Followers

Monday, October 14, 2019

700 வருட பழமையான சீன பள்ளிவாசல்!

700 வருட பழமையான சீன பள்ளிவாசல்!
அரபு மற்றும் சீன கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இப்பள்ளி வாசல் 700 வருடம் பழமையானது. சீனாவுக்கு இஸ்லாம் 700 வருடங்களுக்கு முன்பே பழமையானது. ஆனால் தற்போது தோன்றிய கம்யூனிஷ சித்தாந்தத்தை அந்த மக்களின் மீது திணிக்க தற்போதய அரசு முயற்சித்து வருகிறது. முடிவில் தோல்வியையே கம்யூனிஷம் தழுவும்.
இந்த பள்ளியானது மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. சைனாவில் ஜியான் நகரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வாசலின் சுவர்களில் குர்ஆனின் அரபு மொழி எழுத்துக்கள் பதியப்பட்டுள்ளன.
தற்போது சீன அரசு கைது செய்யும் முஸ்லிம்களை கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை நல்ல விலைக்கு விற்பதாக செய்திகள் வருகிறது.
சீன முஸ்லிம்களின் ஏகத்துவ நம்பிக்கையை இறைவன் மேலும் அதிகப்படுத்துவானாக!
அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கும் இறைவன் நேர் வழி காட்டுவானாக!







7 comments:

Dr.Anburaj said...

தற்போது சீன அரசு கைது செய்யும் முஸ்லிம்களை கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை நல்ல விலைக்கு விற்பதாக செய்திகள் வருகிறது.
----------------------------
ஒரு நாட்டின் மீது தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். சிறுபான்மையாக வாழும் இடங்களில் முஸ்லீம்கள் கலகக்காரா்களாக இருப்பது வரலாறு. சீனாவில் அப்படி வாழ்நதபார்த்து, பௌத்த மக்களை கொடுமை செய்து அட்டூழியம் செய்தார்கள்.சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பயங்கரவாதத்தை அடியோடு அழித்து வருகின்றது.ஈரான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் முஸ்லீம்கள் இந்து -பௌத்த மக்களை கொடுமை படுத்துவது இன்றும் தொடா்கதை.ஆனால் சீன அரசு பௌத்த சீனர்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளித்து வருகின்றது. அரேபிய வல்லாதிக்க சிந்தனைகளை ஒழித்து சீன மக்களை நேசித்து இணக்கமாக வாழ சீன அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.ஒரு சீன முஸ்லீமின் முதல் கடமை சீனனாக இருப்பதுதான். அவனது விசுவானம் அரேபியாவில்இருப்பதை சீன அரசு ஏற்காது. இதுதான் உண்மை நிலை.

Dr.Anburaj said...


காந்திஜி ஒரு கர்மயோகி. கீதை வழி நடப்பவர்.

அவரைப் பார்க்க ஆசிரமத்திற்கு ஒரு பேராசிரியர் வந்தார்.

அவரை வணங்கிய புரபஸர், “நீங்கள் கீதையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு தயவுசெய்து கீதையின் சாரத்தை விளக்க முடியுமா?” என்று கேட்டார்.

அவரை உற்று நோக்கிய காந்திஜி, “புரபஸர், எனக்காக ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” சந்தோஷத்துடன் கூறினார் புரபஸர்.

முற்றத்தில் குவிந்து கிடந்திருந்த செங்கல் அடுக்கை அவரிடம் காண்பித்த காந்திஜி, “இதை தயவுசெய்து எதிர்ப் பக்கம் போட்டு விட முடியுமா?” என்றார்.

திகைத்தார் புரபஸர். திக்கித் திணறியவாறே, “ உம், நான் உங்களிடம் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டேன். அதற்கு நீங்கள் மட்டும் தான் பதில் கூற முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“ஆம், அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.இப்போது தயவு செய்து அந்த செங்கல்களை…” காந்திஜி இழுத்தார்.

புரபஸருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. குழப்பமடைந்தார். ஆனால் மஹாத்மா சொன்னபடி செய்ய விழைந்தார்.

செங்கற்களை எடுத்து எதிர்ப்பக்கம் கொண்டு சென்று அடுக்கினார்.

வேர்த்து விறுவிறுக்க காந்திஜியிடம் வந்த புரபஸர், ‘வேலை முடிந்து விட்டது’ என்று கூறினார்.

காந்திஜியே நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

“அடடா, இப்படிச் செய்யச் சொல்லவில்லையே நான்!” என்று ஆச்சரியப்படும் குரலில் கூறினார் காந்திஜி.

“நான் எதிர்ப்பக்கம் என்று சொன்ன போது நேர் எதிரில் என்று சொல்லவில்லை. அந்த மூலையில் எதிர்ப்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.. அதொ அந்த வடக்குப் பக்க மூலையில்…”

பெருமூச்சு விட்ட புரபஸர், “அதனால் என்ன, இதோ அந்தப் பக்கம் போட்டு விடுகிறேன்” என்று மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தார்.

அவருக்கு மேலும் கீழும் மூச்சு வாங்க ஆரம்பித்தது. கைகளில் எல்லாம் சிராய்ப்பு. முதுகில் வலி.

காந்திஜியிடம் மீண்டும் வந்த அவர், “பாபுஜி, வேலை முடிந்து விட்டது, இப்போது நீங்கள் என் கேள்விக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த போது இடைமறித்தார் காந்திஜி.

“இந்த மூலையில் இருக்கும் செங்கல்கள் தோட்டத்திற்குப் போகும் வழியை அல்லவா அடைக்கிறது. இதை கிழக்குப் பக்க மூலையில் போட்டு விடலாமே” – காந்திஜி புரபஸரை நோக்கி இப்படிக் கூறினார்.

தனது நிதானத்தை இழந்த புரபஸர், “முதலில் அந்த இடத்தில் தானே இவை இருந்தன! நான் ஒரு புரபஸர், பாபுஜி! உங்களிடம் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண வந்தேன். ஆனால் நீங்களோ என்னை கேவலம் ஒரு கூலி வேலைக்காரன் போல நடத்துகிறீர்கள். ஒரு வேளை நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணுகிறீர்களோ அல்லது உங்களால் கீதையின் சாரத்தை நான் புரிந்து கொள்ளும்படி விளக்க முடியாதோ..” எனப் பொங்கினார்.

“அன்புள்ள நண்பரே, நான் உங்களுக்கு நடைமுறை விளக்கத்தை அல்லவா இப்போது அளித்தேன். கீதையின் முக்கியமான உபதேசத்தில் அல்லவா உங்களை ஈடுபடுத்தினேன் இவ்வளவு நேரமும்” என்ற காந்திஜி, “ கீதையின் சாரம் இது தான் – உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை செய்யுங்கள். வேறு எதையும் நாடிச் செல்லாதீர்கள்” (Gita’s Central Teaching : – Do your allotted task. Do not seek anyting else) என்று முடித்தார்.*

அருமையான இந்த சம்பவத்தை ஜே.பி. வாஸ்வானி கீதையை விளக்கும் தனது புத்தகமான The Seven Commandments of the Bhagavad Gita என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
-------------------------------------------------------------
வாங்கிப் படியுங்கள்.நல்ல புத்தி வரும்.

Dr.Anburaj said...

மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை
October 14, 2019
By பி.எஸ். நரேந்திரன்

தமிழர்களின் வரலாற்றுணர்வு என் கண்ணில் நீரை வரவழைப்பது. சொந்த வரலாறு தெரியாத இனம் செத்த பிணத்திற்குச் சமம். அவனுக்கு எதிர்காலமில்லை.

