Followers

Sunday, May 31, 2020

38 வருடம் துபாயில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

38 வருடம் துபாயில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சென்றார். 😥😥😥😭😢😢😢

சொத்தை எழுதி தராததால் அன்பற்ற மனைவி மற்றும் பிள்ளைகளால், முதியவர் வீதிக்கு விரட்டப்பட்ட அவலம்

-------------------------------------------------------------

(மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண்விளையாட்டும் வேடிக்கையும் அலங் காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடை யில் வீண் பொறாமை யேற்படுத்துவதாகவும், பொருட்களிலும் சந்ததிகளிலும் போட்டி யேற்படுத்துவதாகவும்தான் இருக்கிறது. இதன் நிலையானது: ஒரு மழையின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் உதவியால் முளைத்த பயிர் நன்கு வளர்ந்து விவசாயி களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பின்னர் அது உலர்ந்து மஞ்சள் நிறத்தில் மாறி விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகிவிடுகின்றது. இம்மை வாழ்வும் அவ்வாறுதான். மறுமையிலோ அவர்களில் பலருக்கு கொடிய வேதனையும் சிலருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்த மும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த உலக அற்ப வாழ்வு ஏமாற்றுகின்ற அற்ப இன்பமேயன்றி வேறில்லை. (57:20)

-----------------------------------------

உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு; அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்ற நபிமொழி.8
6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறிது நேரத்தைச் செலவிடு. உன்னுடைய இறப்புக் குப் பிந்திய நாளுக்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
புஹாரி Book : 81


1 comment:

Dr.Anburaj said...


சிரவணன் ஸ்ரீராமன் பிறந்த நாட்டில் இப்படியும் சில பிள்ளைகள்.

காவல்துறையில் புகாா் செய்ய வேண்டும்.அருமையான முறையில் தீர்த்து வைப்பார்கள்.

பெற்றோர்களைப் பராமரிக்காத பிள்ளைகளை சிறைக்கு அனுப்ப சட்டம் உள்ளது.பயன்படுத்த

வேண்டும்.

எனது பெற்றோர்கள் சாகும் போது மிக்க மகிழ்ச்சியுடன் எங்களை வாழ்த்தி ...வாழ்த்தி விடைபெற்றார்கள்.

என் அம்மா அமரரான போது ” ஊர் மக்கள் அனைவரமு் -எனது மனைவியை - -” மாமியாரை மிக நன்றாக கவனித்துக் கொண்டாள்” என்று வாழ்த்தினார்கள். அது எனக்கு இரண்டு மடங்கு மகிழ்ச்சியைத் தந்தது.

நினைத்து பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது.