Followers

Monday, May 04, 2020

ஆறு வருடங்களுக்கு முன்னால், 2014:

ஆறு வருடங்களுக்கு முன்னால், 2014:
நிசார் இப்ராஹிம் (படம் 1), உயிரியலாளர் மற்றும் உலகின் தலைச்சிறந்த தொல்லுரியலாளர்களில் ஒருவர். National Geographic இதழின் 'வளர்ந்து வரும் ஆய்வுப்பணியாளர்' விருதை வென்றவர். இவர் தலைமையிலான குழு, மொராக்கோவில் சில டைனாசர் படிமங்களை கண்டெடுக்கிறது. இவை, நீந்தும் டைனாசர்களின் (Spinosaurus) படிமங்கள் என வாதிட்டார் இப்ராஹிம். நீந்தக்கூடிய டைனாசர்களா? ஆம் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்த செய்தி, உயிரியல் உலகில் அன்று பெரும் விவாதப்பொருளாக மாறியது.
நீந்தக்கூடிய டைனாசர்கள் குறித்த செய்திகள் பல ஆண்டுகளாக இருந்தாலும், அதற்கு தெளிவாக ஆதரவளிக்கும் படிமங்களை முதலில் கண்டறிந்தது இப்ராஹிம் குழுவினர் தான் என்ற வகையில் இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இருப்பினும், டைனாசர்கள் நீந்தின என்பதற்கு இந்த ஆதாரங்கள் போதாது என்று கூறியது அறிவியல் உலகம். விடவில்லை இப்ராஹிம், இன்னும் தெளிவான ஆதாரங்களை கொண்டுவர, மொராக்கோவின் ஹசன் பல்கலைக்கழக தொல்லுரியலாளர் சமீர் ஜுஹ்ரி (படம் 2) குழுவினருடன் கூட்டணி அமைத்து புறப்பட்டார்.
இன்று, 2020:
Flash News: நீந்தும் டைனாசர்களின் வால் பகுதி படிமங்ளை முழுமையாக கண்டுபிடித்தது இப்ராஹிம், சமீர் குழு. அறிவியல் உலகம் பரபரப்பிற்கு உள்ளானது. இந்த முறை முழு மனதோடு ஏற்றார்கள்.
வாலின் நீளம் எவ்வளவு என்றால் ஐந்து மேசைகளை ஒன்றோடு ஒன்று இணைத்தால் மட்டுமே அவற்றை நேர்கோட்டில் பரப்ப முடியும் என்றளவிற்கு நீளம். தண்ணீருக்கு அடியில் மிக ஆழம் வரைக்கூட வெகு நேரம் நீந்தக்கூடிய அளவில் இவற்றின் வால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முதலைகளை தண்ணீரில் வேட்டையாடி இருக்கலாம் இந்த விலங்குகள். மொத்த எடை 7000 கிலோ வரையும், விலங்கின் மொத்த நீளம் ஐம்பது அடி வரையும் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. பாரம்பரிய 'நேச்சர்' இதழ் ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
ஒரு அற்புதமான கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரர்களாக ஆகியிருக்கின்றனர் இப்ராஹிம், சமீர் குழுவினர். வாழ்த்துகள்.
இதுக்குறித்த மேலதிக செய்திகளை இங்கே படிக்கலாம்: https://www.nationalgeographic.com/…/first-spinosaurus-tai…/



1 comment:

Dr.Anburaj said...

ஒரு முஸ்லீம் ஒருவாரின் ஒரு க்ண்டுபிடிப்பிற்காக இப்படி சிலாகிக்கும் மதவெறி பிடித்த சு..ன்
சில கேள்விகள்.
மொராக்கோவில் சில டைனாசர் படிமங்களை கண்டெடுக்கிறது. இவை, நீந்தும் டைனாசர்களின் (Spinosaurus) படிமங்கள் என வாதிட்டார் இப்ராஹிம். நீந்தக்கூடிய டைனாசர்களா? ஆம் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்த செய்தி, உயிரியல் உலகில் அன்று பெரும் விவாதப்பொருளாக மாறியது. நீந்தக்கூடிய டைனாசர்கள் .....

போகட்டும் .நீந்தக் கூடிய மேற்படி மிருகங்கள் இருந்த காலத்தில்

நபியாக யாா் வந்தார்கள் ? மனிதன் வாழ்ந்தானா ? என்ன உடை உடுத்திருந்தால் ? வேதம் அளிக்கப்பட்டதா ? திருமணம் செய்தானா ? விவசாயம் செய்தானா ? மசுதி இருந்ததா ?
குரான் கூறும் படைப்பு கொள்கையோடு ஒப்பீடு செய்ய முஸ்லீம்களுக்கு தெம்பு உள்ளதா ?