Followers

Wednesday, October 16, 2019

முதுகில் பிளேடால் கிழிக்கப்பட்ட சரவணக்குமார்

#SamuelRaaj

முதுகில் பிளேடால் கிழிக்கப்பட்ட சரவணக்குமாரை மருத்தவமனையிலும்
இல்லத்திலும் சந்தித்தோம்...

"எதுக்கு வம்பு வழக்கைத் திரும்பப் பெறுன்னு சொல்ராங்க, போலீசும் அப்படித்தான் நடந்துக்குது. அப்படி விடமுடியுமா சார்.

அவங்க தெரு பையனுக்கு இப்படி நடந்தா என்னவெல்லாம் செய்திருப்பாங்க" என்றார் அவனது தாயார்.

"அவன் மட்டுமல்ல சார், ஊரில் உள்ள எல்லோரும் மாறணும்" என்றான் சிறுவன் #சரவணக்குமார்.

என்ன தம்பி என்றதும்,
"எத்தனை தடவை ஊரில் புகுத்து அடிச்சிருக்காங்க, ஒரு மாதிரியா நினைக்கிறத மாத்தணும் சார்" என்கிறான். #முதுகில்_மட்டுமல்ல #மனதிலும்_எவ்வளவு_பெரியகாயம் பாருங்க.

ஒரு ஆறுதல்... பள்ளியின் தலைமை ஆசிரியர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
*
- கே.சாமுவேல்ராஜ்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.


8 comments:

Dr.Anburaj said...


துருக்கி என்ற இசுலாமிய மதவாத நாடு எடுத்த ராணுவ நடவடிக்கையில் குர்து இன-முஸ்லீம்கள் - மக்கள் 637 பேர்கள் பலி. -பத்திரிகை செய்தி.

ஈரான் என்ற அரேபிய மதவாத நாட்டின் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் . சவுதி அரேபியா மீது சந்தேகம்.
அரேபிய மதம் ஒரு சமாதான மதம். சமாதானத்தை இன்று வரை ரூசித்திராத ஒரு சமூகம் உண்டு என்றால் அது அரேபிய மதவாத சமூகம்தான்.

Dr.Anburaj said...

சில குடும்பங்களில் தங்கள் குடும்பம் என்றும் சாதி பெருமை என்றும் நிறைய கதைகள் சொல்லி வீம்புத்தனங்களை சாதனைகளாகப் பேசுவார்கள். இதைக் கேட்டு சிறுவர்களும் கெட்டு போகின்றார்கள்.இந்து குழந்தைகளுக்கு முறையான சமய கல்வி அளிக்கப்ட வேண்டும். சமய கல்வியின் பெரும்பகுதி சுவாமி விவேகானந்தரின் ஞான தீபமாக இருந்தால் மிகவும் நல்லது. இல்லையேல் இப்படி வம்பு செய்து கொலை கொடுமைகளில் மனித வளம் பாழாகும்.
---------------------------------------------------
இந்து சமூகத்தை மலினப்படுத்த இணையம் நடத்தும் சுவனப்பிரியன் போன்றவர்கள் இந்துக்களை தாக்கி, குறைத்து ஒரு பதிவு போட்ட திருப்தியை அடைவார்கள்.

Dr.Anburaj said...


கீதையின் மூன்றாவது கட்டளை!

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதைஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் மூன்றாவது கட்டளை இது தான் :

Thou
Shalt Do Thy Duty and a Little More

நீ உனது கடமையை இன்னும் கொஞ்சம்
அதிகமாகச் செய்

இதைப் பற்றி விளக்குகையில் அவர்
தரும் சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரும்
பாடகியான மாப்ரிபான் (Mabribon) ஒரு நாள் மாலை தன்னைப் பார்க்க வருபவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.பல பேரைச் சந்தித்த பிறகு, தனது வேலைக்காரியிடம்,
“மிகவும் களைப்பாக இருக்கிறது. இனிமேல் யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என்றார்.

தனது விசிறிகளிடம் பேசி அவர்களைத் திருப்திப்படுத்துவதை அவர் தனது கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்.

“இன்னும் ஒரே ஒருவர் தான் இருக்கிறார்,அம்மா” என்றாள் வேலைக்காரி. “அதுவும் அவன் ஒரு சிறு பையன்” என்றாள் அவள்.

“சரி, உள்ளே அனுப்பு” என்றார் மாப்ரிபான்.

தயங்கித் தயங்கி அறைவாசலில் நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்த மாப்ரிபான். “வா, உள்ளே வா, உன் பெயர் என்ன?” என்றா.

“பியரி” என்றான் பையன்.

“சொல், உனக்கு என்ன வேண்டும்?” மாப்ரிபான் கேட்க பையன் பதில் சொன்னான் :” எனது அம்மா... மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். நான் எழுதிய ஒரு கவிதையைக் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீங்கள் பாடினால் .. அதற்கு ஏதாவது கொடுக்க
வேண்டுமென்று நினைத்தால்.. மிகவும் உதவியாக இருக்கும். இந்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன்”

“அட, உனது கவிதையைக் கொடு. அப்படியே உன் முகவரியையும் சேர்த்துக் கொடு.”

பையன் கவிதையுடன் முகவரியையும் சேர்த்துக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

மறுநாள் மாப்ரிமான் அந்தக் கவிதையை அரங்கத்தில் பாடினார்.

அனைவருக்கும் அந்தக் கவிதை பிடித்திருந்தது - அவருக்கும் தான்!

அனைவரும் ஆரவாரித்துக் கை தட்டினர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக அவர் பியரியின்
வீட்டிற்குச் சென்றார்.அவனையும் அவனது தாயாரையும் பார்த்தார்.

“பியரி, உனது கவிதை பிரமாதம். அனைவரும் அதைப்
பாராட்டினர். இதோ இந்தா” என்று அன்று நிகழ்ச்சியில் கிடைத்த முழுப்பணத்தையும் மாப்ரிபான் அளித்தார்.

“உனது தாயாருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது செய்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

நன்கொடை, உதவி என்ற வார்த்தைகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டு கடமைக்கும் சற்று மேலாகச் செய்வது தான் சேவை.

அதை செய்யத் தவறக் கூடாது

Dr.Anburaj said...

பிரபல ஓவியரான மைக்கேலேஞ்சலோவிற்கு
20 வருட காலம் நம்பிக்கைக்குரியவராயும் பணி செய்பவராகவும் இருந்தவர் ஆர்பினோ (Arbino)என்பவர்.ஆர்பினோவிற்கு வயது அதிகமாகவே
தள்ளாமை வந்து விட்டது. நீண்டகாலம் தான் இருக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார்.
மைக்கேலேஞ்சலோ அவரை நன்கு ஓய்வுஎடுத்து சக்தியை சேமிக்கும்படி கூறி அதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.
ஆர்பினோ அதற்கு இணங்கவில்லை.”உங்களுக்கு நான் ஒரு சுமையாக
ஆகி விடுவேனே” என்றார்.

ஆனால் மைக்கேலேஞ்சலோ அவரை ஆசுவாசப்படுத்தினார்.

“ஒரு சுமையும் இல்லை நான் இரவும்பகலும் உங்களைப்பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.சொன்னபடியே தன் வார்த்தையை அவர்
காப்பாற்றினார்.
ஆர்பினோ நோய்வாய்ப்பட்டார்.
அவரை நன்கு பார்த்துக் கொண்ட மைக்கேலேஞ்சலோ ஆர்பினோவின் இறுதி நாட்களில் அவர் படுக்கைஅருகே அமர்ந்து ஒரு பெரிய அற்புதமான ஓவியத்தையும் வரைந்து முடித்தார்.

Dr.Anburaj said...

அமெரிக்க ஜனாதிபதி க்ளீவ்லேண்ட்
(Cleaveland) ஒரு பயணத்திற்காக ரயிலில் ஏறினார். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரிச்சர்ட் கில்டரும் (Richard Gilder) அதே ரயிலில் பயணம் செய்தார்.

ஜனாதிபதி அந்த ரயிலில் பயணம் செய்வதைக் கேட்ட ரிச்சர்ட் அவரைத் தேடி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருந்தது.
ஆனால் எவ்வளவு தேடியும் அவரால் ஜனாதிபதியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

குழப்பமடைந்த ரிச்சர்ட் கடைசிகோச்சுக்குச் சென்று ரயில் கண்டக்டரிடம் ஜனாதிபதி எங்கே என்று கேட்டார்.

என்ன ஆச்சரியம். அங்கே ஒரு மர
பெஞ்சில் ஜனாதிபதி அமர்ந்திருந்தார்.
ஒரு பெண்மணி தனது குழந்தையுடன்
ரயிலில் ஏற தனது சீட்டை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து விட்டு
மர பெஞ்சில் அமர்ந்து பயணிக்கலானார்
க்ளீவ்லேண்ட்!
இது போன்ற இன்னும் ஏராளமான சம்பவங்களை
அடுக்கடுக்காகச் சொல்லி சாது வாஸ்வானி கடமையைச் செய்யும் போது அதில் பிறருக்கு உதவும்
சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

Dr.Anburaj said...

பாரத பிரதம மந்திரியாக ஜவஹர்லால் நேரு இருந்த போது நடந்த சம்பவம் இது :

ஒரு முறை அவர் தனது காரில் ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். ரெயில்வே க்ராஸிங் ஒன்று வந்தது.அது மூடப்பட்டிருந்தது.

காரின் டிரைவர், கேட் கீப்பர் அருகே சென்று, “கேட்டைத் திற. உள்ளே உட்கார்ந்திருப்பது யார் தெரியுமா? பாரதப் பிரதமர்.அவராலெல்லாம் காத்திருக்க முடியாது. கதவைத் திற”

கேட் கீப்பர் மரியாதையாக பதிலளித்தார்
இப்படி : “ எனது கடமை சிக்னல் வந்தவுடன் கேட்டை மூட வேண்டியது தான். திறக்கும்படி சிக்னல் வந்தவுடன் தான் என்னால் திறக்க முடியும்.”

டிரைவருக்குக் கோபம் வந்து விட்டது. “உன்னை எச்சரிக்கிறேன். உன்னை டிஸ்மிஸ் செய்யச் சொல்லப் போகிறேன், பார். உனது வேலை போகப் பொகிறது.கதவைத் திற.”
ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
பண்டிட் நேரு இதைக் கேட்ட போது கேட் கீப்பரின் கடமை உணர்ச்சியை எண்ணி சந்தோஷப்பட்டார். அந்த கேட்கீப்பரைப் பாராட்டுவித்து
அடுத்த பிரமோஷனுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

Dr.Anburaj said...

மிகப் பெரிய இசைக் கலைஞரான ப்ராஹ்ம்ஸ் (Brahms) ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரிக்கு அழைக்கப்பட்டார். அவரது நண்பரன ஜொயாசிம்மும் (Joachim) அவருடன் கூட வரவே அவரது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

புடாபெஸ்ட் நகருக்கு மிகுந்த ஆவலுடன் அவர்கள் சென்று சேர்ந்தனர். ஆனால் என்ன ஏமாற்றம்! ஒரே ஒருவர் தான் மண்டபத்தில்அமர்ந்திருந்தார்.

ஜோயாசிம் வெறுப்புடன் கூறினார்:
“சீ, என்ன இது! இந்த இசை நிகழ்ச்சியை கேன்ஸல் செய்து விடுவோம். அட்வான்ஸ் பணத்தைத்திருப்பிக் கொடுத்து விடுவோம்.” என்றார்.

ப்ராஹ்ம்ஸ் ஒப்புக் கொள்ளவில்லை.“இவர் நமது இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காக வந்துள்ளார்.அவரை ஏமாற்றமடையச் செய்து எப்படித்
திருப்பி அனுப்புவது. நமது கடமை இசை நிகழ்ச்சியை நடத்துவது தான்!’

அப்படியே முழுநேர இசை நிகழ்ச்சிஅந்த ஒருவருக்காகவே நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை வெகுவாக ரசித்தஅந்த ரசிகர், “அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன்கூறிச் சென்றார்.

அடுத்து, இந்திய சாஸ்திரீய சங்கீதவிற்பன்னரான விஷ்ணு திகம்பர் பண்டிட் அவர்களுக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு முறை சிறிய நகர் ஒன்றில்அவரது இசை நிகழ்ச்சி ஏற்பாடானது. அங்கு ஒரே ஒருவர் தான் வந்திருந்தார்.விஷ்ணு தனது முழு இசைக் குழுவுடன்
நிகழ்ச்சி முழுவதையும் நன்கு நடத்தி முடித்தார். 3 மணி நேர நிகழ்ச்சிக்கு அந்த ரஸிகர்
கொடுத்தது 4 அணாக்கள் தான். (இந்தக் கால 25 பைசாக்கள்)
இப்படி கடமை உணர்ச்சி கொண்டவர்கள்
உலகில் ஆங்காங்கே ஏராளம் பேர் உள்ளனர்.

சாது வாஸ்வானி இப்படி இன்னும் அநேக சம்பவங்களைக் கூறி கடமையைச் செய்வதிலிருந்து ஒரு நாளும் விலகக் கூடாது என்று விளக்குகிறாா்.
*

Dr.Anburaj said...

அனைத்து மாணவர்களையும் விவேகானந்தா கேந்திரம் அல்லது ஆா்எஸ்எஸ் நடத்தும் இளைஞா்கள் முகாமிற்கு அனுப்பி வைக்க வேண்டும். பிறகு பாருங்கள் இது போன்ற பிரச்சனை ஒருபோதும் வராது. ஆா்எஸ்எஸ் முகாம்களில் கலந்து கொண்ட காந்திஜி அம்பேத்காா் போன்றவர்கள் சாதி பேதம் மறந்து முகாம்களில் கலந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான்.முதலில் அது நடத்தப்பட வேண்டும். காட்டுமாடுகள் போல குழநதைகளை வளர விட்டால் முதுகை மட்டுமா அறுப்பான்.கழுத்தையும் அறுப்பான். கம்பியும் எண்ணுவான்.