Followers

Wednesday, October 23, 2019

ராமனைப் பற்றிய சில ருசிகர தகவல்கள்!

ராமனைப் பற்றிய சில ருசிகர தகவல்கள்!
டிசம்பர் 6 ! 1992 ம் வருடம் ராமர் பிறந்த இடம் என்று பொய் கூறி பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்!
தீவிரவாதிகளின் பித்தலாட்டத்தை நாம் எதிர்க்கும் அதே வேளையில் பொதுவாக நல்ல இந்து மக்களும் இறைவனின் அவதாரமாக நம்பியிருக்கும் இராமன் குறித்த சம்பவங்களை கவனிக்கும் போது திருக்குர்ஆனிலும் பைபிளிலும் புகழ்ந்து பேசப்படும் இறைத்தூதர் சுலைமான் அவர்கள் தான் இவர்களால் இராமன் என்று கூறப்படுகிறார்கள் என்று சொல்ல அதிக வாய்ப்புள்ளது.
முதலில் அனைவரும் ஒன்றை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இறைவனின் அவதாரம் என்று ஒன்றும் இல்லை, இவ்வாறு நம்புவது மிகத் தவறான நம்பிக்கையாகும். ஆனால் இறைவழியில் மக்களை வழிநடத்திய நல்லவர்களையும், இறைத்தூதர்களையும் அவர்களுக்குப் பின் வந்த மக்கள் இறைவனின் அந்தஸ்திற்கு உயர்த்தி, வணங்கியிருக்கிறார்கள். நம் காலங்களில் வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரையும், அப்துல் கலாமையும் இந்த மக்கள் எந்த அளவு அளவு கடந்து புகழ்ந்து இறைவன் ஸ்தானத்திற்கு உயர்த்துவதை பார்க்கிறோம். இதனை திருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவாக எடுத்துச் சொல்லி கண்டிக்கிறது, இதற்கு ஒரு பிரபலமான உதாரணம் நபி ஈஸா (இயேசு) ஆவார்கள்.
ஆக இந்த வகையில் இறைவழியில் மக்களை வழிநடத்தியவராக வாழ்ந்த இராமனை பின்னால் வந்தவர்கள் இறைவனின் அவதாரம் என்று கற்பனை செய்திருக்க முகாந்திரம் உள்ளது.
இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு நபி சுலைமான் அவர்களுடன் ராமன் குறித்து சொல்லப்படுபவை எப்படியெல்லாம் ஒத்துப்போகிறது என்பதை பார்ப்போம்.
ஒற்றுமை 1: வரலாற்று பூர்வமான ஒற்றுமை
தாவூத் நபி அவர்கள் இஸ்ரவேல் சமூகத்துக்கு அனுப்பப்பட்டவர். நம் நாட்டு பார்பனர்களின் பூர்வீகத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து வந்தவர்களாக அவர்களின் சரித்திரம் கூறும். எந்த காலத்திலும் யூதர்களோடு பார்பனர்கள் நெருக்கமாக இருப்பதை காணலாம். கால் நடைகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்த அவர்கள் தாங்கள் பின்பற்றிய வேதங்களையும் கொண்டு வந்திருக்கின்றனர். அந்த வேதங்களில் உள்ள சரித்திர சம்பவங்களை அடிப்படையாக கொண்டே ராமாயணம் எழுதப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை இனி வரிசையாக பார்போம்.
ஒற்றுமை 2: தந்தைக்கு அதிகமான மனைவியர்
தாவூதுக்கு 100 மனைவியினர் = தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர் – அவர்களில் மூவர் முக்கியமானவர்கள்.
தவ்ராத்தில் (பைபிளின் பழைய ஏற்பாட்டில் ) நபி தாவூதுக்கு ஒன்பது மனைவிகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அக்கால முறைப்படி அவர்களுக்கு அதிகமான அடிமைப் பெண்கள் இருந்திருப்பார்கள். இந்த விதத்தில் பார்த்தால் நபி சுலைமானின் தந்தையான நபி தாவூதுக்கும் அதிக எண்ணிக்கையில் மனைவியரும் அடிமைப் பெண்களும் இருந்திருப்பது இயல்பானதே!
இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மனைவியர், அடிமைப் பெண்கள் எண்ணிக்கையெல்லாம் மிகச் சரியாக இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதிகமான எண்ணிக்கையில் மனைவியரும் அடிமைப் பெண்களும் இருந்தனர் என்பது நிச்சயம்.

