecution, Salam’s dedication to his country and the people of Pakistan did not waver. அஹமத என்று தன்னை இழிவு செய்த போதும் பாக்கிஸ்தான் நாட்டின் மீது அன்பும் பாசமும் குறையவில்லை. He was offered British and Italian citizenship, but remained a Pakistani citizen until he died. அவருக்கு பிரிட்டன் இத்தாலி போன்ற பல நாடுகள் குடியுரிமை வழங்க முன் வந்தது.ஆனால் அவர் மறுத்து சாகும் போதும் பாக்கிஸ்தான் குடிமகனாகவே இறந்தாா். Imam Adeel, who was also born in Pakistan but moved to London because of discrimination, says this is because of the Ahmadi way of thinking.

Dr.Anburaj said...

Beyond supporting his country, meanwhile, he was also passionate about promoting scientists in the developing world. To that end, in 1964 he founded the International Centre for Theoretical Physics (ICTP), in Trieste, Italy, specifically to provide a place for students from developing countries to connect with academics from around the world.
1964 ம் ஆண்டு இத்தாலியில் சா்வதேச தியரிட்டிக்கல் இயற்பியல் ஆய்வு மையத்தை அமைத்தாா். வல்லரசு அல்லாத நாடுகளைச் சோ்ந்த மாணவர்களுக்கு இயற்பிலில் ஆய்வுகள் நடத்த அந்த மையம் உதவிவருகின்றது.

Dr.Anburaj said...

சுவனப்பிரியன்
விஞ்ஞானி. அப்துல் சலாம் ஒரு மகத்தான இயற்பியல் விஞ்ஞானி.நானும் ஒரு இயற்பியல் மாணவன். அந்த வகையில் அவரை நான் நாடு மதம் தாண்டி மதிக்கின்றேன்.அவரது புலமைக்கு சிரம் தாழ்த்துகின்றேன்.
முஸ்லீம் என்று மகிழந்து கொள்ளலாம்.இல்லை சலாம் ஒரு காபீர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். முஸ்லீம்- மூமின் -காபீர் - சண்டாளம் -அந்தணன் -பிறாமணன் என்ற பதங்களுக்கு பொருத்தமானவர்களை பரம்பொருள்தான் அறிய முடியும். எனவே விஞ்ஞானி அப்துல் சலாம் குறித்த கட்டுரையை new age islam எனற இணையத்தில்
வெளியானதை பதிவு செய்துள்ளேன்.
சில படங்கள் new age islam ல் உள்ளது.தாங்கள் விரும்பினால் அதையும் வெளியிடலாம்.