Followers

Tuesday, May 05, 2020

சாராய கடை திறப்பை தீவிரமாக எதிர்ப்போம்!

சாராய கடை திறப்பை தீவிரமாக எதிர்ப்போம்!
மக்கள் யாரும் மிக்ஸி கிரைண்டர் என்று இலவசம் கேட்கவில்லை. சேமிக்க தெரியாமல் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு நிதிப் பற்றாக் குறையை காரணம் காட்டி அரசு திரும்பவும் சாரயக்கடை திறக்க முயற்சிக்கிறது. இதனை சாதி மதம் பாராமல் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்போம்.
சாராயக் கடை நடத்தித்தான் ஆட்சி செய்ய முடியும் என்றால் அந்த கையாலாகாத ஆட்சியே எங்களுக்கு தேவையில்லை. மக்கள் ஒருமித்த குரலில் போராடினால் வெற்றி நிச்சயம். 40 நாட்கள் சாராயம் இலலாமல் பழகி விட்ட சாமானயனை மீண்டும் படுகுழியில் தள்ள எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
----------------------------------------
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை நிரம்ப மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு தம் அருகிலிருந்த ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர், "அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள்.
உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது வழிந்தோடிப் போனது.
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3220



3 comments:

Dr.Anburaj said...

கடை விரித்தேன் .கொள்வாரில்லை.கட்டிவிட்டேன்.

வாங்குபவர்கள் இல்லையென்றால் சாராயக் கடைகள் தானாகவே புட்டப்பட்டு விடும். இன்றைய சுழ்நிலையில் அதுதான் சாத்தியம்.

முஸ்லீம்களில் மது அருந்துபவர்கள் மிகவும் கொஞசம்.மேலும் ஜமாத்துக்கு , ஊருக்கு பயந்து சற்று அடக்கி வாசிப்பார்கள்.

பாவம் 100 ஆண்டுகாலமுகலாய படையெடுப்பினால் குறுநில மன்னர்களின் தீரா சணடையால்
சரியான ஒரு சமுக சிந்தனை வளராமல் போதது.விளைவு இந்துக்கள் சமூகம் மட்டும் 23ம் புலிகேசிகள் நிறைந்த சமூகமாக உள்ளது.ஆகவே சினிமா தியேட்டர்களில் கூட்டமோ கூட்டம். சாராயக் கடைகளில் கூட்டமோ கூட்டம்.மனித வளம் பாழாகின்றது. ஆட்சியாளர்கள் தவறான பாதையில் வண்டியை ஓட்டி விட்டார்கள்.அதிக தூரம் பயணித்து வந்து விட்டோம். எப்படி சரியான பாதைக்கு திரும்புவது ????

முதறிஞா் ராஜாஜி கள்ளுகடையை திறக்க வேண்டாம் என்று கலைஞா் கருணாநிதியை கைபிடித்து கெஞ்சிக் கேட்டாா். தனக்கு போட்டியாக எந்த தமி்ழனும் வரக் கூடாது என்று தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறந்து தமிழா்களை குடிகாரன் ஆக்கினாா்.
மத்திய அரசும் மது குறித்து உறுதியான கொள்கையை வைத்திருக்கவில்லை. கேரளாக்காரன் பாண்டிச்சேரிக்காரன் கா்நாடாகக் காரன் குடிக்கிறான். அரசுக்கு வருமானம்.தமிழன் மடடும் என்னகொம்பா ? என்று வருமானத்தை மட்டும் நினைத்து சமூகத்தை பாழாக்கியது.

அரசு தனதுமேல் இருக்கும் பல சுமைகளை இறக்கி விட்டால் ஊழல் ஒழிந்து விடும். போக்குவரத்து துறையில் 60% தனியாருக்கு கொடுத்து விடலாம். பால் வியாபாரம் தனியார் வசம் கொடுத்து விடலாம். இப்படி அரசு ஏராளமாகசுமைகளை சுமந்து கடன் வாங்கி ஊழல் செய்து சட்டம்னறஉறுப்பினா்கள் மந்திரிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்ள - நியமனத்தில் ஊழல், டிரான்பா்(transfer) யில் கமிஷன் சாமான்கள் கொள்முதலில் ஊழல் கமிஷன் -ரோடு போட்டா கொள்ளை - கட்டடங்கள் கட்டினால் கொள்ளை.

இந்து சமய அறநிலையத்துறையில் அறம் என்பது அணுளவும் கிடையாது.கமிஷன் லஞசம் என்று மனம் பாழாய் போய்கிடக்கின்றது.மலர்கள் வாங்கினால் கமிஷ்ன...எதற்கெடுத்தாலும் கமிஷன் கள்ள பில்கள் - அரசு நிா்வாகம்தான் காரணம். தனியாருக்கு கொடுத்து விடலாம்.சம்பளப்பணச் செலவு பாதிக்கு மேல் குறைந்து விடும். மந்திரிகள் தங்களுக்கு கிடைக்கும் பண வரவுகளுக்காகவே பல துறைகளை அரசு சுமக்கின்றது.

Dr.Anburaj said...

தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலில் ஜம்பொன்னால் ஆன 3 சிலைகள் காலப்போக்கில் பழுதாகிவிட்டது என்றும் ( ஸ்ரீநாராயணகுரு வழியில் சிலை வழிபாட்டை பின்னுக்கு தள்ள வேண்டு்ம்.முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும்.ஆனால் அரசு அதற்கு தயாா் இல்லை ) புதிய 3 சிலைகள் செய்ய வேண்டும் என்றும் அதற்கு 32 கிலோ தங்கம் தேவையென முடிவு செய்து நன்கொடையாளர்களிடம் தங்கம் பெற்று சிலைகள் செய்யப்பட்டது. சிலைகளும் உரிய சடங்கு கள் சில லட்சம் செலவில் செய்து நிறுத்தப்பட்டது. 6 மாதத்தில் சிலைகள் கருத்து விட்டது. ஐம்பொன் சிலைகள் வெள்ளிச்சிலைகள் போல நிரந்தரமாக இருக்கும். பக்கதர்கள் புகாரை அரசு க்ண்டு கொள்ளவில்லை. உயா்நீதி மன்றத்தின் நடவடிக்கையை பக்தர்கள் கோரினார்கள். நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை IIT யைச் சோ்நத விஞ்ஞானிகள் 3 சிலைகளை ஆய்வு செய்ததில் குன்றுமணி அளவு தங்கம் கூட இந்த சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கை அளித்தது. சிற்பி உட்பட பலரும் ஜாமீன் பெற்று நகர்வலம் வருகின்றார்கள். பிரச்சனை அடக்கம் செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கின்றேன்.
பக்கதர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தின் மொத்த எடை எவ்வளவு என்ற கணக்கும் கோவிலில் இல்லை.பயன்படுத்தப்பட்டதாக கணக்கு எழுதிய 32 கிலோ தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.

இந்து சமய ஆட்சி்த்துறை என்ற அமைச்சகம் தேவையா ?சீரதிருத்தமும் செய்யவில்லை.சிந்தனை வளா்ச்சியும் இல்லை. மக்களுக்கு போதிய வாழ்க்கை பயிற்சியும் அளிக்க வகையில்லை.யோகா இசை போன்றவற்றை கற்றுக் கொடுக்க மனம் யில்லை.கள்ளக்கணக்கு எழுதி பணம் களவு செய்ய கிடைத்த இடமாக மந்திரிகள் கருதி இந்து சமய அறநிலையத்துறையை தங்கள் கையில் வைத்துள்ளார்கள்.

Dr.Anburaj said...

முஹம்மது சொல்வதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவா் அழகாக சொல்லிவிட்டாா்.

குறள்:921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
குறள் விளக்கம்:

கள்ளின் மீது விருப்பம் கொண்டு விடாது குடிப்பவர் எக்காலத்தும் பகைவரால் அஞ்சப்படமாட்டார். மேலும், முன் எய்தி நின்ற பெருமையினையும் இழப்பர்.
மேலே செல்ல
குறள்:922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
குறள் விளக்கம்:

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
மேலே செல்ல
குறள்:923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
குறள் விளக்கம்:

பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்?
மேலே செல்ல
குறள்:924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
குறள் விளக்கம்:

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.
மேலே செல்ல
குறள்:925
கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
குறள் விளக்கம்:

விலைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
மேலே செல்ல
குறள்:926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
குறள் விளக்கம்:

உறங்கினவர், இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
மேலே செல்ல
குறள்:927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
குறள் விளக்கம்:

கள்ளை மறைவாகக் குடித்து அறிவு மயங்குபவர் உள்ளூரில் உள்ளவரால் அறிந்து எந்நாளும் சிரிக்கப்படுவர்.
மேலே செல்ல
குறள்:928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
குறள் விளக்கம்:

மறைவில் கள்ளுண்டு ‘கள்ளுண்டறியேன்’ என்று சொல்வதைக் கைவிடுதல் வேண்டும். குடித்ததும் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் குற்றம் வெளிப்பட்டு விடும்.
மேலே செல்ல
குறள்:929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
குறள் விளக்கம்:

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
மேலே செல்ல
குறள்:930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
குறள் விளக்கம்:

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?
--------------------------------------------------------------
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
குறள் விளக்கம்:

உறங்கினவர், இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
---------------------------------------------------------------------------
குடி குடியைக் கெடுக்கும்.குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற வசனத்தை படித்து விட்டுதான் ஒவ்வொருத்தனும் குடிக்கின்றான்.
மக்கள் 23ம் புலிகேசியாக வாழ்ந்து வருகின்றார்கள். விடிவு என்று ???எப்போது ? யாரால் ?