ஒற்றுமை 3: நபி சுலைமானின் தாயார் கேட்ட வரம் / ராமனின் சித்தி கைகேயி கேட்ட வரம்

நபி சுலைமானின் தந்தையான நபி தாவூத் அவர்கள் விரும்பிய அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள பெண்பேசிய போது, அப்பெண் (உணகளுக்கு பல மனைவியர் இருந்தாலும் ) எனக்குப் பிறக்கும் பிள்ளையைத் தான் உங்களுக்குப் பின் அரசராக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துக் கோரியதாக இஸ்ரவேலர் சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது திருக்குர்ஆன் விளக்க உரைகளிலும் எடுத்து எழுதப்பட்டுள்ளது. [ திருகுர்ஆனின் 38 ஆவது அத்தியாயத்தின் 21-25 வசனங்களின் விளக்கம் ]
இதேபோல் ராமாயணத்தில், ராமனின் சித்தி கைகேயி, முறைப்படி ஆட்சிக்கு வரவேண்டிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்யாமல் தனது மகன் பரதனை அரசனாக்க வேண்டும் என்று தசரதனிடம் வரம் கேட்டு சாதித்துக் கொண்டாள் என்று கூறப்பட்டுள்ளது.
ஒற்றுமை 4: நபி சுலைமான், ஒரு ஷைத்தானின் சதியால் ஆட்சியை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டு கடற்கரை ஓரம் சுற்றித்திரிந்தது / ராமன் ஆட்சியைப் பெற வேண்டிய நாளில் தன் சித்தியின் சதியால் அது பறிக்கப்பட்டு வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டு வனவாசம் செய்தது.
ஒற்றுமை 5: மிருகங்கள், பறவைகள் மொழியைப் புரிதல், அவற்றுடன் பேசுதல்.
நபி சுலைமான் அவர்கள் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் பேச்சுக்களை புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவற்றுடன் உரையாடும் ஆற்றலும் இறைவனால் வழங்கப்பட்டிருந்தார்கள். அதுபற்றிய விவரங்கள் திருகுர்ஆனில் 27ஆவது அத்தியாயத்தில் 15 முதல் 28அவது வசனம் வரை கூறப்பட்டுள்ளது.
ராமன்: ராவணனுக்கு எதிராக ராமன் நடத்திய போரில் ராமனின் படையினராக வானரங்கள் (குரங்குகள்) தான் இருந்துள்ளன. அவற்றில் ஒன்றாகிய அனுமான் ராமனுடன் பல காலம் இருந்து ராமனுக்கு உதவி செய்ததும் ராவணன் மூலம் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை அசோக வனத்தில் முதலாவதாக சந்தித்து ராமனின் செய்தியை கொண்டு சென்றதும் அனுமான்தான் என்பது ராமாயணத்தின் பிரபல செய்தியாகும். மற்ற உயிரினங்களின் பேச்சை ராமனால் புரிந்து கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் புரிய வருவதாகும்.
ஒற்றுமை 6: காற்று வசப்படுத்திக் கொடுக்கப்பட்டது.

நபி சுலைமானுக்கு, அல்லாஹ் (இறைவன்) காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அப்படி அது அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள், தன்னையும் தான் விரும்பக் கூடிய பொருள்களையும், நபர்களையும் சுமந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட வேண்டுமென்று அதற்கு உத்தரவிட்டால் அவ்வாறே செய்யும். இது குறித்து ஏக இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் கூறுவது:
“சுலைமானுக்கு காற்றை (நாம் வசப்படுத்தி தந்தோம்) அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத (தூர)மும், அதனுடைய மாலைப் பயணம் ஒரு மாத (தூர)மும் ஆக இருந்தது.” (அத்தியாயம் 34, வசனம் 12)
ராமன்: ராமருக்கு உதவியாக இருந்த வானரம் அனுமான் கடலைத் தாண்டி பறந்து சென்றதாகவும் ராவணன் மீது போர் தொடுப்பதற்கு மலைகளைப் பெயர்த்து தூக்கிக் கொண்டு பறந்து வந்ததாகவும் தான் ராமாயணக் கதையில் சொல்லப்படுகிறது.
இதுவெல்லாம் ராமனுக்காக நடந்தது. பொதுவாக குரங்குகளுக்கு இப்படி பறக்கும் சக்தி இல்லை. ராமனுக்கு உதவ வந்ததினாலேயே இந்த கூடுதல் சக்தி அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அல்லாஹ் (இறைவன்), ராமனுக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்திருந்ததினால் இப்படி வானரங்கள் எல்லாம் வெகு தூரத்துக்கு காற்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிகிறோம்.
இந்தக் கருத்தை உறுதிப் படுத்த ராமாயணக் கதையிலிருந்து இன்னொரு செய்தியைத் தர முடியும். அதாவது ராமபானம் என்பது போரில் ராமனிடம் உள்ள அம்புகளெல்லாம் தீர்ந்து இறுதியாக இருக்கும் ஒரே ஒரு அம்பை அவர் எய்வதாகும். அவ்வாறு இறுதியாக அவர் விடும் அம்பு எதிரியை தாக்கிவிட்டு அவரிடமே திரும்பி வந்து விடும். எய்த அம்பு இவ்வாறு திரும்பி வருவதென்றால் காற்றின் மூலம் நடந்தது என்று சொல்வது தான் பொருத்தமானது.

