வங்கியில் தேங்கியிருக்கும் பல இலட்சம் கோடி பணத்தில் கணிசமான தொகை முஸ்லிம்களின் இருப்புகளிலிருந்து வரும் வட்டித் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. வட்டி ஹராம் என்று இத்தொகை பயன்படுத்தாமல் வங்கிகளில் தேக்கம் அடையும் தொகை எவ்வாறு ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கி, சமூக மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான கருத்தரங்கம் QIAMS அகாடமியில் 2.10.2019 மாலை நடைபெற்றது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் மண்டல இயக்குனர் டாக்டர் J. சதக்கத்துல்லா விளக்கவுரையாற்றினார் தமிழகத்தில் பல முக்கிய புரவலர்களடங்கிய SERVE ALL என்ற அமைப்பு எவ்வாறு இப்பணியை சிறிய அளவில் செய்கிறது என்பதை அவ்வமைப்பின் செயலாளர் LKS இம்தியாஸ் அஹமது விளக்கி கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பயன்படுத்தாத பணம் ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய 16 – 18,000/- கோடி வரை சேர்த்து பத்தாண்டுகளுக்குப்பின் ரிசர்வ் வங்கியால் யாருக்கு பயன்படுகிறது என்ற விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்பணத்தை ஏன் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மார்க்க அடிப்படையில் மிகவும் ஆணித்தரமாக உரையாற்றிய மவுலவி காஞ்சி அப்துல் ரவூப் சாஹிபவர்களின் உரை பலரின் சில தயக்கங்களை தூக்கி எறியும் விதமாக அமைந்தது.
IFT மற்றும் JIH-யின் மூத்த தலைவரும் Indian Centre For Islamic Finance-யின் பொதுச் செயலாளருமான அப்துல் ரகீப் சாஹிபின் அழுத்தமான உரையும் விழிப்புணர்ச்சிக்கு உதவின இவ்விழாவை YOUTUBE மற்றும் முகநூல் மூலம் ஒளிபரப்ப உதவிய RSD நிறுவனர் தாவேஷ் முகைதீன் அவர்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாகும்.
விழிப்புணர்வு முயற்ச்சிக்கு இது சிறிய தொடக்கம் தான். அலையென எழுந்து இம் முயற்ச்சியை சமூகம் நிறைவேற்றும் என்று நம்புகிறோம்
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை.
1 comment:
Even all the Islamic bank collect interest for the loan. But competitively very low however they dont provide interest for deposits.
Post a Comment