//அண்ணல் அம்பேத்காா் சொல்கிறாா்
கௌமதரின் மதத்தை அழித்தது முகலாயரின் ஆட்சிதான்.//
கௌமதரின் மதத்தை அழித்தது முகலாயரின் ஆட்சிதான்.//
-அன்பு ராஜ்
நாடார் சமூகம் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் பார்பனியத்துக்கு அடிமையாகிப் போன அன்பு ராஜ் சொன்ன வாசகமே இது. இனி உண்மை வரலாறை வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளிலிருந்து பார்போம்.
சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!
கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.
'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.
'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.
ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.
திருநாவுக்கரசர்!
தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112
சமண மதம் துடைக்கப் படுதல்
சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.
பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,
-Page 275, பல்லவர் வரலாறு,
இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.
-South Arcot District, Gazetter, Page 369.
பெரிய புராணம் தரும் செய்தி!
'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.
இஸ்லாம்
இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.
திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!
'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.
கழுவிலேறிய சமணர்கள்!
'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18
'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18
'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144
சமணர்கள் அனுபவித்த கொடுமை!
'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28
'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.
நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!
விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?
'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.
1937, Page 1195.
'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.
'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.
திருமங்கையாழ்வார்
தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.
கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.
'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.
'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'
'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52
செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.
திருவாரூர் திருக்குளம்
தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.
கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.
படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.
9 comments:
சைவ-வைணவ -புத்த - சமண மோதல்கள் சிலகாலம் நடந்தது உண்மை. இன்று அப்பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.இன்று புத்த சமண அமைப்புகளின் உரிமைகள் மதிக்கப்படுகின்றன. அவர்களின் தனித்தன்மையான கலாச்சாரங்களை பின்பற்ற எந்த தடையும் இல்லை.
ஆனால் இசுலாமிய -அரேபிய குழுக்களுக்குள் 1600 ஆண்டுகால சண்டைகளுக்கு இன்றும் முடிவு ஏற்படுவில்லையே!
கௌதமர் ஒரு கலாச்சார ஆன்மீக பரிணாமத்தை முன் நடத்தினாா்.அவா் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை.யாரையும் ஆதரித்தோ வெறுத்தோ எந்த செயல்திட்டங்களை முன்வைக்கவில்லை. தென்றல் காற்று வீசுவது போல் வீசி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாா்.
புத்தரின் பெயருக்கு கூட்டம் சோ்ந்தது. பணம் சொத்து சோ்ந்தது. எனவே அவரது சீடர்களால் காலப்போக்கில் புத்தமதம் உருவாக்கப்பட்டது.புத்தர் நிறுவனப்படுத்தப்பட்ட எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை.புத்தமதத்தவா் - புத்தமதத்தவா் அல்லாதவர்கள் என்ற எந்த வேறுபாட்டையும் முன்வைக்கவி்ல்லை.ஆனால் காலப்போக்கில் புத்தமதத்தவர்கள் தனி குழுக்களாய் செயல்பட்டு மதமாற்றங்களில், அரசியல்களில் ஈடுபட்டு பிறமக்களை புறக்கணிக்கும் அநீதிகளில் ஈடுபட்டார்கள்.மேலும் மடங்களில் அதீதமான அஹிம்சை கருத்துக்கள் போதிக்கப்பட்டது.நிா்வாணமாக இருப்து போன்ற நடமுறைகளும் அறிமுகப்பட்டது.விளைவுபௌத்த மடங்களில் ஊழலும் கொள்கைவிரோத போக்கும் தலைதூக்கின. பொது மக்களின் வெறுப்புக்கு புத்த பிடசுக்கள் ஆளானார்கள்.
புத்தமதத்தின் சிறந்த கொள்கைகளை பிற மக்கள் புத்தமதத்தில் சேராமலே கைகொண்டுவிட்டார்கள்.
உணவின் பயன் ஜீரணம் ஆகி உடலுக்கு உரம் சோ்ப்பது போல் புத்தமதம் இந்திய மண்ணுக்கு தன் கடமையை செய்து விட்டு எனவே மங்கி போனது. இது இயல்பான பரிணாம வளா்ச்சி ஆகும். இதற்கு மேல்பரிணாம வளா்ச்சியை ஏற்படுத்த இயலாத நிலையில் புதத மடங்கள் பயனற்று போய் பலம் இழந்து தள்ளாடி வந்தது.
