Followers

Friday, October 25, 2019

விடுதலைப் போராட்டத்தில் அலிசகோதரர்கள்;

விடுதலைப் போராட்டத்தில் அலிசகோதரர்கள்;
பதிவு 2:
பிரிட்ஷாரின் ரவ்லட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்த போது பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொடூரமான சினறத்தண்டனைக்கு உள்ளானார்கள் பாரிஸ்டர் டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு என்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் சத்யபால் என்ற இன்னொரு தலைவரும் ரகசியமாக கைது செய்யப்பட்டு தர்மாசலா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் 13 ஏப்ரல் 1919-ஜாலியன் வாலாபாக்கில் அணிதிரண்டனர். அங்கு நடந்த பிரிட்டிஷரின் துப்பாக்கி சூட்டில் நானூறுக்கும் மேலானேர் மற்றும் பல சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் பட்டு நிரந்தரமான பாதிப்புக்குள்ளாயினர்.
நாடெங்கும் போராட்டத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது. பிரிட்டிஷாரின் தயாரிப்புகளையும் அவர்களின் பணிகளையும் பகிஷ்கரிக்கவும் மவுலனா முஹமது அலி தலைமையிலிருந்த கிலாபத் இயக்கம் ஆதரவு தெரிவித்தது. மற்றும் தீண்டாமை எதிர்ப்புக்கும் இந்த கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
கிலாபத் கமிட்டின் தலைவர்களும், ஜமீயதே உலமாவின் தலைவர்களும் காங்கிரஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாகவே இருந்தார்கள். மகாத்மா காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் முஸ்லிம் லீக் மாநாடுகளிலும் கலந்து கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மகாத்மாவின் அழைப்பை ஏற்று காயிதே மில்லத் அவர்கள் சென்னை கிருத்துவக் கல்லூரியில் தன் இறுதியாண்டு தேர்வை பகிஷ்கரித்து வெளியேறினார்கள். தன்கைகளால் நெய்யப்பட்ட கதர் ஆடையும் தொப்பியையே அணியலானார்கள். மகாத்மாவின் கவுஹாட்டி மாநாட்டிற்கு பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை வலியுறுத்தி நடந்த முதல் கூட்டம் தன் சொந்த ஊரில் நெல்லையில் ஸ்ரீனிவாசன் அய்யங்கார் தலைமையில், ராஜாஜி போன்ற பல தலைவர்களை அழைத்து காயிதே மில்லத் மற்றும் அவர் இளவல் இணைந்து நடத்திக்காட்டினார்கள்.
ஜாமியத்தே உலமாவின் தலைவர்கள் டெல்லி மாநாட்டில் பிரிட்டிஷ் பொருள் வாங்குவதும் பிரிட்டிஷாரின் இராணுவம், அரசு மற்றும் காவல்துறையில் பணி செய்வதும் ஹராம் என்று (Mutafika Fatwa)முதஃபிகா ஃபத்வா அளித்து தீர்மானம் இயற்றினார்கள். அதை ஆமோதித்தது மட்டுமல்லாமல் ஒரு படி அதிகம் சென்று நாட்டு விடுதலைக்கு புரட்சி செய்யுமளவிற்கு கிலாபத் தலைவர்களான அலி சகோதரர்கள் அழைப்பு விடுத்தார்கள்.
கிலாபத் மற்றும் காங்கிரஸின் வருடாந்திர மாநாடுகள் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் சில வருடங்களாக நடந்து வருவதையும் அதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி பேம்மேபார்டு (BAMFORD) பிரிட்டிஷ் அரசின் உளவுத்துறையின் துணைத் தலைவர் வைஸ்ராயிற்கும், இங்கிலந்திலுள்ள தலைமை பீடத்திற்கும் தொடர்ந்து எழுதிவந்தார். இந்த ஒற்றுமைக்கு முக்கிய பாலமாக மகாத்மா காந்தி செய்லபட்டு வருவதின் ஆபத்தையும் தெளிவுபடுத்தினார் அலி சகோதார்களோ இரண்டு வருடங்களில் நாட்டின் விடுதலையை போராடும் இயக்கங்கள் இணைந்து பிரகடணம் செய்யும் என்று முழக்கமிட்டு வந்தார்கள்.
மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் நாடு முழுவதும் இணைந்து பயணம் செய்து ஆதரவு திரட்டி வந்தார்கள். சில வருடங்கள் முன்பு இருந்த வகுப்புக் கலவரங்கள் அறவே மறைந்து இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் செய்து வந்த நிலையில் விரைவில் சுதந்திர பிரகடனம் செய்வதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்தன. காகிநாடாவில் காங்கிரஸ் மற்றும் கிலாபத் இயக்கங்கள் இணைந்து இப்பிரகடணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தேசவிரோத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்கள்.
லார்ட் ரீடிங் (Lord Reading) புதிய வைஸ்ராயாக இந்த கொந்தளிப்பான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இந்தியாவிற்கு அனுப்பட்டார் பதவியேற்ற ஒரிரு நாட்களில் 19- மே மாதம் 1921-யில் பிரிட்டிஷ் அரசின் உள்துறை மந்திரி (Secretary of State) எட்வின் S.மாண்டேகுவிற்கு எழுதிய கடிதத்தில்
“It is idle to underestimate the importance of Mohamed Ali’s position as the head of the Khilafat Movement. He is a real factor in the situation. He is the ostensible link between Mohamedan and Hindu. If trouble comes between him and Gandhi it means the collapse of the bridge over the gulf between Hindu and Mohamedan” (Nanda, 1989, P303) என்று கடிதம் எழுதினார்.
“கிலாபத் இயக்கத்திற்கு தலைமைப் பொறுப்பிலுள்ள முஹமது அலியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது தவறானது. இன்றைய சூழலுக்கு அவர் முக்கிய காரணமாவார் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் அவர் மறுக்க முடியாத இணைப்பாவார். அவருக்கும் காந்திக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அது இந்து முஸ்லிம்களுக்கிடையில் உள்ள இணைப்புப் பாலத்தின் அழிப்பை ஏற்படுத்துவதாகும்.”
முதலில் அலி சகோதரர்கள் காந்தியுடன் கல்கத்தாவிலிருந்து கேரளத்திற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கைது
செய்யப்பட்டார்கள். அடுத்தடுத்து ஜவஹர்லால் நேரு,ராஜாஜி,அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பிரிட்டிஷ் அரசு நிலை குலைந்து இருந்த நேரத்தில் எந்த சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த ஒரு கூட்டம் இந்து முஸ்லிம் இணைந்து பெறப்போகும் வெற்றியை விரும்பாமல் பிரிட்டிஷ் அரசிற்கு ஆதரவு கரம் நீட்டினர்.
அந்தமான் சிறையிலிருந்தும் இக்கருத்தை வலியுறுத்தும் கடிதங்கள் வைஸ்ராயிற்கும் இங்கிலாந்திலிருக்கும் தலைமை பீடத்திற்கும் அனுப்பப்பட்டன.
அந்தமானில் சிறையிலிருந்து அனுப்பியவர் இந்துத்துவ கொள்கையின் வித்தகர் V.D.சாவர்கர் ஆவார்.
அதற்கு பகரமாக தன் விடுதலையை கோரியிருந்தார்...
(இன்னும் வரும்)
Dawood Miakhan அவர்களின் பதிவிலிருந்து...




No comments: