Followers

Friday, May 15, 2020

இத்தாலிய வலதுசாரிகள் கொந்தளிப்பின் உச்சியில் உள்ளனர்.

இத்தாலிய வலதுசாரிகள் கொந்தளிப்பின் உச்சியில் உள்ளனர். காரணம், 25 வயது ஆயிஷா எனும் சில்வியா ரொமானோ. நவம்பர் 2018-ல், உதவிப் பணியாளராக இருந்த போது, ரொமானோ கென்யாவில் இருந்து கடத்தப்பட்டார். துருக்கிய இத்தாலிய சோமாலிய உளவுத்துறைகளின் கூட்டுமுயற்சியால் சில தினங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். வந்தவர், இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்க பூகம்பம் வெடித்தது.
'தூக்கிலிடுங்கள்' என்று ஒரு வலதுசாரி தலைவர் ட்விட் செய்து பின்னர் அழிக்க, இன்னொரு வலதுசாரி தலைவரோ 'Neo-தீவிரவாதி' என அழைத்தார். சில்வியா ரொமானோவிற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என இத்தாலிய அரசு கூறுமளவு விவகாரம் போய்விட்டது.
தன் மனமாற்றம் குறித்து இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA-விற்கு அளித்த பேட்டியில், "எனக்கு குர்ஆன் வழங்கப்பட்டது. நாளடைவில் சிறிது அரபியும் கற்றுக்கொண்டேன். என்னை கொல்ல மாட்டேன் என்று உறுதியளித்திருந்தார்கள். அது போலவே நடந்துக்கொண்டார்கள். அவர்களின் கலாச்சாரமும், நான் கடத்தப்பட்டதற்கான காரணமும் விளக்கி கூறப்பட்டது. மரியாதை அளிக்கப்பட்டது. இஸ்லாம் நோக்கிய என்னுடைய பயணம் மிக மெதுவாகவே இருந்தது. சிறுகச் சிறுக எனக்குள் இஸ்லாம் வந்தது. இது முற்றிலும் என்னுடைய தன்னிச்சையான முடிவாகும்" என கூறியிருக்கிறார் ரொமானோ.
#SilviaRomanoAisha என்ற ஹேஷ்டேக் இத்தாலிய ட்விட்டரில் ட்ரண்டானது. வலதுசாரிகளின் கடுமையான வெறுப்பை சந்தித்தாலும், பலர் ரொமானோவிற்கு ஆதரவளித்துள்ளனர்.
படம்: பெற்றோருடன் சில்வியா ரொமானோ.
செய்திக்கான ஆதாரங்கள்:
1. https://www.aa.com.tr/…/conversion-to-islam-not-for…/1836712

சகோ Aashiq Ahamed பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.


No comments: