ஜப்பானிய இளைஞனின் இறைவனைப் பற்றிய தேடல்!
'இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் ஜப்பான் முழுக்க நிரம்பியிருந்தது. ஆனால் முஸ்லிம்களோடு பழக ஆரம்பித்தவுடன் நான் முன்பு கேள்விப்பட்டவை சரியல்ல என்று உணர்ந்தேன். இங்குள்ள ஜூம்ஆ பள்ளிக்கு பலரும் தொழுக வருவர். இப்பள்ளி எப்பொதும் திறந்தே இருக்கும். முஸ்லிம் அல்லாதவர்கள் இதனுள் சென்று சுற்றிப் பார்ப்பர். குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும் எடுத்துச் செல்வர். நானும் பள்ளியின் உள்ளே இப்போது செல்கிறேன்.
அரபியில் குர்ஆனை படிப்பது சற்று சிரமமாக இருக்கிறது. ஆனால் ஜப்பான் மொழி பெயர்ப்பை வாசிப்பது மிக இலகுவாக உள்ளது. எனது வீட்டிலும் குர்ஆனின் ஜப்பானிய மொழி பெயர்ப்பு ஒன்று உள்ளது.
புருணை பயணத்திலிருந்து திரும்பியவுடன் இஸ்லாத்தை கற்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எனது அறிவில் ஒரு முதிர்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று உளமாற உணர்ந்தேன். இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டேன். எனக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும் மிக அதிக மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து விடுவேன். எனது மனம் லேசாகி விடும். இஸ்லாத்தை ஏற்ற இந்த ஒரு வருடத்தில் எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எல்லா புகழும் இறைவனுக்கே!'
----------------------------------------------
இந்த இளைஞனிடம் குர்ஆன் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது பார்த்தீர்களா? அரபு கலாசாரத்துக்கும் ஜப்பானிய கலாசாரத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இருந்தும் அந்த இளைஞனை உள்ளத்தை ஈர்க்கிறது என்றால் இது அகில உலகுக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மறை என்பது விளங்குகிறது.
''இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர்! "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களை பதிவு செய்வாயாக! என அவர்கள் கூறுகின்றனர்.'' (அல்குர்ஆன் : 5:83)
''அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகின்றது.'' (அல்குர்ஆன் 17 : 109)
ஏனைய புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படாத உள்ளுணர்வு ஏன் குர்ஆனுக்கு மட்டும் ஏற்படுகின்றது என்றால் அல்லாஹ்வின் வசனங்கள் நரகத்தின் அச்சுறுத்தல்களையும், அழிக்கப்பட்ட சமுதாய வரலாறுகளையும், நபிமார்கள் மற்றும் நபித் தோழர்கள் மார்க்கத்திற்காக பட்ட துன்பங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.
1 comment:
பாவம் .பச்சை மண்.உலக அனுபவம் இல்லாத சிறுவன் ஏதோ விசயம் தெரியாமல் பிதற்றுகிறான். புத்தனை படிக்காமல் விட்ட பாவம் இப்படி உளறுகின்றான்.
Post a Comment