போதிதர்மனைக் குறித்து அறியாத சீனன் இல்லை. அதேசமயம் சொந்த நாட்டுக்காரனான போதிதர்மனைக் குறித்து அறிந்த தமிழன் அதிகமில்லை. ஏனென்றால் அவனது எண்ணத்தில் புரையோடிப் போயிருக்கும் திராவிட புண்ணாக்குத்தனம் அதனை அறியவிடுவதில்லை. பள்ளிப்பாடங்களில் தமிழனின் வரலாற்றுப் பெருமை போதிக்கப்படுவதில்லை. மாறாக அதனை அழிக்கத் துடித்த கடைந்தெடுத்த அயோக்கியர்களைக் குறித்தல்லவா தமிழகக் குழந்தைகள் படிக்கிறார்கள்?

நேற்றைக்குவரை மாமல்லபுரம் ஒரு ‘சும்மா’ போய் பார்த்துவிட்டு வருகிற ஒரு தலமாகத்தான் தமிழனுக்கு இருந்தது. அது என்ன, அதன் பின்னனி என்ன, அதன் வரலாற்றுப் பெருமை என்ன என்கிறதெல்லாம் தமிழனுக்கு இரண்டாம்பட்சமாக, தேவையற்ற தகவலாக அல்லவா இருந்தது? எவனோ ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடைய ஒரு வடக்கத்தி பிரதமர் வந்து இவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியிருக்கிறது என்பது எவ்வளவு கேவலம்?

சினிமாவும், குடியும், கலாச்சாரச் சீரழிவும், நோக்குமிடமெல்லாம் குப்பையும், கூளமும், துர்நாற்றமுமாக இருக்கிற, திராவிடப் புண்ணாக்குத்தனத்தில் ஊறிய தமிழனுக்கு அதுவெல்லாம் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் வாயை மூடிக் கொண்டாவது இருக்கக் கூடாதா? அட அற்பப் பதர்களே! நீங்களெல்லாம் மானுடப் பிறவிகள்தானா?

பிரதமர் மோடி சீன அதிபரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்தது எத்தனை பெரியதொரு வரலாற்று நிகழ்வு என்பது இன்றைக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் எதிர்கால வரலாற்றில் இதுவொரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சீனாவும், பாரதமும் உலகின் மிகப் பழமையானதொரு நாகரிகங்கள். சீன-இந்தியக் கலாச்சாரத் தொடர்பு பல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டது. இத்தனை பழமையான நாகரிகங்கள் உலகில் வேறெங்குமே இல்லை. அமெரிக்க வரலாறு வெறும் முன்னூறு ஆண்டுகள் மட்டுமே கொண்டது. பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் பெருவாரியான ஐரோப்பிய சமூகம் வெறும் வேட்டைச் சமூகம்தான்.

ஆனால், இந்தியா ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முன்னேறிய சமூகம். வேதங்களும், புராண இதிகாசங்களும் எழுதப்பட்டுவிட்டன. அலெக்ஸாண்டரின் வருகைக்கு முன்பே இந்தியர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற ஞானத்தை வைத்தே கிரேக்கர்களும், ரோமானியர்களும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள். அதுவேதான் சீனர்களுடைய வரலாறும். தொடர்ச்சியாக ஐந்தாயிரம் வருடங்களுக்கும் மேலான தங்களது வரலாற்றை எழுதி வைத்த ஒரே இனம் சீனர்கள் மட்டும்தான்.