சோதனையாக முகலாள ஆட்சியில் மிச்ச மீதி பௌத்த இயக்கங்களும் துடைத்து எறியப்பட்டது.
சமணம், பௌத்தம் முதலான மதங்கள் வருவதற்கு முன்பு, தமிழகத்தில் இருந்த இந்து மதத்தின் உட்பிரிவுகளான சிவன், திருமால், செவ்வேள் மற்றும் கொற்றவை வழிபாடுகள் பிறர் கருத்துக்களில் தலையிடாது இயங்கி வந்தன. இந்த உட்பிரிவுகள் எதுவும் அரசியலில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. மதமாற்றமும் இல்லை. சங்க இலக்கியங்களை படித்தாலே நமக்கு இவை நன்கு விளங்கும்.
அனல் வாதம், புனல் வாதம், வாதத்தில் தோற்றால் கழுவேற்றம் போன்றவை சமணர்களால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கிட்டத்தட்ட முன்னூறு (300) ஆண்டுகள் இருண்ட காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் - சமணமும், பௌத்தமும் அரசர்களை மதமாற்றம் செய்து, அரசியல் மூலம் தங்கள் ஆளுமையை பரப்ப முயற்சித்தனர் (முதன்முதலாக ஒரு அரசன் பல நாடுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆதரித்து தூதனுப்பியது பௌத்தத்திற்காக - அசோகர் காலத்தில்). இருண்ட காலத்திற்கு பிற்பாடு, பக்தி இயக்கங்கள் தலையெடுத்தபொழுது இவர்கள் அதை அடக்குவதற்காக அனல் வாதம், புனல் வாதம், கழுவேற்றம் ஆகியவற்றை துவங்கினர். அரசர்களின் துணையுடன் சிவனடியார்களை கல்லைக்கட்டி ஆற்றில் இறக்குவது, சுண்ணாம்பு காளவாயில் தள்ளுவது, அவர்களின் குடியிருப்புக்களுக்கு தீ வைப்பது போன்றவையும் நடந்தேறின.
பின்னாளில் இவர்கள் வாதத்தில் தோற்ற பொழுது இவர்களும் கழுவேற வேண்டி இருந்தது.
குறிப்பு: இதில் பெரும்பாலும் மக்கள் குறிப்பிடுவது 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்று. ஒளவை துரைசாமிப் பிழை போன்ற அறிஞர்கள் இதை ஆராய்ந்து, இது 8000 என்னும் எண்ணை குறிக்கவில்லை என்றும், 'எண்ணாயிரம்' என்ற ஊரை சேர்ந்த ஒரு சிலரை ஒரு மன்னன் தண்டித்தான் எனவும் அறுதியிட்டுள்ளனர்.
உண்மைதான். ஆனால் சமணர்கள் மட்டுமே கழுவேற்றப்படவில்லை.அது அக்கால மரணதண்டனை வழக்கம். எல்லா குடிமக்களும் பெருந்தவறு புரிந்தால் கழுவேற்றப்படுவர். மேலும் சமணர்கள் சம்மந்தருடன் வாதிட்டபோது தோற்றால்
நாங்கள் கழுவேறுவோம் என்று சபதமெடுத்து வாதிட்டனர்.
வென்றிருந்தால்
சம்மந்தர் முதலான சைவர்களை கழுவேற்றியுருப்பர்.
பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் சமணர்களுடன் சேர்ந்து அப்பரை சுண்ணாம்பு கால்வாயிட்டதும் கடலிற் கல்லுடன் பிணைத்து தள்ளியதும் விஷப்புகையிட்டு கொல்ல முயற்சித்ததும். வரலாறு.
'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின்
தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
தாங்களே முன்வந்து -தற்கொலை செய்து கொள்வது போல்.
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
----------------------------------------------------------------------
எது எப்படியிருப்பினும் இதுபோன்ற தண்டனைகள் வாதங்கள் பண்பாடு அல்ல.குறைகள்தாம். மேற்படி தண்டனையை இன்றும் கொடுக்க வேண்டும் என்று யாரும் வாதிடவில்லை.முஹம்மது பின் பற்றிய அரேபிய முறையான கல்லால் அடித்து கொல்லுதல் நடுத்தெருவில் வைத்து வெட்டுதல் போன்ற தண்டனை முறைகள் இன்றும் பழக்கத்தில் உள்ளது குறித்து நாகரீகம் பேசுகின்றவர்கள் வெட்கப்பட வேண்டும்.
