திவாலாகிறதா இந்திய அரசு !
டீமானிட்டைசேஷன், முட்டாள் தனமான பொருளாதார கொள்கைகள், வல்லுநர்களின் அறிவுரையையும் ஆலோசனையையும் புறக்கணித்துவிட்டு அவசரம் அவசரமாக சரியான உட்கட்டமைப்பு இல்லாமல் திணிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பொதுமக்களின் கரங்களிலிருந்த பணத்தை வலுக்கட்டாயமாக வங்கியில் போட வைத்து அவர்களுடைய பணபுழக்கத்தை தடுத்து விட்டது, கண்மூடித்தனமான வருமான வரித்துறையின் ஆணைகள் ஆகியவற்றால் மொத்த உற்பத்தி குறைந்து அதனால் அரசுக்கு வரவேண்டிய வரியும் குறைந்தது ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவிலுள்ள வங்கிகள், அரசு பொதுத்துறை நிதி நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகள், நிதிநிறுவனங்கள் ஆகியவை இந்தியாவிற்கு கொடுத்த 25 லட்சம் கோடி ரூபாய் கடனில் முகேஷ் அம்பானி க்கு மட்டும் கொடுத்தது 3.5 லட்சம் கோடி ரூபாய். கிட்ட தட்ட 13,14 சதவிகிதம் ஆகும். இனிமேல் அம்பானிக்கு கடன் தருவதில்லை என சர்வ தேச நிதி ஆணையங்கள் அறிவித்து விட்டன.
இந்திய அரசு இந்த நிதி ஆண்டில் திரட்ட வேண்டிய தொகை 5 லட்சம் கோடி. ரிசர்வ் வங்கியில் பெற்றது 1.76 லட்சம் கோடி ரூபாய். இது போதாமல் இன்னும் ஒரு 30 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கியிலிருந்து கேட்டிருக்கிறது.
விற்கப்பட இருக்கும் அரசு நிறுவனங்கள்.
1) இந்தியன் ஏர்லைன்ஸ்
2) பாரத் பெட்ரோலியம்
3) எஸ்ஏஐ
4) பிஎஸ்என்எல்
2) பாரத் பெட்ரோலியம்
3) எஸ்ஏஐ
4) பிஎஸ்என்எல்
விற்பதற்கு எண்ணிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்
1) மூன்று பொதுத்துறை வங்கிகள்
2) எல்ஐசி
3) சேலம் ஸீடில் பிளாண்ட்
4) நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
2) எல்ஐசி
3) சேலம் ஸீடில் பிளாண்ட்
4) நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
குத்தகைக்கு தரப்போகும் அரசு நிறுவனங்கள்
1) ரயில்வே துறை
2) மெட்ரோ ரயில் நிறுவனங்கள்
3) சென்னை ஹார்பர்
4) விமான நிலையங்கள்.
2) மெட்ரோ ரயில் நிறுவனங்கள்
3) சென்னை ஹார்பர்
4) விமான நிலையங்கள்.
தனியாருக்கு தரப்பட போகும் அரசு வேலை (PPT ) அரசு துறைகள்
1) அரசு உயர்நிலை மேநிலைப் பள்ளிகள், கல்லூரிகள்
2) அரசு மருத்துவமனைகள்.
2) அரசு மருத்துவமனைகள்.
அப்படியானால் அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?
எந்த நாடு மனிதனை மறந்து... ஜாதி வெறியிலும், மத வெறியிலும், இன வெறியிலும் மூழ்கித் திளைக்கிறதோ... அது சுடுகாடாகி விடும் என்பதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது. இனியும் மோடி புராணம் பாடிக் கொண்டிருக்காமல் மக்களும் அரசும் விழழத்தெழ வேண்டும். இல்லை என்றால் மற்றொரு எத்தியோப்பியாவாக மாறும் அபாயம் நமது நாட்டுக்கு வரும். அந்நிலையிலிருந்து இறைவன் நம்மை காப்பானாக!