காஞ்சிபுரத்தில் பிறந்த பவுத்த துறவியான போதிதர்மர் மூலமாக சீனத்தில் பவுத்தம் பரவியது. தமிழர்களின் பழமையான போர்க்கலைகளான சிலம்பம், களறி போன்றவற்றையும் போதிதர்மர் சீனர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய குங்ஃபூ, கராத்தேவுக்கெல்லாம் அடிப்படை தமிழக போர்க்கலைகள்தான். ஏராளமான புத்தகங்கள் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்றன. யுவான்-ஸ்வாங் போன்ற யாத்ரீகர்கள் பவுத்தத்தைக் குறித்துக் கற்றுக் கொள்வதற்காக காஞ்சிபுரத்திற்கு வந்தார்கள். பல்லவர்கள் கட்டி வைத்த காஞ்சி ஆலயங்களில் சீனச் சிலைகள் இருப்பதினை இன்றைக்கும் காணலாம். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கடல் மல்லை என்றழைக்கப்பட்ட மாமல்லபுரம் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கும், சீனத்திற்கு இடையே வாணிபம் நிகழ்ந்தது.

Dr.Anburaj said...

கம்யூனிச மூடனான மா-சே-துங் (மாவோ) ‘கலாச்சாரப் புரட்சி’ என்கிற பெயரில் சீனர்களின் வராற்றை அழித்தான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றிப் பாதுகாக்கப் பட்டுவந்த சீன வரலாற்று, இலக்கிய நூல்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. பவுத்த ஆலயங்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பவுத்த பிட்சுக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சீனர்கள் தங்களி வரலாற்றை மறக்கடிக்கச் செய்வதற்காக மாவோ செய்த மூடத்தனம் இது.

இன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்குத் திருடிச் செல்லப்பட்ட கலாச்சாரச் செல்வங்களை பெரும் விலைகொடுத்து வாங்கி மீண்டும் சீனாவிற்குக் கொண்டு செல்வதில் பெரும் ஆர்ம்வம் காட்டும் ஜின்பிங்கை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை.
இருபெரும் உலகத் தலைவர்கள் – அர்ஜுனன் தவம் சிற்பத்தின் முன்பாக.

ஜின்பிங்கின் மாமல்லபுர வருகை இன்னொரு விதத்தில் மிக முக்கியமானது. இனி மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக அறியப்படும். உலகைச் சுற்றிப்பார்ப்பதில் ஆர்வமுடைய சீனர்கள் இனிமேல் மாமல்லபுரம் வரத்தலைப்படுவார்கள். அவர்கள் மட்டுமல்ல இதுவரை இதனைக் குறித்து அறியாதிருந்த உள்நாட்டு இந்தியர்களும், ஐரோப்பிய, அமெரிக்கர்களும் இனி இங்குவர விரும்புவார்கள்.

அற்புதமான பேராலயங்களைத் தன்னகத்தே கொண்ட, உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய தமிழகத்திற்கு இன்றுவரை அந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழகத்தை இதுநாள்வரை ஆண்டவர்கள் எவரும் அதனைச் செய்யவில்லை. செய்ய ஆர்வம் காட்டவில்லை. சுயநலத்திலும், சுரண்டித் தின்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டியவர்கள் அவர்கள். மோடி என்கிற மாமனிதன் அதனை முன்னின்று நடத்திக் காட்டியிருக்கிறான். இதன் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத்துறை வளரும் வாய்ப்பிருக்கிறது. தமிழனின் பெருமை உலகறியப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனைச் சரியாக உபயோகித்துக் கொள்வது தமிழரகளின் கையில்தான் இருக்கிறது.

Dr.Anburaj said...

மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. மெல்ல,மெல்ல நிலைமை மாறும். ஏனென்றால் இரண்டு நாடுகளும் தங்களின் வலிமையை உணர்ந்தவை. அனாவசிய மோதல்கள் இரண்டு நாடுகளுக்கும் தீங்கையே உருவாக்கும் என்பதினை நன்கு உணர்ந்து கொண்டவை.

சீனா இன்றைக்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். உலகின் மிக வலிமையான தலைவர்களில் ஒருவர் ஜின்பிங். அவர் நினைத்திருந்தால் இந்தச் சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இறுதிவரை அவர் இந்தியா வருவது உறுதியாகவில்லை. பாகிஸ்தானிய ஜெனரல்களும், இம்ரான்கானும் மூன்று நாட்கள் சீனாவில் அழையா விருந்தாளிகளாகப் போய் டேரா அடித்துக் கெஞ்சிய பிறகும், அதனை உதாசீனப்படுத்திவிட்டு ஜின்பிங் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.

வருங்காலங்களில் இந்திய-சீன உறவு பலப்படும் என நம்புவோம்.

******

இந்திய-சீன உறவுச் சிக்கலுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

ஒன்று, இந்தியாவின் திபெத்திய ஆதரவு. தலாய்லாமா இந்தியாவில் இருந்து கொண்டு திபெத்திய விடுதலைக்காகப் போராடுவதனை சீனர்கள் முற்றிலும் விரும்பவில்லை.

இரண்டு, இந்திய-சீனப் போரின்போது சீனா பிடித்துக் கொண்ட இந்தியப் பகுதியான, இன்றைக்கு அக்சாய்-சென் என்றழைக்கப்படுகிற பகுதி குறித்தான சர்ச்சை. இந்தியா இன்றைக்கும் அந்தப் பகுதியை தன்னுடையதாக உரிமை கொண்டாடுகிறது.

மூன்று, சட்ட விரோதமாக இந்தியாவின் பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான், சீனாவுக்கு இலவசமாகக் கொடுத்த பகுதிகள்.

நான்கு, இந்தியாவின் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்தப் பகுதி தங்களுடையதென்று தொடர்ந்து வலியுறுத்துவதால் உண்டாகும் மோதல்கள்.

ஐந்து, சீனாவின் பாகிஸ்தானிய ஆதரவு மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பிரச்சினை. CPEC தொடர்ப்பாக அமைக்கப்பட்ட சாலைகள் இந்தியப் பகுதியான (இன்றைக்குப் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள) கில்கிட்-பால்டிஸ்தான் வழியாகச் செல்வதால் உண்டான இந்திய எதிர்ப்பு.

ஆறு, சீனாவிற்குப் போட்டியாக அமைந்த இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம். அதனை எப்பாடுபட்டேனும் தடுக்க நினைக்கும் சீனாவின் முயற்சிகள் மற்றும் அதற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைக்கு இந்தியா எடுக்கும் தீர்மானமான நடவடிக்கைகள்.

முதலாவது பிரச்சினை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இனிமேலும் திபெத் சீனாவிடமிருந்து விடுதலை பெறும் என்பது வெற்றுக் கனவுதான். அந்த அளவிற்குச் சீனா திபெத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்கிறது. பெருமளவு ஹான் சீனர்களை திபெத்திற்குள் குடியமர்த்தி, திபெத்திய கலாச்சாரத்தை ஏறக்குறைய சீனா அழித்துவிட்டது. கால மாற்றங்களை உணர்ந்த பா.ஜ.க. அரசாங்கம் தலாய்லாமாவைக் குறித்து அதிகம் பொருட்படுத்திக் கொள்வதில்லை. எனவே சீனர்கள் அந்த விஷயத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.

Dr.Anburaj said...

இரண்டாவது பிரச்சினையான அக்சாய்-சென் குறித்து சீனர்கள் கவலை கொள்ள அதிக முகாந்திரம் இருக்கிறது. ஏற்கனவே சொன்னபடி அந்தப் பகுதி இந்தியா உரிமை கொண்டாடும் கில்கிட்-பால்டிஸ்தானின் ஒருபகுதி. அந்தப் பகுதி வழியாகத்தான் சீனா திபெத்திற்குச் செல்ல பல முக்கியமான சாலைகளையும், ரயில்பாதைகளையும் அமைத்திருக்கிறது. சமீபத்தில் இந்தியா காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370-ஐ நீக்கி, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது சீனாவுக்குச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தியா அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினால் சீனா திபெத்தை இழக்க நேரிடும்.
பரஸ்பர பரிசுகள்

