Followers

Wednesday, October 09, 2019

சீனப் பெண் தற்போது ஆயிஷாவாக....

சீனப் பெண் தற்போது ஆயிஷாவாக....
'முன்பெல்லாம் ஏதேனும் துன்பங்கள் வந்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பிறகு எது நடந்தாலும் இறைவன் விதித்தபடி நடக்கிறது என்று கடந்து சென்று விடுவேன். மனதும் லேசாகி விடும்' என்கிறார்.
---------------------------------------
இஸ்லாமியர்களிடத்தில் தற்கொலை விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை கேரளாவில் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் அவர்களுக்கு கிடைத்த ஒரு உண்மை 'முஸ்லிம்கள் எது நடந்தாலும் அது இறைவன் விதித்த விதிப்படி' என்று கடந்து சென்று விடுவதால்தான் தற்கொலைகள் அவர்கள் சமூகத்தில் குறைவாக நடக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர். உலகம் முழுக்க தற்கொலை சதவீதத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் மிக அரிதாகவே தற்கொலை செய்து கொள்வதை காண முடியும். அரிதினும் அரிதாக ஒன்று அல்லது இரண்டு சதவீதம் முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்களிடத்தில் இஸ்லாமிய நடைமுறை இல்லாதிருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இஸ்லாம் அந்த அளவு மன தைரியத்தை கொடுக்கிறது. அதற்கான முழு காரணம் அவர்களிடத்தில் உள்ள ஐந்து நேர தொழுகை.


1 comment:

Dr.Anburaj said...

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.



5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.



“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.



6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.



ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.