அவசர இரத்ததானம் - TNTJ ரியாத் மண்டலம்.
கடல் கடந்த மனித நேயம்!
ரியாத் :- அறுவை சிகிச்சைக்காக ரியாத் ஹயாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த சகோதருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலத்திற்கு அச்சகோதரியின் நண்பர்கள் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து.
அச்சகோதரிக்கு தேவையான 2யூனிட் இரத்தம் மற்றும் 2யூனிட் பிளாஸ்மா (AB+) அவசரமாக ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டது...!
அல்ஹம்துலில்லாஹ்!
தற்பொழுது அந்த சகோதருக்கு அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் பெற்று வருகின்றார்,மேலும் முழுமையாக குணமடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
ரியாத் மண்டலம்
04.05.2020
RIYADH | TNTJ | BLOOD | CAMPAIGN | KSMC | KFMC | EMERGENCY | HUMANITIES | SAVE THREE LIVES
கடல் கடந்த மனித நேயம்!
ரியாத் :- அறுவை சிகிச்சைக்காக ரியாத் ஹயாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த சகோதருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலத்திற்கு அச்சகோதரியின் நண்பர்கள் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து.
அச்சகோதரிக்கு தேவையான 2யூனிட் இரத்தம் மற்றும் 2யூனிட் பிளாஸ்மா (AB+) அவசரமாக ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டது...!
அல்ஹம்துலில்லாஹ்!
தற்பொழுது அந்த சகோதருக்கு அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் பெற்று வருகின்றார்,மேலும் முழுமையாக குணமடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
ரியாத் மண்டலம்
04.05.2020
RIYADH | TNTJ | BLOOD | CAMPAIGN | KSMC | KFMC | EMERGENCY | HUMANITIES | SAVE THREE LIVES
3 comments:
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
-தாயுமானவர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா - கணியன் பூங்குன்றனார்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.அப்பா்-தேவாரம்
------------------------------------------------------
ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்
தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது பற்றி தமிழ் இலக்கியம் குறிப்பாக பக்தி இலக்கியம் பக்கம் பக்கமாக சொல்கிறது.
உடைந்த அரிசிக்கு நொய் அரிசி என்று பெயர். சமைக்க ருசியாக இருக்காது. வேண்டுமானால் கஞ்சி வைக்கலாம். சட்டென்று குழைந்து விடும். அந்த நொய் அரிசியில் ஒரு துணுக்காவது ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அருணகிரிநாதர். "நொயிர் பிள அளவேனும் பகிர்மின்கள் " என்று கூறுகிறார்.
(முழுப் பாடல் கீழே
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.
---------------------------------------------------------------------
ஒளவையார் - அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.
இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.
மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.
பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம் சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை. அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது என்று சொல்கிறாள் ஒளவை. நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும் எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.
ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.
"தானமும் தவமும் தான்செயல் அரிது"
படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம். தானமும் தவமும் செய்வது இருக்கிறதே மிக மிக கடினமான செயல்.
இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர் பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.
தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.
தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.
சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.
சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?
ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.
சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?
"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.
தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,
ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.
ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.
உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?
அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து உங்களுக்காக காத்து நிற்கும்.
ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?
எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?
https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html
ஹிந்து ஆன்மீக பிரவாகம் கதிரவனாக ஜொலிக்கும் போது மின்மினி போல் அரேபிய இலக்கியங்கள் மங்கிக் கிடக்கின்றது.
நல்ல பதிவுகளை வெளியிட்டமைக்க நன்றி.
Post a Comment