Followers

Sunday, May 03, 2020

அபுதாபி ஸ்டெம் செல் ஆய்வுக்கழகம் (ADSCC),

அபுதாபி ஸ்டெம் செல் ஆய்வுக்கழகம் (ADSCC), கொரோனா வைரஸ் தொடர்பில் உருவாக்கியுள்ள திருப்புமுனை சிகிச்சை தான் மருத்துவ உலகின் இன்றைய ஹாட் டாபிக். தங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையையும் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் ஆய்வாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொரோனா வைரஸ் நுரையீரல் செல்களை தாக்குகிறது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ்சிற்கு எதிராக வீரியமாக செயல்படும் போது காய்ச்சல் போன்ற அறிகுறிக்களை உருவாக்குகிறது. இந்த அறிகுறிகளை (வயது முதிர்ச்சி, சுவாச பிரச்சனைகள் etc போன்ற காரணங்களுக்காக) தாக்கு பிடிக்க முயலாத சூழலில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அபுதபி விஞ்ஞானிகளின் மருத்துவ முறையானது, நோயாளிகளின் இரத்ததில் இருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து, சுவாச உள்ளிழுத்தல் (Mist Inhalation) மூலமாக மறுபடியும் அவற்றை நோயாளிகளின் நுரையீரலுக்கு கொண்டு செல்கின்றனர். இதன் மூலமாக நுரையீரல் செல்கள் மறு உருவாக்கம் பெறுவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடைய வீரியமான செயல்பாட்டை குறைக்கிறது. இதனால் நோயாளிகள் விரைவில் குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இம்முறையை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 73 நோயாளிகளும் பூரண குணமடைந்துள்ள நிலையில் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை. இவர்கள் அனைவரும் தீவிர மற்றும் மிதமான நோய் அறிகுறிகளுக்கு ஆளாகியிருந்தனர்.
வாழ்த்துக்கள் ADSCC.
செய்திக்கான ஆதாரம்: UAE அரசு மற்றும் ADSCC வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் இது தொடர்பிலான ஊடக செய்திகள்.


2 comments:

vara vijay said...

Where is shariah swanapriyan, in your Muslim land how can this gender mixup can happen.

Dr.Anburaj said...

அபுதாபி பணம் கொளுத்த நாடு. அண்மை காலங்களில் உலகம் போல் நாமும் பலதுறைகளில் முன்னேற வேண்டும்.சுயசார்பு வேண்டும்.சாதிக்க வேண்டும் என்ற கருத்து அரபி நாடுகளில் வந்துள்ளது. நல்லதுதான்.
அபுதாபியில் மட்டும் அல்ல உலகமெங்கும் ஸ்டெம் செல் ஆய்வு பிரமாண்டமான அளவில் நடைபெற்று வருகின்றது.
நமது கிராமங்களில் முன்பு தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொள்புள் கொடியை காய்வைத்து ஒரு குழலில் அடைத்து வைப்பார்கள். குழந்தைக்கு காய்ச்சல் .... வந்தால் அதில் ஒரு பகுதியை தூள் செய்து கொடுப்பாரர்கள். வியாதி குணம் பெற்று விடும்.இதுதான் ஸ்டெம் செல்.
வழக்கம்போல் அரேபிய அடிமை அபுதாபிகாரனை பெரிது படுத்தகின்றான்.