மூன்றாவது பிரச்சினை சிக்கலானது. இந்தியா விடுதலை பெற்றபோது காஷ்மீரின் ஒருபகுதியாக இருந்த கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியும் இந்தியாவுடன் இணைய சம்மதித்துக் காஷ்மீர் மஹாராஜாவினால் கையொப்பமும் இடப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பில் இருந்த பிரிட்டிஷ்காரனான மேஜர் வில்லியம் பிரவுன் என்பவன் அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தான். அவனுக்குப் பாதுகாப்பாக இருந்த பல ஹிந்து ராணுவத்தினரையும், கூர்க்காக்களையும் படுகொலை செய்த வில்லியம் பிரவுன் பின்னர் அந்தப் பகுதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தான். நேரு அதனைக் குறித்து எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம்போல வாயை மூடிக்கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டப்படி இந்தியாவிற்குச் சொந்தமானது.

இந்தியா என்றைக்கு வேண்டுமானாலும் கில்கிட்-பால்டிஸ்தானை சட்டப்படி திருப்பியெடுத்துக் கொள்ளும் என்று உணர்ந்த பாகிஸ்தானிய ஜெனரல்கள் மிகுந்த தந்திரத்துடன் கில்கிட்-பால்டிஸ்தானின் கிழக்குப் பகுதியை சீனாவிற்கு இலவசமாகக் கொடுத்துச் சீனாவுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பாகிஸ்தானுக்குச் சொந்தமானதாகவும் அதனை சீனாவுக்கு சட்டப்படி விட்டுக் கொடுத்ததாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. எனவே இந்தியா கில்கிட்-பால்டிஸ்தன் மீது உரிமை கொண்டாடி படையெடுத்தால் அது சீனாவையும் பாதிக்கும் என்பதால் சீனாவும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சண்டையிட ஏதுவாகும். எனவே இந்தியாவால் ஒன்றும் செய்ய இயலாத நிலை உண்டாகும்.

நான்காவது பிரச்சினையான அருணாச்சலப் பிரதேசம் சீனாவைப் பொறுத்தவரை அத்தனை எளிதானதல்ல. ஏனென்றால் 1960-களில் இருந்த இந்தியா இன்றைக்கு இல்லை. இந்திய ராணுவம் மிக வலிமையானதாக ஆகியிருக்கிறது. எனவே அந்தப் பிரச்சினை அவ்வப்போது வரும், போகும் என்பதனைத் தவிர்த்து பெரிதாக வாய்ப்பில்லை.

Dr.Anburaj said...

ஐந்தாவது பிரச்சினை இடியாப்பச் சிக்கலானது. இரண்டாவது, மூன்றாவது பிரச்சினைகளுடன் இணைந்தது. இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க பாகிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தானுக்குள் இருக்கும் பெரும் பகுதியை அதாவது சீபெக் சாலைகள் செல்லும் வழியிலுள்ள பகுதிகளை சீனாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பதாக வரும் தகவல்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கக் கூடிய தலைவலி அது. சீனா அங்கு ஒரு பெரும் ராணுவத் தளத்தையும் அமைக்க இருக்கிறது. அது நடந்தால் ஏறக்குறைய கில்கிட்-பால்டிஸ்தான் இந்தியாவின் கையைவிட்டுப் போய்விட்டதாக அர்த்தம்.

ஆறாவது பிரச்சினையான இந்திய-சீனப் பொருளாதார யுத்தம். சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை. பாகிஸ்தானியர்கள் மூலமாக பிரச்சினைகளை உருவாக்க முயல்வார்கள் என்பதுடன் மட்டுமே அவர்களின் நடவடிக்கைகள் நின்று போகும். அந்த அளவிற்கு உலக நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறது சீனா.

சீனப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் இருக்கிறது. இனிவரும் காலம் இந்தியாவின் காலம் என்பதில் சந்தேகமில்லை.

(பி.எஸ். நரேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)