ஒற்றுமை 7: அரக்கரை அடக்குவது

அரக்கரை அடக்கி வைத்திருந்தது நபி சுலைமானின் சிறப்பான ஆற்றல்களில் ஒன்றாகும். இந்த ஆற்றலை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான். இது குறித்து இறுதி வேதமான திருகுர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஷைத்தான்களிலிருந்து கட்டடம் கட்டுவோன், (முத்து போன்ற சாதனங்களை எடுத்து வர கடலில் ) மூழ்குவோன் ஆகிய ஒவ்வொருவரையும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த மற்றவர்களையும் அவருக்கு நாம் வசப்படுத்தி கொடுத்தோம்.” (அத்தியாயம் 38 வசனம் 37,38)
இந்த வசனங்களில் ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் ‘ஜின்’ எனப்படும் அரக்கர்கள் ஆவர். அவர்களில் அட்டூழியம் செய்பவர்களை தண்டிப்பதற்காகத் தான் அப்படிப்பட்டவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்!
ராமன்: ராமாயணக் கதையின் முக்கிய அம்சமே ராவணன் என்ற கொடூர அரக்கனை வீழ்த்தியது தான். வேறு சில அரக்கர்களையும் வீழ்த்தியதாக ராமாயணக் கதை கூறுகிறது.
அந்த காலத்தில் ஆவணங்கள் பெரும்பாலும் செவி வழிச்செய்தியாகவே இருந்து வந்தது. இவ்வாறு செவி வழிச் செய்தியாக வரும் போது அந்த ஊரின் சூழ்நிலைக்கேற்ப அங்கு வாழும் மக்களால் வரலாறுகள் திரிக்கப்படுகின்றது. இவ்வாறுதான் ராமாயணம் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. வால்மீகி ராமாயணத்துக்கும், கம்ப ராமாயணத்துக்குமே பல வேறுபாடுகளை நாம் பார்க்க முடியும். எனவே ஒரு அனுமானத்தின் அடிப்படையில்தான் இதனை கூறுகிறோம். உண்மைகளை அறிந்தவன் இறைவன் ஒருவனே!




2 comments:

Dr.Anburaj said...

ராமர் பிறந்த இடம் என்று பொய் கூறி பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள்
விடை ராமா் பிறந்த இடம் என்றுஎதையும் உறுதியாக யாராலும் சொல்ல முடியாது.தள்ளுபடி செய்ய வே்ண்டிய கருத்து.இடித்தது உண்மை.
அயோத்தியில் - (நாடு முழுவதும் நூற்றுக்கணக்காக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டோ சில மாறுதல்களைச் செய்தோ பள்ளிவாசல்கள் நிறுவப்பட்டுள்ளது.) ஒரு இந்து கோவிலை இடித்து விட்டு அதன் மீது பள்ளிவாசல் எழுப்பப்பட்டது என்பது மட்டும் உண்மை.
பாபா் தாந் இந்துக்களை தோல்வி அடையச் செய்த வெற்றியின் சின்னமாக இந்த மசுதியை கட்டினாா்.இந்துக்களை பொறுத்த மட்டில் இது ஒரு தோல்வியின் - அவமானச் சின்னம். எனவே உடைக்கப்பட வேண்டிய அசிங்கம். உடைக்கப்பட்டுவிட்டது.
-----------------------------------------------------------------------------------
அதாவது, இறைவனின் அவதாரம் என்று ஒன்றும் இல்லை, இவ்வாறு நம்புவது மிகத் தவறான நம்பிக்கையாகும். ஆனால் இறைவழியில் மக்களை வழிநடத்திய நல்லவர்களையும், இறைத்தூதர்களையும் அவர்களுக்குப் பின் வந்த மக்கள் இறைவனின் அந்தஸ்திற்கு உயர்த்தி, வணங்கியிருக்கிறார்கள்.
இறைதூதர் என்ற கருத்தும் இந்துக்களை பொருத்தமட்டில் தவறான நம்பிக்கையாகும். சுலைமானும் நபி தாவுத்தும் நபி அப்பனும் நபி மகனும் நபி என்பது கேலிக் கூத்து.முட்டாள்தனமாக கருத்து. ஒரு ஊரில் இரண்டு நபிகளின் தேவையில்லை.நபி என்றாலே ” ஆண்குறி” தீவிரமாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது.

