Followers

Wednesday, May 06, 2020

சீன முஸ்லிம் அடக்குமுறைகள் குறித்து பேசும் போது....

சீன முஸ்லிம் அடக்குமுறைகள் குறித்து பேசும் போது எந்த இனத்தை குறித்து பேசுகிறோம் என்பது முக்கியமானது. சீன முஸ்லிம்களில் இரு இனத்தவர் முக்கியமானவர்கள். உய்குர் மற்றும் ஹுய் இனங்கள் தான் அவை. துருக்கிய பழங்குடியின வழித்தோன்றல்களின் சந்ததிகள் தான் உய்குர் இனத்தவர். அதே நேரம், இஸ்லாமிற்கு மாறிய பூர்வீக சீன மக்கள் ஹுய் இனத்தவர் என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது, சீன பெரும்பான்மை இனமான ஹன் இனத்தவர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினால் அவர்கள் ஹுய் இனத்தவர் என்று அழைக்கப்படுவார்கள்.
சீனாவின் அனைத்து பகுதிகளிலும் ஹுய் முஸ்லிம்களை காணலாம் என்றாலும், மத்திய மற்றும் வடமேற்கு சீனாவில் இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். சீன பெரும்பான்மை மொழியான மான்டரின் தான் இவர்களுக்கும் தாய்மொழி. சீன அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கட்தொகை கொண்டவர்கள் இவர்கள். பிரபல உணவு வீடியோ ப்லாக்கரான ட்ரவர் ஜேம்ஸ், சீனாவின் மிகச் சிறந்த நூடூல்ஸ்கள் ஹுய் மக்களால் தான் தயாரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உய்குர் மக்களை போல சீன அரசின் அடக்குமுறைகளுக்கு ஹுய் இனத்தவர் ஆளாகுவதில்லை. சீன அரசின் ராணுவ அமைச்சர் முதற்கொண்டு பல்வேறு அரசப்பதவிகளை ஹுய் முஸ்லிம்கள் அலங்கரித்திருக்கிறனர். உய்குர்கள் மீதான சீன அரசின் பிரச்சனையானது, தங்கள் ஆட்சி அதிகாரத்தை உய்குர்கள் ஏற்கவில்லை என்பதே. இனத்தாலும், மொழியாலும் சீனர்களிடம் இருந்து வேறுபட்டிருக்கும் உய்குர் மக்கள் சீன அரசு தங்கள் நிலப்பகுதிகளை (ஜிங்ஜியாங்/கிழக்கு துர்கிஸ்தான்) ஆக்கிரமித்துள்ளதாகவே காலங்காலமாக போராடி வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், சீனாவின் ஐந்தில் ஒரு நிலப்பகுதியை அரசு இழக்க வேண்டிவரும். சீனா நிச்சயமாக இதனை விரும்பவில்லை. அதனாலேயே இவ்வளவு பிரச்சனைகள்.
சீன முஸ்லிம்கள் குறித்து ஆழமாக அறிய விரும்புபவர்கள், என்னுடைய பின்வரும் கட்டுரைகளை படிக்கலாம்.
உய்குர் முஸ்லிம்கள் குறித்து படிக்க: http://www.ethirkkural.com/2011/05/blog-post_16.html?m=1
ஹுய் முஸ்லிம்கள் குறித்து படிக்க: http://www.ethirkkural.com/2011/07/blog-post.html?m=1
சகோ Aashiq Ahamed பதிவிலிருந்து......


1 comment:

Dr.Anburaj said...

எல்லை தாண்டிய விசுவாசம் - அரேபிய அடிமைத்தனம்


தன் நாட்டு மக்களுக்கு இருக்கக் கூடாது என்று உறுதியுடன் இருப்பதற்கு

சீனா அரசுக்கு உரிமை கடமை உண்டு.

கௌதமா் இன்ற சீனாவில் சீனராக மாறி விட்டாா். கௌதனைப் போற்றும் சீனன் இந்திய அடிமையாக மாறவில்லை.மாற மாட்டாா்.சீன மண்ணேடு மண்ணாக பௌத்தம் வேரூன்றி இந்திய தொடர்புகளை விட்டு விட்டது.ஆகவே பௌத்தம் இன்று சீனாவின் தேசிய மதமாக மாறிவிட்டது. இசுலாம் அரேபியமதமாக அந்நிய தேசத்து மதமாகவே உள்ளது. பி்ரச்சனைக்கு காரணம் முஸ்லீம்கள்தாம்.
தாங்கள் இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளீர்கள். பிரச்சனைக்கு காரணம் உய்கா் முஸ்லீம்கள்தாம் என்று ஒப்புக் கொண்டது உண்மை.