Followers

Saturday, May 09, 2020

நேற்று ஒரு அழகிய சந்திப்பு!

நேற்று ஒரு அழகிய சந்திப்பு!
எனது அறைக்கு பக்கத்து அறையில் தங்கியுள்ள எகிப்து நாட்டைச் சேர்ந்த முஸ்தஃபா என்னிடம் 'நஜீர்.... என்னோடு பணி புரியும் ஒரு இந்தியன் நோன்பு வைக்கிறார். சில நேரங்களில் தொழவும் செய்கிறார். ஆனால் அவர் கலிமா சொல்லாமல் இன்று வரை இந்துவாகவே இருக்கிறார். இன்று எனது அறைக்கு அழைத்துள்ளேன். நீயும் இந்தியன் என்பதால் இது பற்றி அந்த நபரிடம் பேச முடியுமா?' என்று கேட்டார்.
நான் அந்த எகிப்தியரிடம் 'நோன்பு திறந்து விட்டு வருகிறேன். அந்த நபரை காத்திருக்கச் சொல்லுங்கள்' என்று சொல்லி விட்டு நோன்பு திறந்து மஹ்ரிப் தொழுகை முடித்தவுடன் எகிப்தியரின் அறைக்குச் சென்றேன். சென்றவுடன் பழங்கள் வெட்டி வைக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறினார். அதன் பிறகு அந்த இந்து நண்பரிடம் நடந்த உரையாடல்.
'இந்தியாவில் நீங்கள் எந்த பகுதி'
'உத்தர பிரதேசம்'
'திருமணமாகி விட்டதா? என்ன வயது?'
'திருமணம் ஆகி விட்டது. வயது 33'
'இஸ்லாமிய நடவடிக்கைகளில் நீங்கள் ஆர்வமாக உள்ளதாக முஸ்தஃபா சொன்னார். இஸ்லாம் பற்றி என்னவெல்லாம் தெரியும்?'
'நான் சவுதி வருவதற்கு முன்பிருந்தே இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக ஓரளவு இஸ்லாம் பற்றி தெரியும். இங்கு சவுதி வந்த நான்கு வருடங்களில் இஸ்லாமிய மார்க்கம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு இறைவனை மட்டுமே வணங்கும் பழக்கம், தொழுகையில் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் தோளோடு தோள் சேர்ந்து இணைந்து நிற்பது, நோன்பு, ஏழைகளை கவனத்தில் கொள்ளுதல், சாதி ஏற்றத்தாழ்வு இல்லாமை இவை எல்லாம் எனக்கு இஸ்லாத்தின் மீது ஈடுபாட்டைக் கொண்டு வந்தது'
'நல்லது.... தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? கலிமா சொல்லத் தயாரா?' என்று கேட்டேன்.
'நான் இப்போது கலிமா சொல்லி மாறி விட்டால் எனது மனைவியோடு சேர்ந்து வாழ முடியாது. மனதளவில் நான் முஸ்லிமாகத்தான் வாழ்ந்து வருகிறேன். எனது மனைவிக்கு இது சம்பந்தமாக கடந்த ஒரு வார காலமாக பேசி வருகிறேன். அவரையும் சம்மதிக்க வைத்து முறையாக என்னை இஸ்லாமியனாக பதிந்து கொள்கிறேன். ஒரு வாரம் டைம் கொடுங்கள்' என்றார்.
'நல்லது. இதற்காக சடங்கு சம்பிரதாயம் எல்லாம் ஒன்றும் இல்லை. இறைவன் ஒருவன்: நபிகள் நாயகம் அந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்பதை உளமாற ஏற்றுக் கொண்டாலே நீங்கள் முஸ்லிமாகி விடுகின்றீர்கள். உங்கள் மனைவியோடு பேசி விட்டு தகவல் சொல்லுங்கள். அதன் பிறகு அழைப்பு வழி காட்டம் மையம் சென்று முறைப்படி உங்களை இஸ்லாமியராக பதிவு செய்து கொள்ளலாம். அது வரை ஏதும் இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். தெரிந்த வரை சொல்கிறேன்' என்றேன்.
'நல்லது பாய்... நான் எனது மனைவியோடு கலந்து கொண்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்' என்றார்.
வந்த வேளை முடிந்தது என்று நான் எழும்பியபோது முஸ்தஃபா என்ற அந்த எகிப்தியர் என்னிடம் 'நஜீர்.... இந்துக்கள் மாட்டை தெய்வமாக பூஜிக்கிறார்களே... அவர்கள் அறிவு எப்படி இதனை ஒத்துக் கொள்கிறது?' என்று கேட்டார்.
அதற்கு நான் 'எனது நாடு முன்பு அறிவார்ந்த சமூகமாகத்தான் இருந்தது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சொல்லாடல் எங்கள் பகுதியில் மிகவும் பிரபல்யம். உங்கள் நாட்டிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டி வந்த யூதர்கள் (தற்போது பார்பனர்கள்) இங்குள்ள மக்களை வெற்றி கொண்டு அவர்களின் நம்பிக்கையையும் எனது நாட்டு மக்களின் மீது திணித்து விட்டனர். நபி மூஸா, ஹாரூன், காளை மாட்டை தெய்வமாக்குதல் அனைத்தும் குர்ஆனில் வருகிறதே?' என்றேன்.
எகிப்திலிருந்துதான் மாட்டை வணங்கும் வழக்கம் இறக்குமதி செய்யப்பட்டது என்ற செய்தி அவருக்கு புதிதாக இருந்தது. இது பற்றி கூகுளில் தேடிப் பார்ப்பதாகச் சொன்னார். எல்லேரிடமும் சலாம் சொல்லி விட்டு எனது அறையை நோக்கி சென்றேன்.
---------------------------------------------------
மூஸா(மோஸே) தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை வணக்கத்திற்காக எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்;
அல் குர்ஆன் 2:54.


3 comments:

Dr.Anburaj said...

முஹம்மது இறைவன் தூதா் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே கலிமா அர்தமற்றதாகி விட்டது.

Dr.Anburaj said...

About 250 Members Of 40 Muslim Families In Haryana’s Hisar District Embraced Hinduism On Friday
அரியானா மாநிலம் ஹிசாா் மாவட்டத்தில் பிட்மிரா கிராமத்தில் 250 முஸ்லீம்கள் அரேபிய அடிமையாக வாழ்வதை வெறுத்து இந்துக்களாக தாய்மதம் திரும்பினார்கள்.
May 9, 2020

HISAR: About 250 members of 40 Muslim families from Bidhmira village in Haryana’s Hisar district embraced Hinduism on Friday and performed the last rites of a 80-yearold woman according to Hindu customs. Earlier, about 35 members of six Muslim families also embraced Hinduism at Jind’sDanoda Kalan village on April 18.
ஏப்பரல் 18 தேிதியன்று ஜின் டனோடா கிராமத்தைச் சோ்ந்த 35 முஸ்லீம்கள் இந்துக்களாக மாறினார்கள்.

Satbir, the new convert, said his mother Phooli Devi died a natural death on Friday and the Muslim families of the village decided that since they lead the Hindu way of life, they should declare themselves to be Hindus and decided to do the cremation as per Hindu rituals. Earlier, the dead were cremated according to Muslim customs, he said.

Satbir claimed that he was from Doom caste and has heard of his Hindu ancestors embracing Muslim under pressure during the time Mughal ruler Aurangzeb. Their entire village celebrates Hindu festivals but the last rites of the dead are done according to Muslim religion, he said. Asked whether there was pressure on them to convert, he denied it, saying no villager had misbehaved with anyone.எங்கள் கிராமத்தில் சமய பாகுபாடு என்றும் இருந்ததில்லை.

Attempts to reach the village sarpanch remained futile as his phone was switched off. However, a village youth, Majid claimed that as earlier the people of his society were not educated, they did not know the old things. “Now many people are educated and they have convinced everyone to do this (change religion),” he said. “It is only when we bury our dead, that the villagers looked at us differently. Therefore, looking at the future of children, we decided to convert,” he said.

Dr.Anburaj said...

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சோர்க்கைக்கு விளம்பரம் வந்து விட்டது. தமிழா மாணவர்கள் நிறைய பேர்களுக்கு அதில் சேர விபரம் தெரியவில்லை. இதை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கவும்.