Followers

Friday, December 04, 2015

சென்னை வெள்ள நிவாரணப் பணியின் சில துளிகள்!







இன்று மண்ணடி தவ்ஹீத் ஜமாத் துறைமுகம் கிளையில் 12.15 மணிக்கு ஜிம்ஆ முடித்துவிட்டு மாநில தலைமையிடத்திலிருந்து புறப்பட்டு தென் சென்னை மாவட்டம் அலுவலகம் சென்று அங்கிருந்து ஒவ்வொரு ஏரியாவாக பிரித்து அனுப்பபட்டோம்.

5000 உணவு பொட்டலங்கள், ஆயிரக்கணக்கான பிஸ்கட்டுகள், ரஸ்க்குகள், பால்கள் , தண்ணீர் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்திகள், கொசுவர்த்திகள், ஆடைகள் என அனைத்தையும் வண்டி வீதமாக பிரித்து கோர்ட்டூர்புரம், வேளச்சேரி, சைதாபேட்டை, நெசபாக்கம், Mmdcolony, சூளைபள்ளம் என்று பல ஏரீயாக்கள் சென்று நிவாரணப் பணி செய்தோம். எல்லா புகழும் இறைவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நாளையும் நிவாரப்பணி நடைபெற உள்ளது. துஆ செய்யுங்கள். பல நபர்கள் பசியால் துடிப்பதை கண்டு கண்ணீர் கசிந்தது. பல நபர்கள் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி கேட்டு அறிந்தனர். பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.

இடையில் செம்பரபாக்கம் ஏரி உடைந்ததாக கிளம்பிய புரளியால் மக்கள் மழையில் நினைந்தபடி கையில் கிடைத்த பொருளை எடுத்துகொண்டு அழுது கொண்டே ஓடியதை பார்த்து மனம் கனத்தது. நமக்கும் அழுகை வந்தது. எனக்கு தெரிந்து இது ஒரு மிகப்பெரிய தாவா பணி. தண்ணீரில் நீந்தி சென்று நிவாரப்பணி செய்ததை பார்த்து பலர் ஆச்சரியபட்டனர். "அரசாங்கம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்களே?" என்று கேட்டனர். "அல்லாஹ்வின் திருப்தி முகம்மது நபியின் வழி" இது இரண்டுதானே நம் நோக்கம். அல்லாஹ் அக்பர்.


#Abdul Hakeem

No comments: