Followers

Wednesday, May 20, 2020

லெபனான் நாட்டுசட்டக்கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

லண்டன் பிளேக்பர்னில், லெபனான் நாட்டுசட்டக்கல்லூரி மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவீதிக்கு வந்து சாதனம் வாங்கவந்த பெண்ணை, மதவெறி பிடித்த வெள்ளை தீவிரவாதி சுட்டுக்கொன்றான். தலையில் ஹிஜாப் அணிந்துவந்ததை கேவலப்படுத்தி சுட்டுள்ளான். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Muslim woman killed and mainstream media is not reporting this #RIP #AYA
Aya Hachem, a 19-year-old #Muslim woman, was shot in a ‘senseless’ shooting while grocery shopping in #Blackburn, United Kingdom. This is an alleged hate crime committed by a #white man, and media is not reporting this incident as such. Bring justice to Aya, her family, and loved ones. Inna lillahi wa inna ilayhi rajioon.
#muslim #ramadan #ISLAMAPHOB
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்.
-------------------------------
நபி மொழிகளில் பெண் மக்களின் சிறப்பு:
ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள்,அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக ‘அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.’
(ஆதாரம் முஸ்லிம்)
நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’
(அறிவிப்பவர் அனஸ் (ரழி), ஆதார நூல்: முஸ்லிம்).
‘எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்’ என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி). ஆதாரம் இப்னு மாஜாஹ்).
‘எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’.
(அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்மிதீ).


No comments: