Followers

Thursday, May 07, 2020

போரினால் நிலைகுலைந்துள்ள ஏமனில்.....

போரினால் நிலைகுலைந்துள்ள ஏமனில்.....

முனா என்ற அந்தச் சிறுமி தங்களின் அன்றாட வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறாள்.

கொரோனா பாதிப்பு ஏற்படா வண்ணம் மிக ஜாக்கிரதையாக தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர் ஏமன் மக்கள்.

இந்த ஏழ்மையிலும் அவர்களிடம் உள்ள இறை நம்பிக்கை போற்றுதலுக்குரியது.

இவர்களை விட இறைவன் நம்மை நன்றாக வைத்துள்ளதற்காக நன்றி செலுத்துவோம்.

------------------------------------------

ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர்(ரலி) அவ்வீட்டின் வறுமை நிலையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். நூல்: புகாரி 4913

நபியவர்கள் வீட்டில் வறுமையின் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு மேல் அடுப்பு பற்ற வைக்க முடியவில்லை. (பார்க்க: புகாரி 2567)

நபியவர்கள் மரணிக்கின்ற வரை ஒரு தடவை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய குடும்பம் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. (புகாரி 5373)

நபியவர்கள் மரணிக்கும் போது கூட வறுமையின் காரணத்தினால் தமது உருக்குச் சட்டையை ஒரு யூதனிடம் கோதுமைக்காக அடகு வைத்த நிலையில் தான் சென்றார்கள். (புகாரி 2069)


1 comment:

Dr.Anburaj said...


சு..ன் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்.
அரேபிய அடிமையின் விருப்பம் இந்த பதிவு.

யேமனில் குண்டு போடுவது யாா் ?
ஏன் ? என்ன காரணம் ?
என்று துவங்கியது ?
என்று முடியும் ? குழந்தை காட்டும் வீட்டில் யுனிசெப் என்ற சிம்பல் உள்ளதே.

குவைத்காரனோ சவுதிகாரனோ போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு-முஸ்லீம்களுக்கு உதவவில்லை.

ஐக்கிய நாடுகள் சபைதான் போஸ்ரா- ஒட்டகப்போா் போல் முஸ்லீம்களும் முஸ்லீம்களும் போா் செய்து நாசமாக போகும் போது அகதிகளை காப்பது போரினால் வீடு தொழில்களை இழந்தவர்களை ஆதரிப்பது போன்ற செயல்களைச் செய்வது ஐக்கிய நாடுகள் சபைதான். அரேபிய சரியாயோ சர்வதேச ஜமாத்தோ அல்ல.