கழுவெற்றிக்கொல்லும தண்டனை தவறானது.எனவே ஒழிக்கப்பட்டுவிட்டது. திருஞானசம்பந்தர் காலத்தில்தான் இது நடைபெற்றது. சமணர்கள் கைஓங்கினால் சைவர்கள் கழுமரம் ஏற வேண்டும். சைவர்கள் கை ஓங்கினால் சமணர்கள் கழுமரம் ஏறவேண்டும். இது தமிழக வரலாற்றில் இருண்ட காலம்.
தாய் நாட்டை சதா இழிவுபடுத்தும் நிகழ்வுகளை பதிவு செய்வது ஏன் ? மாணிக்க வாசகர் தாயுமானவர் வள்ளலாா் என்று ஒரு சமூகம் தன்னை திருத்திக் கொண்ட பின்னும் முன்வந்த சிறந்தவர்களை மறைத்து விட்டு குறைஉடைய பின்னவர்களை பிரச்சாரம் செய்வது அரேபிய தக்கியா ? பிற மத ---- இந்துக்களை மலினப்படுத்தும் தந்திரம்.
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி!
திருச்சிற்றம்பலம்
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேசம் இதே.
பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போல்
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டு; உனைப் பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே!
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.
------------------------
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை இடைநடுவிற்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே
- பட்டிணத்துப் பிள்ளையார்
- பட்டினத்து அடிகள்.
-----------------------------------------------------------------------
பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே யிரை தேடி அலமந்து
காக்கைக்கே யிரையாகிக் கழிவரே
b. தாழ்வெனுந் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
வலக்கணில் ஒருவர்க் காவர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்
------------------------------------------------------
அருளால் எவையும் பார் என்றான் - அத்தை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள் கண்டதல்லால் - கண்ட
என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி
சங்கர சங்கர சம்பு சிவ சங்கர சங்கர சங்கர சம்பு!
- தாயுமானவர்.
------------------------------------------
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே - திருமந்திரம்
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்பதானால் – அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு - காரைக்கால் அம்மையார்
-----------------------
தமக்குடற் சீவனைச்சிவனை - அப்பர்
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே - திருவாசகம்
-----------------------
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே.
--------------------------------------------------
காகம் உறவு கலந்து உண்ணக்
கண்டீர்; அகண்ட ஆகார சிவ
போகம் எனும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் ஜகத்தீரே!
தாயுமானவர்
------------------------------------
சைவ சமயமே சமயம்
சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளி
காட்டும்; இந்தக் கருத்தை விட்டுப்
பொய் வந்துழலும் சமயநெறி
புகுத வேண்டாம்; முத்தி தரும்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேர வாரும் ஜகத்தீரே!
தாயுமானவர்
---------------------
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
So suvi are you willing to accept that Muhammad demolished Pagan Arabians holly place and converted in to Islamic holly place as Kabba. From the hadith it is evident he was itself a faithful worshiper of pagan Gods before he claimed prophet hood.
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே.
இந்துக்களுக்கு பணி செய்ய ஆளாக்கி விட்டு விட்டால் -என்று இந்து சமய குருமார்கள் பாடவில்லை. ”அன்பர்கள்” என்றுதான் சொல்லியிருக்கின்றார்கள். இந்துசமயம் தாய் மதம் என்பது இதனால்தான்.இசுலாம் முஸ்லீம்கள்” நலனை மட்டும் நாடுகிறது. மற்றவர்களை காபீர் என்று இழிவு படுத்துகிறது. இந்தியா உயா்நாடு.
இந்து என்பது 1850 க்கு பிறகு வந்தது.ஆதியில் இருந்த மனுதர்ம நூலில் இப்போது இருக்கும் கடவுளர்களின் பெயர்கள் இல்லை.சமணத்தையும், பௌத்த மதத்தையும் அழித்தது இந்து மத வெறியர்கள் தான்.இஸ்லாம் இதைச் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
Post a Comment