இத்தாலி பாராளுமன்ற உறுப்பினரின் மகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்!
இந்நிகழ்வு இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெனுலா ஃப்ராங்கோ பார்படோ (Manuela Franco Barbato) எனும் பெயர் கொண்ட 22 வயது சகோதரி தனது பெயரை ஆயிஷா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
இது பற்றி இவரது தந்தை மீடியாக்களிடம் 'எனது மகளின் முடிவு எனக்கு வருத்தத்தை தருகிறது. பிற்போக்குத்தனமான முடிவை எடுத்துள்ளார். ஆனால் என்ன செய்வது?' என்று அங்கலாய்க்கிறார். (நல்ல வேளையாக... அரிவாளைத் தூக்கிக் கொண்டு கௌரவக் கொலை என்ற பெயரில் உயிரை எடுக்க வராது இத்தோடு நிறுத்திக் கொண்டாரே )
இது பற்றி ஆயிஷா தனது முகநூல் பக்கத்தில் 'நான் ஹிஜாப் அணிந்திருப்பதை எனது தந்தை உட்பட பலர் விமரிசிக்கின்றனர். ஹிஜாப் இறைவன் என் போன்ற பெண்களுக்காக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் எனது மனது திருப்தியடைகிறது. இது இறைவனின் கட்டளை. இதனை யார்தான் தடுக்க முடியும்?' என்று கேட்கிறார்.
ஆயிஷாவைப் போலவே இவரது தந்தைக்கும் இறைவன் நேர் வழி காட்டுவானாக!
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
allamericanmuslim.காம்
allamericanmuslim.காம்
No comments:
Post a Comment