உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பாபுராம் நிசாத். அம்மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாபுராம் நிசாத் அடித்துத் துன்புறுத்துவதாக, அவரது மனைவி நீது நிசாத், முகநூலில் பகிரங்கமாக குற்றச் சாட்டு வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,“என்னுடைய கணவர் என்னை அடித்துத் துன்புறுத்தினார். என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். என்னை சுட்டுவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து, நான் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் இது குடும்பப் பிரச்சனை, பேசி சமாதானம் செய்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.
அவர்கள் என்னுடைய கணவருடன் நட்புடன் உள்ளனர். எனக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணமானதிலிருந்தே அவர், என்னைத் துன்புறுத்தி வருகிறார். துப்பாக்கி முனையில் என்னை கொல்வதாக மிரட்டியும், என் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியும் வருகிறார்.
என்னுடைய சகோதரர்கள், பெற்றோர்களையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டுகிறார்” என கண்ணீருடன் மனைவி நீது நிசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் ஆதித்யநாத்தும் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தகவல் உதவி
கலைஞர் செய்திகள்
01-10-2019
கலைஞர் செய்திகள்
01-10-2019
1 comment:
நாட்டிற்காக அரும் தொண்டாற்றுபவர்கள் குழுதான் பாரதிய ஜனதாக் கட்சி.சிலநேரங்களில் களைகள் வயலில் முளைப்பதுண்டு. திரு.மோடி அவர்கள் அதை சரியான நேரத்தில் சரியான செய்வார்.
இந்த அம்மணியின் யோக்கியதை குறித்து கணவரின் வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியிருப்பது -அதுவும் கணவர் சார்ந்துள்ள இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியமிக்க அரசியல் கலாச்சார இயக்கத்தை மலினப்படுத்தியருப்து சற்றும் நாகரீகமான செயல அல்ல. இந்தியாவில் வாழும் அரேபியனுக்கு இந்தியா பிடிக்காது.இந்துக்கள் பிடிக்காது. தங்கள் பதிவு அதற்கு ஆதாரம். தொடரட்டும் இந்திய எதிர்ப்பு.
தாய் நாட்டை --இந்தியாவை எவ்வளவுதூரம்தான் மலீனப்படுத்துவீர். பார்க்கலாம்.
Post a Comment