Followers

Saturday, May 02, 2020

தவறுகளாகவே செய்து வரும் மத்திய அரசு!

மீண்டும் மீண்டும் தவறுகளாகவே செய்து வரும் மத்திய அரசு!
கடற்படை அணிவகுப்பு செய்வதாலோ, முழு ராணுவமும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானங்களை பறக்க விட்டு செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மரியாதை செய்வதாலோ குப்பனுக்கும் சுப்பனுக்கும் வயிறு நிறைந்து விடுமா?
இந்த அணி வகுப்பு மரியாதைக்காக எத்தனை கோடிகள் செலவிடப்படப் போகின்றனவோ? இந்த இக்கட்டான நிலையில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உடை கவசங்கள் இல்லை. அதற்கு உதவியிருக்க வேண்டும் இந்த அரசு!
பல மாநிலங்களில் இன்று வரை உணவின்றி தவித்து வரும் வெளி மாநில கூலி தொழிலாளிகளை அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பே வாகன வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் இந்த அரசு.
உணவின்றி வீடுகளில் ஊரடங்கால் முடங்கியிருக்கும் சாமான்ய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வீடு தேடி சேர்ப்பித்திருக்க வேண்டும் மத்திய அரசு.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்து ஊரடங்கால் அழிந்து போன விலை பொருட்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து விவசாயிகளை கை தூக்கி விட்டிருக்க வேண்டும் இந்த மத்திய மோடி அரசு. ஆனால் இதற்கு மாற்றாக செல்வத்தில் கொழிக்கும் பதஞ்சலி போன்ற நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்து மேலும் மேலும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது இந்த பாசிச அரசு.
இவை அனைத்தையும் தூரமாக்கி விட்டு கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள், விமானங்களை பறக்க விட்டு நன்றி செலுத்தப் போகிறோம் என்றெல்லாம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருங்கும் இந்த அரசை நினைத்து அழுவதா? சிரிப்பதா?
ஆக்கம்
சுவனப்பிரியன்


3 comments:

Dr.Anburaj said...

அமேரிக்காவிலும் இத்தகைய நீகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
தேவையற்ற வீண் செலவுதான்.

வெளி மாநில தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
ஆனால் அது சரிவர நடக்கவில்லைதான்.அதிக கவனம் தேவை.
நடந்தே ..... 800 கீமீ நடந்தே சென்றிருக்கின்றார்கள்.

கொரோனா நம்மை கடும் சீரழிவுக்கு ஆளாக்கி விட்டது.

Dr.Anburaj said...

நான்அறிந்து முதல்முதலில் இந்திய நாட்டு ராணுவ தளபதி ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளீர்கள். ஓட்டனாா் பாட்டனாா் தாத்தா அப்பா என்று இவரது குடும்பமே இந்திய ராணுவத்திற்காக தங்களை அற்பணித்துள்ளது.
ராணுவத்தில் பலநிலைகளில் சிறப்பாக பணியாற்றி தலைமை தளபதியாக பதவி உயா்வு பெற்று பின் முப்படைகளின் தளபதியாக பணியாற்றிவரும்

ஜெனரல் விபின் ராவத் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி. தேசத்தை பற்றி நல்ல செய்திகளை வெளியிடுங்கள்.

vara vijay said...

Fact fact fact, as a nurse i feel we dont need these kind of things. It remaonds me God will save us from all mysery but the fact is we only solve our problem.