இந்து சமயத்தில்தான் அனைவருக்கும் பொதுவாக பிரம்மச்சரியம் போதிக்கப்படுகின்றது. சீதையை தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் ”
என்ற இராமரின் வாழ்க்கை உறுதிமொழி அரேபிய பண்பாட்டை விட மிக உயா்ந்தது. இறைதூதர் என்ற கருத்து உலக சரித்திரத்தோடு ஒத்துப் போவதில்லை. காட்டுமிரா்ணடியாக மனிதன் வாழ்ந்த காலத்திற்கு என்ன விளக்கத்தையும் அது சொல்லப் போவதில்லை. வாழ்வின் அனைத்து துறைகளிலும் பரிணாமம் நடந்து கொண்டிருக்கின்றது.மனித மன பக்குவம் பரிணாமம் அடைந்து வருகின்றது. இதைத்தான் விஷ்ணு தச அவதாரம் விளக்குகின்றது.திருவாசகம் ”புல்லாய் புடாய் புழுவாய் பல்விருகமாகி பற்வையாய் பாம்பாகி கல்யாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லாதின்ற தாவர சங்கமத்திற்குள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் ” என்று பரிணாம கொள்கையின் அடிப்படையை ஏற்றுக் கொள்கிறது.
இயேசுஇஸ்வரேலின் பிறக்கினறாா். மேசியா அல்லது கிறிஸ்து எலியாவிற்கு பின் வருவாா் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தன்னை கிறிஸ்து என்று அறிவித்த இயேசுவை கேட்டதற்கு ” ஞானஸ்தானகன் யோவானை எலியா ” என்று அறிவித்தாா். வானமண்டலத்திற்கு உயிருடன் -உடலுடன் சென்ற எலியா மீண்டும் பழைய அதே உடலுடன் வர வேண்டும். தாய் வயிற்றில் பிறந்து வளா்ந்த யோவான் எலியா இல்லை என்று மத தலைவர்கள் அறிவித்து இயேசுவை ” வேதப்புரட்டன்” என்று குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்தாா்கள். சிலுவையில் இருந்து காப்பாற்றப்படடாா் இயேசு என்பதுதான் உண்மை.
இயேசு பிறந்த அதே பகுதியில் 600 வருடத்திற்குள் முஹம்மது என்ற நபிக்கு என்ன தேவை ? உலகின் பிற பகுதிக்கு கடல் நிலம ஆகியவற்றின் அமைப்புக்கு தக்க எத்தனை நபிகள் தேவையோ அத்தனை பேரை ஏன் அனுப்பி வைக்கவில்லை. அண்டார்டிக்காவிற்கு நபி அனுப்பபடவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு ஏன் நபியை அனுப்பவில்லை ? முஹம்மது பல பெண்டாட்டிகளையும் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தாா்.இயேசு மனதால் நினைத்தால் கூட விபச்சாரம் என்றாா். விபச்சாரம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொல்ல உத்தரவு வழங்காமல் உங்களில் யோக்கியன் பாவம் இல்லாதவன் இவள் மீது முதல் கல்லை போடக்கடவன் ” என்றாரே. முஹம்மது கல்லால் அடித்து மரண தண்டனையை நிறைவேற்றினாா். என்ன முரணபாடு.....2

Dr.Anburaj said...

சுலைமானுக்கும் இராமனுக்கும் வரலாற்றுச சம்பவங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது தற்செயலலான நிகழ்வே.
நிச்சயம் இந்துஸ்தானத்தில் இது நடந்தது. தசரதன் தவிர இராமாயாண காலத்தில் பெண்களை அடிமையாக வைப்பாட்டியாக வைக்கும் பழக்கம் இல்லை.

வேறு எந்த நபரும் பரதன் குகன் லட்சுமணன் சத்ருக்கனன்
போன்ற யாரும் ஒற்றுக்கு மேற்பட்ட மனைவியையோ அடிமைப்
பெண்ணையோ வைத்திருக்கவில்லை.

ஆக ஏகபத்தினி பண்பாடு என்பது மகாபாரத காலத்தில் வெகுவாக துவங்கி இராமாயாண காலத்திற்கு ஸ்ரீராமன் ஆட்சிக்கு பின் அது மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு அடிப்படை கலாச்சாரமாக மாறிவிட்டது.இன்று கூட அரேபிய பண்பாட்டில் ஏகபத்தினி விரதம் முக்கியத்துவம் பெறவில்லை.
அரேபிய காடையர்களின் கொள்ளைக்காரர்களின் காடைதனத்தால் உடைக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இந்து ஆலயங்களை விட்டு முஸ்லீம்கள் வெளியேற வேண்டும்.வக்ப்போா்டில் போதிய பண வசதிஅ உள்ளது.புதிய மசுதிகளை முஸ்லீம்கள் அமைத்துக் கொள்ள தடையி்ல்லை. சக இந்துக்களை மதிக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைத்தால் இதை செய்வதுதான் நியாயமானது.