Followers

Sunday, May 17, 2020

உலக வரலாற்றின் போக்கையே பல்வேறு கண்டுபிடிப்புகள்

உலக வரலாற்றின் போக்கையே பல்வேறு கண்டுபிடிப்புகள் மாற்றியுள்ளன. அல்லாஹ் வழங்கிய அறிவின் மூலம் தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகள், மிக பெரும் சாம்ராஜியத்தை நிறுவ அவருக்கு உதவியது.
வேதம் வழங்கப்பட்ட இறைதூதராகவும், மிக சிறந்த தொழில் நுட்பவாதியாகவும் வாழ்ந்த தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி குர்ஆன் வசனங்கள் மூலம் அறிந்து கொள்வோம்.
ஃபிர்அவுனின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க, மூஸா (அலை) அவர்களின் தலைமையில் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறினர் இஸ்ராயீல் மக்கள், அதன் பின்னர் பல ஆண்டுகள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட நாடோடி சமூகத்தில் பிறந்தவர் தான் தாவூத் (அலை) .
ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவுத் (அலை) அவர்களின் காலத்தில், போர் முறைகள் மிக பழமையானது. சிறு ஆயுதங்களை வைத்துகொண்டு சண்டையிடுவார்கள். ஆயுதத்தின் கூர்மை, வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பலம் ஆகியவற்றை கொண்டே போரில் வெற்றி பெற்று வந்தனர்.
போர்களத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கவச ஆடைகள் என்று அப்போது எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒன்றை உருவாக்க முடியும் என்று யாரும் கற்பனை கூட செய்தது இல்லை.
உலக வரலாற்றில் முதன் முதலாக தாவுத் (அலை) அவர்கள் இரும்பை கொண்டு போர் கவசங்களை உருவாக்கினார்கள். எதிரி என்னை தாக்கினால் எனக்கு எதுவும் ஆகாது, அதே நேரத்தில் என்னால் அருகில் இருந்து கொண்டு எதிரியை தாக்க முடியும் என்ற நிலையை அது ஏற்படுத்தியது. இது போர்களத்தின் போக்கையே மாற்றியது.
தாவுத் (அலை) அவர்களின் இந்த கண்டுபிடிப்பு, போர்களத்தில் வெல்ல முடியாத மனிதராக அவரை மாற்றியது. மிக பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கி, பேரரசர் ஆனார் தாவுத் (அலை).
அன்னாரின் மகன் சுலைமான் (அலை) அவர்கள், தந்தையின் சாம்ராஜியத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
இரும்பை கொண்டு கவச ஆடை தாயாரிகும் தொழில்நுட்பம் (குர்ஆன் வசனங்களில் இருந்து) :
இரும்பு உறுதியானது, கடினமானது, இதை கொண்டு ஆடை தயாரிக்க முடியும் என யாரும் அப்போது கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆடை என்பது மென்மையாக இருக்க வேண்டும், நாம் அசையும் போது நம்மோடு சேர்ந்து அதுவும் அசைய வேண்டும். கடினமான இரும்பை ஆடையாக மாற்றிய தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்பை குர்ஆன் வசனங்களில் இருந்து அறிந்து கொள்வோம்.
....."போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக'' என (கூறி) அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மென்மையாக்கினோம்....(குர்ஆன் 34:10,11)
அல்லாஹ் வழங்கிய அறிவை கொண்டு தாவுத் (அலை) அவர்கள் இரும்பை மென்மையாக்கி (அதிக வெப்ப நிலையில் அதை உருக்கி) சிறு சிறு வளையங்கள் செய்து, அதை ஒழுங்குபடுத்தி கவச ஆடைகளை தயாரித்தார்கள்.
நூலை கொண்டு நாம் உடுத்தும் ஆடைகள் தயாரிக்கப்படுவதை போல, உறுதியான சிறு சிறு இரும்பு வளையங்களை கொண்டு கவச ஆடைகள் தயாரிக்கப்படுகின்றது. உடலின் அசைவிற்க்கு ஏற்ப, இந்த சிறு வளையங்களால் ஆன இரும்பு ஆடையும் அசைந்து கொடுக்கும்.
அந்த கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறந்த கண்டுபிடிப்பு இது. இன்னும் விரிவாக விளக்குகின்றேன்.
இரும்பு கடினமானது, அதை அதிக வெப்ப நிலையில் உருக்கினால் (உருகி) மென்மையாகும், ஆனால் உருகிய நிலையில் உள்ள இரும்பை நாம் கையால் கூட தொட முடியாது. எனவே அதை அப்படியே பயன்படுத்த முடியாது. (கண்டுபிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை)
சாதாரண வெப்ப நிலையிலும் இரும்பு மென்மையாக இருக்க வேண்டும். வளைத்தால் வளைய வேண்டும், நாம் விரும்பும் வகையில் அது அசைய வேண்டும். அதே நேரத்தில் உறுதியாகவும் இருக்க வேண்டும். இது தான் கண்டுபிடிப்பிற்க்கான தேவை (Problem Statement)
இரும்பை உருக்கி அதை கொண்டு சிறு வளையங்கள் செய்து அந்த வளையங்களை கொண்டு ஆடை செய்யும் போது, நாம் விரும்பியது கிடைக்கின்றது.
இப்போது சாதாரண வெப்ப நிலையிலும் அதை நாம் அசைக்கலாம், வளைக்கலாம், விரும்பிய வகையில் நகர்த்தாலாம். கடினமான இரும்பு இப்போது மனிதனின் விருப்பப்படி அசையும் வகையில் மென்மையாகிவிட்டது (Problem solved)
உண்மையில் இது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு, இதற்க்குள் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன. (எழுதினால் எழுதி கொண்டே போகலாம்)
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நாடோடியாக பிறந்த தாவுத் (அலை) அவர்கள், மிகபெரும் சாம்ராஜியத்தின் அதிபதியானார்.
ஒரு கண்டுபிடிப்பாளர் (Inventor) எப்படி யோசிக்க வேண்டும் என்பதை தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்
இது மிக மிக கடினம், இதை யாராலும் செய்ய முடியாது என நினைக்கும் ஒன்றை, தொழில் நுட்பங்களின் மூலம் சாதித்து காண்பிப்பது தான் கண்டுபிடிப்பு (Invention).
அந்த தொழில்நுட்ப அறிவை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்,
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர். ....(குர்ஆன் 27:15)
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கும் கல்வி ஞானத்தை வழங்குவான் (அல்லாஹ் நாடினால்)
கல்வி அறிவை வளர்த்து கொண்டு, அறிவார்ந்த வகையின் சிந்தித்தால் எதையும் வெற்றி கொள்ளலாம் என்பதற்க்கு குர்ஆனில் கூறப்பட்ட தாவுத் (அலை) அவர்களின் வரலாறு ஒரு சான்று
ஆக்கம் : S. சித்தீக் M.Tech
 மாற்றியுள்ளன. அல்லாஹ் வழங்கிய அறிவின் மூலம் தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகள், மிக பெரும் சாம்ராஜியத்தை நிறுவ அவருக்கு உதவியது.

2 comments:

Dr.Anburaj said...

ஒரெ நேரத்தில் ஒரு இடத்தில் அன்பனும் மகனும் நபியாம் ? இதை நாங்கள் நம்ப வேண்டமா ?

Dr.Anburaj said...

திருத்தம்-

அப்பனும் மகனும் நபிஎன்றால் எப்படி நம்புவது ?