குஜராத்தில் கள்ள நோட்டு அடித்த ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது!
மோடியின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத் நகரைச் சேர்ந்த ஐந்து பேர் கள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் பர்மர்(22), ஆஷிஷ் சூரானி(25), குல்தீப் ராவல்(22), அபிஷேக் மங்குயா(23), விஷால் சூரானி(25), இந்த ஐவரும் கள்ள நோட்டு அச்சடித்ததற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெயர்களை பார்த்தால் மேல் சாதி இந்துக்கள் என்று தெரிகிறது. கள்ள நோட்டு அடிக்கும் கலையை யூட்யூப்பிலிருந்து கற்றுக் கொண்டுள்ளனர்.
91 யூனிட் 100 ரூபாய் நோட்டுக்கள், 14 யூனிட் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து அதில் 160000 ரூபாய் புழக்கத்தில் விட்டுள்ளனர். இது அல்லாமல் சூரத் மார்க்கெட் பகுதியில் கள்ள நோட்டை விநியோகித்து வந்த அபிஷேக் சுர்வ்(32) சுமித் நம்பியார்(33) ஆகிய இருவரையும் காவல் துறை கைது செய்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்க இந்த தேச விரோதிகள் நாட்டில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு மேலும் சீரழிக்கின்றனர்.
'வட மாநில இளைஞர்களின் திறமையை கண்டு இந்த நாடே வியக்கிறது' என்று ஒரு முறை மோடி சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
27-10-2019
இந்தியன் எக்ஸ்பிரஸ்
27-10-2019
1 comment:
எனது கடிதம் ஏன் வெளியிடப்படவில்லை.மோடியின் குஜராத்தில் என்ற வாசகம் எவ்வளவு தவறானது என்பதுவிளங்குமா ?
Post a Comment