Followers

Saturday, October 26, 2019

இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!

"இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!"- வில்லியம் தால்ரிம்பில்
"இந்திய மண்ணில் இருக்கும்போது கிழக்கிந்திய கம்பெனி என்னும் தவறான அதிகாரப்போக்கிற்கு இந்திய அதிகார அமைப்பு எந்த அளவிற்கு ஊக்கமாக இருந்தது என்பதைப் பேச வேண்டியது அவசியம். தற்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அரசியலில் முதலீடு செய்வதுபோலத்தான் அதுவும்."
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளரும் மானுடவியலாளருமான வில்லியம் தால்ரிம்பில் அண்மையில் சென்னை வந்திருந்தார். முகலாயர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆசியா மீதான பிரிட்டனின் ஆதிக்கம் குறித்த வரலாறுகளைத் தொடர்ந்து எழுதிவருபவர் வில்லியம். The Age of Khali, White Mughals, Koh-i-Noor: The History of the World's Most Infamous Diamond ஆகிய புத்தகங்கள் அவரது படைப்புகளில் அடங்கும். அவரது சமீபத்திய புத்தகம் 'The Anarchy'. அதையொட்டி சென்னை வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு வந்திருந்தார். அவரை சந்தித்தோம்.
ஃபில்டர் காபிக்கும் ஆட்டோகிராப்களுக்கும் இடையே நம்முடன் வரலாற்று ஆச்சர்யங்களை அடுக்கினார்.
(சிரித்துக்கொண்டே) ஆமாம். ஆறு வருடக் காலம். இந்தியாவின் அத்தனை ஊர்களுக்கும் பயணப்பட்டேன். கொல்கத்தா, டெல்லி, பூனா, பானிபட் எனப் பல ஊர்களுக்கு எனது தேடல் விரிந்தது. தமிழக அளவில் காஞ்சிபுரத்தைச் சுற்றி எனது ஆய்வுகளை மேற்கொண்டேன். கிழக்கிந்திய கம்பெனி எனும் வரலாற்றுப் பிரச்னைதான் இந்தப் புத்தகம். அதற்கான பயணங்களின்போது நான் பார்த்தவற்றை புகைப்படங்களாக்கினேன். எனது மூதாதையர்கள் பலர் புகைப்படக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். புகைப்படக்கலை எனது ரத்ததில் கலந்திருப்பதாக நம்புகிறேன்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தோல்வி தொடங்கியது. அது தோல்வியாக மட்டுமல்ல முற்றிலுமாகப் படையையே தடமின்றி துடைத்தழித்துவிட்டது. திப்பு சுல்தானும் அவரது தந்தையும் நிகழ்த்திய போர் அது. அதுகுறித்த சான்றுகள் திப்பு சுல்தான் அரண்மனையில் சுவரோவியங்களாக இடம்பெற்றிருக்கின்றன. `அனார்க்கி' புத்தகத்தின் அட்டைப்படம் கூட அந்தச் சுவரோவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்தான். அதற்கு ஒருவருடம் முன்புதான் மராட்டிய படைகளுடன் கிழக்கிந்திய கம்பெனி போரிட்டது. ஆனால் அதைக்காட்டிலும் இந்தப் போரில் கம்பெனிக்கு இழப்புகள் அதிகமாக இருந்தன. ஒருவேளை மராட்டிய படைகளுடனும் ஹைதராபாத் நவாப் படைகளுடனும் திப்பு கைகோத்திருந்தால் கம்பெனி தடயமே இல்லாமல் அழிந்திருக்கக் கூடும்.
வரலாற்று ஆய்வாளர்களிடம் உண்மைத் தன்மை என்பது அவசியமாகிறது. உங்கள் படைப்புகளில் அவை எந்த அளவிற்கு நியாயப்படுத்தப்படுகின்றன?
கிழக்கிந்திய கம்பெனி என்பது கார்ப்பரேட் சக்திகளின் தவறான அதிகாரப்போக்கிற்கான சான்று (Corporate power abuse). நான் பிரிட்டனில் இருக்கும்போது அந்த நிலம் இவர்கள் பற்றி அறியாத உண்மைகளை அந்த மக்களுக்குப் பகிர்வேன். ஆனால், இந்திய மண்ணில் இருக்கும்போது கிழக்கிந்திய கம்பெனி என்னும் தவறான அதிகாரப்போக்கிற்கு இந்திய அதிகார அமைப்பு எந்த அளவிற்கு ஊக்கமாக இருந்தது என்பதைப் பேச வேண்டியது அவசியம். தற்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அரசியலில் முதலீடு செய்வதுபோலத்தான் அதுவும். ஒரு வரலாற்று ஆய்வாளரின் உண்மைத் தன்மை இங்குதான் பரிசோதிக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் அதைதான் பேசியிருக்கிறேன்.
Thanks to
Vikatan



2 comments:

Dr.Anburaj said...

திப்பு சுல்தான் வீரன்தான். ஆனால் அடிப்படையில் ஒரு அரேபிய வல்லாதிக்கவாதிதான்.அரேபிய சிந்தனைகள் அவரது ஆளுமையை மனஓட்டத்தை கெடுத்து விட்டன. திருமால் ஐயங்காா் என்பவா் மேல் கொண்ட கோபத்தின் காரணமாக மேல கோட்டையில் அய்யங்கார் சாதி மக்கள் 1000 பேர்களை தீபாவளி அன்று கொன்று குவித்தான் திப்பு.தமிழக முதல்வா் அமரா்ஜெ.ஜெயலலிதா அவர்களும் மேலகோட்டை அய்யங்காா் பிறாமண வகுப்பைச் சோ்ந்தவர்தாம். அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மிஞசியத 3 கோவில் கோபுரங்கள்தாம்.அனைத்தையும் அழித்து விட்டாா். சில இந்து ஆலயங்களுக்கு உதவினாா் சிருங்கேரி சங்கர மடத்திற்கு உதவினாா் என்பது உண்மையான தகவல்கள். இருப்பினும் குணம் நாடி குற்றம் நாடி பார்க்கும் போது அரேபிய மதவெறிக்கு இவரும் பலியானவர்தாம். பாவம் இந்துக்கள்.ஜந்துக்களாக செத்து மடியத்தான் எங்களை அல்லா படைத்துள்ளான் போலும்.

Dr.Anburaj said...

இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!"-

அப்படி ஏதும் யில்லை.தவறான தகவல்.