3 comments:
வங்கிகள்நட்டம் ஏற்படக்காரணம் வாராக் கடன் -
காங்கிரஸ் அரசுதான் முழு பழியையும் ஏற்க வேண்டும்.பாரதிய ஜனதா அரசு பெற்ற கடன்களை முறையாக செலுத்த வேண்டும்.தவறினால் மஞ்சள் நோட்டீஸ் வழங்கி சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்ற சட்டம் இயற்றி வங்கிகளின் நலனை காத்துள்ளது.
- ---------------------------------------------------------------------
கள்ள நோட்டுகள் புழக்கம் மிகச் சாதாரணம்.இதற்கு முழு காரணம் பாக்கிஸ்தான் அரசுதான். தீவிரவாதிகள் கையில் தேசத்துரோகிகள் கையில் தாராளமாக பணம். அளவுக்கு அதிகமாக நோட்டுகள் நடமாட்டம். கருப்பு பண முதலைகள் தனி அரசாட்சி செய்து அரசாங்கத்தை மட்டம் தட்டி வந்தார்கள்.
பணமதிப்பு இழப்பு - 1000மற்றும் 500 நோட்டுகள் செல்லாதது என்று அறிவிக்கவில்லை. வங்கியில் கொடுத்து வேறு பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றதான் அறிவித்தது.இதில் யாருக்கும் நட்டம் இல்லையே.பெரும் அளவில் கள்ள பணம் பாக்கிஸ்தான் பணம் வைத்திருந்த கருங்காலிகள் நட்டபபட்டால் நமக்கென்ன வந்தது.
முறையாக சம்பாதித்து முறையாக வரிகட்டி வாழ வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. கருப்பு பணத்தை கணினி முறைப்படுத்தியதன் மூலம் கடுமையாக கட்டுப்பதித்தி விட்டது. இது சுவனப்பிரியனுக்கு ஏன் பிடிக்காமல் போனது ?
தங்களிடம் வரிகட்டா கருப்பு பணம் குவிந்து கிடக்கின்றதா ? பாக்கிஸ்தானில் அச்சடித்த பணம் குவிந்து கிடக்கின்றதா ? இரண்டும் இல்லை என்றால் பணமதிப்பிழப்பு நன்மைதானே.
இந்திய விமானப்படை தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற திரு.தனோவா அவர்கள் சொன்ன கருத்து முந்தைய ஆட்சியாளர்களின் முட்டாள்தனங்களை எடுத்துக் காட்டும்.
” இந்திய சாலைகளில் 30ஆண்டுகளுக்கு முந்தைய வாகனம் - பைக் மகிழுந்து சைக்கிள் லாரி பஸ் - ஏதுவும் ஒடவில்லை.ஆனால் விமானப்படையில் மட்டும் 30 ஆண்டுகள் பழமையான தொழில் நுட்ப ரீதியில் மிக மிக பின் தங்கிய விமானங்கள் இருப்பது கேவலமானது.இதை அரசு சரி செய்ய வேண்டும்.
பாக்கிஸ்தானிடம் இருப்பது மிகவும் நவீனமான F-16 போா் விமானங்கள். ஆனால் நம்மிடம் இருப்பது 30 ஆண்டுகளுக்கு முந்தைய தொழில் நுட்பம் கொண்ட MIG-21 BISON போர் விமானங்கள்.
5 ஆண்டுகள்ல ரபோல் விமானம் வாங்க பேசசுவாரத்தை நடத்தி கடைசியில் ராணுவ அமைச்சா் திரு.அந்தோணி சொன்ன பதில் ”ரபோல் விமானம் வாஙக அரசிடம் பணம் இல்லை” என்பதே.
இதுதான் காங்கிரஸ் பொருளாதாரம். கொள்ளைடித்து பாழாக்கி விட்டார்கள். பாவம் திரு.மோடி அவர்கள் பாழாக்கப்பட்ட பொருளாதாரத்தை சீர்படுத்தி வருகின்றாா்.
No problem we can handle the situation,however what is your opinion regarding nation who are Islamic republic.
Post a Comment