கமலேஷ் திவாரியை கொன்றது பிஜேபி தலைவர் சிவ குமார் குப்தா!
உபி மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ளது மெஹ்மூதா பாத். இங்கு வசித்து வந்த இந்து மகாசபை உறுப்பினரான கமலேஷ் திவாரி சென்ற வெள்ளியன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தை தவறாக பேசியுள்ளார். இதனால் வெறுப்புற்று முஸ்லிம்கள் தான் கொன்று விட்டனர் என்று முஹ்ஸின் ஷேக்(24), ரஷீத் அஹமத்(23), ஃபைஜான் (21) என்ற மூன்று முஸ்லிம்களை கைது செய்தது காவல் துறை.
ஆனால் இக்கொலையில் திடீர் திருப்பமாக இன்று கமலேஷ் திவாரியின் தாய் 'தனது மகனின் சாவுக்கு பிஜேபி தலைவரான சிவ குமார் குப்தாதான் காரணம். இதனை காவல் துறையிடம் சொன்னால் எனது வாக்கு மூலத்தை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். உள்ளூரில் கோவில் கட்டுவதில் பல நாட்களாக இருவருக்கும் மோதல் இருந்து வந்தது. சிவ குமார் குப்தா மற்றும் அவனது அடியாட்களின் மேல் 500 க்கு மேல் வழக்குகள் உள்ளன. அவன்தான் என் மகனை கொன்று விட்டான். எங்களுக்கு நீதி வேண்டும்' எனறு கோரிக்கை வைத்துள்ளார்.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
News 18
19-10-2019
News 18
19-10-2019
கொன்றவனும் கொல்லப்பட்டவரும் இந்துத்வாக்கள். கோவில் கட்டுவதில் பணப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறே இக்கொலைக்கான காரணம். ஆனால் யோகியின் காவல் துறை வழக்கை திசை திருப்பி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்துள்ளது.
இந்துத்வாக்கள் கொல்லப்படும் போதெல்லாம் முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும் பிறகு உண்மையான கொலையாளிகள் அவர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே என்ற உண்மை வெளிப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங் தள் என்று எந்த இந்துத்வா இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு உண்மையான இறை பக்தி இருக்காது. பணம், பெண், கொலை, என்ற ரீதியில்தான் இவர்களின் வரலாறு காந்தி கொலையிலிருந்து இருந்து வருகிறது. நமது நாடு இந்த தீவிரவாத கும்பல்களிடமிருந்து மீள்வது எப்போது?
No comments:
Post a Comment